ஒரு நிறுவனத்தில் அதன் பணியாளர்களின் ஒரு சில தவறால் அந்த நிறுவனத்துக்கு 50 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவில் போய் அமர்ந்தார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்
. அப்போது சற்று வயதான ஒருவர் உரிமையாளர் அருகி வந்தமர்ந்தார்.
இவரின் சோகம் கண்டு விசாரித்தார்.
அனைத்தும் கேட்ட பின் "50 கோடி பணம் இருந்தால் உனது பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு விட்டு அவர் சொன்ன பெயர், அந்த ஊரில் பெரும் செல்வந்தர் ஒருவரின் பெயர். அசந்து போனார் இவர்.
இவரின் முக மலர்ச்சியை சம்மதம் என எடுத்துக் கொண்ட பெரியவர், செக் புத்தகத்தை எடுத்து எழுதி கையெழுத்திட்டு இவரிடம் நீட்டினார். "இந்தா இதில் 500 கோடி இருக்கிறது. நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாக தந்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இதே நாளில் இந்த பணத்தை நீ எனக்கு திருப்பித் தர வேண்டும. உனக்காக இதே பூங்காவில் காத்திருப்பேன்". செக்கை இவர் கையில் திணித்து விட்டு சென்று விட்டார்.
நிறுவன உரிமையாளர் வேகமாக நிறுவனம் சென்றார். செக்கை பிரோவில் பத்திரமாக வைத்துப் பூட்டினார். பின உழியர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்துக்கு 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் என்னிடம் இப்போது 500 கோடி இருக்கிறது. ஆனால் அந்தப் பணத்தை நான் தொடப்போவதில்லை. இந்த நஷ்டம் எதனால் எப்படி ஏற்பட்டது? என்று ஆராய்ந்து நமது நஷ்டத்தை நாமே சரி செய்ய வேண்டும். நமது நிறுவனத்தை வெற்றிப் பாதையில் திருப்ப நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்". என்று கேட்டுக் கொண்டார்.
பணிகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன.உரிமையாளறதும் தொழிலாளர்களதும் ஓயாத உழைப்பால் நிறுவனம் லாபத்து பாதையில் திரும்பியது.
ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. நிறுவனம் 150 கோடி லாபம் ஈட்டி இருந்தது. அடுத்த நாள் விடிந்ததும் செல்வந்தர் கொடுத்த 500 கோடி செக்கை எடுத்துக் கொண்டு பூங்காவனம் சென்றார். அங்கே அந்தப் பெரியவர் ஒரு பெண்மணியுடன் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் அந்த செல்வந்தருடன் கோபமாகப் பேசிகொண்டிருந்தாள்.
உரிமையாளர் அவர்கள் பக்கம் சென்றார்.
"பத்து வருசமா பணமே இல்லாத செக் புத்தகத்தை கிழிச்சி கிழிச்சி கொடுக்கிறதை வேலையா வச்சிக்கிட்டு பலரை ஏமாத்துறிங்க. தொழில் நஷ்டம் ஏற்பட்டு நீங்க பைத்தியம் ஆனது தெரியாம அவங்களும் வாங்கிக்கிட்டு போறாங்க . இதை எல்லாம் எப்போ தான் நிறுத்துவீங்க்களோ" என்று திட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அந்தப் பெரியவர் புன்னைகையோடு செக்கில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.
நிறுவன உரிமையாளர் திக்பிரமை பிடித்து நின்றார். அப்படியானால் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தான் என்னைக் காப்பாட்டியதா?
உண்மை புரிந்து அங்கிருந்து நகர்ந்தார் உரிமையாளர்.