Author Topic: மனசு  (Read 220 times)

Offline thamilan

மனசு
« on: September 24, 2016, 09:24:08 PM »
கலங்கிக் கலங்கித் தெளியும் குட்டை
கல்லெறிந்தாலும் எறியாவிட்டாலும்
சில நேரம்

மரத்துக்கு மரம் தாவும்
எதிலும் திருப்தி இல்லாமல்
பல்லிளிக்கும் பல சமயம்
மந்தியாய்..........

புண்ணை சொரிந்தது சொரிந்து
புரையோட வைத்து சாகடிக்கும்..........

வண்ண வண்ணமாய்
கோர்த்த அழகு
மலர்களின் ம(ன) ணமுணராமல்
இதழ்களை குதறி
பிய்த்து பிய்த்து ரசிக்கும்
குரங்கு..........

எப்போதும் எதற்காவது
யாரையாவது பாய்ந்து கடித்துத் குதறும்
ஓநாய்..............


Offline SweeTie

Re: மனசு
« Reply #1 on: September 29, 2016, 06:29:01 AM »
இது உங்க மனசுக்குத்தான்  சொன்னீங்களா  இல்லை யாரையாவது திட்டி  தீர்த்துட்டிடீங்களா?   எனக்கு  இரண்டாவது  போலத்தான்  தெரியுது.   மனம் ஒரு குரங்கு  என்று சும்மாவா சொன்னார்கள்?    வாழ்த்துக்கள்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5185
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மனசு
« Reply #2 on: September 30, 2016, 03:29:13 PM »

அருமை சகோ !!!!
வாழ்த்துக்கள் ......!!!!!

~!! ரித்திகா !!~


Offline thamilan

Re: மனசு
« Reply #3 on: September 30, 2016, 05:13:53 PM »
நன்றி
ஸ்வீட்டி & ரித்திகா