Author Topic: ~ தக்காளி சிக்கன் கிரேவி.. ~  (Read 121 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218418
  • Total likes: 23086
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தக்காளி சிக்கன் கிரேவி..



தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
தயிர் – 1 கப்
தக்காளி – 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)

செய்முறை:

முதலில சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் கசகசா மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
பின் சிக்கன் துண்டுகளைப் போட்டு, 6-7 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு சீரகப் பொடி, மல்லி தூள், மிளகு தூள், சர்க்கரை மற்றும் அரைத்து வைத்திருக்கும் கசகசா பேஸ்ட் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, தண்ணீரை ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு, இறக்கி கொத்தமல்லியை தூவினால், அருமையான சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.