Author Topic: ~ சுகப் பிரசவ சுக மந்திரம் ~  (Read 251 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுகப் பிரசவ சுக மந்திரம்



தாய்மை என்பது எழுத்துக்களால் விவரிக்க இயலாத ஒரு சொர்க்கம். பெண்ணாய் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் தாய்மை அடையும் பொழுது முழுமை அடைகின்றது. தாய்மையின் திறவு கோல் பிரசவம் ஆகும். பிரசவம் என்பது விவரிக்க இயலாத வலியுடன் காணக்கிடைக்காத பரிசை ஒரு பெண்ணிற்கு தரும் அற்புத தருணம் ஆகும்.
அதுவும் ஒரு குழந்தையை எதிர்பார்த்து கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலியைப் பற்றிய சிந்தனை நிச்சயம் அடிக்கடி வந்து போகும். நம்முடைய மூதாதையர்கள் பிரசவம் ஒரு மறு பிறப்பு எனத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் பிரசவத்துடன் இணைந்து வரும் வலி ஆயிரம் தேள்கள் ஒரு சேரக் கொட்டியது போன்றது.
அதுவும் முதல் முறை பிரசவிக்க காத்திருக்கும் ஒரு பெண் கட்டாயம் பிரசவ வலியை நினைத்து தன்னுடைய தூக்கத்தை நிச்சயம் தொலைத்திருப்பாள். எனவே பிரசவ வலிக்கு பயந்து பல பெண்கள் தற்பொழுது சிசரியேனுக்கு ஆசைப்படுகின்றார்கள். சுகப் பிரசவமோ அல்லது சிசரியனோ எதுவாகினும் ஒரு நல்ல பிரசவத்திற்கு சில குறிப்புகள் துணைபுரிகின்றன.

ஒரு பெண்ணிற்கு சுகப் பிரசவம் நேரிடுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதை எளிதாக கணிக்கக்கூடிய நடைமுறை வழக்கில் இல்லை. எனினும் உங்களுக்கு சுகபிரசவத்தை ஊக்குவிக்கக்கூடிய சில நடைமுறைப் பழக்க வழக்கங்கள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புகளை தொடர்ந்து படியுங்கள்.
1. எப்பொழுதும் மன அழுத்தத்தற்கு ஆட்படாதீர்கள். சுகப்பிரசவத்திற்கு உதவும் மிக எளிய நடைமுறை என்பது நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பது மட்டுமே. ஒரு பொழுதும் மன அழுத்தத்தை உங்களிடம் அண்ட விடாதீர்கள். உங்களின் கர்ப்ப காலம் என்பது வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மற்றும் நீங்கள் இந்த காலத்தில் எந்த ஒரு மன அழுத்தத்திற்கும் ஆட்படக்கூடாது.
கர்பகாலத்தில் மன அழுத்தத்திற்கு உட்படும் ஒரு பெண் தன்னுடைய உடல்நிலையை கெடுத்துக் கொள்வதுடன் தன் வயிற்றில் வளரும் சிசுவின் நலத்திற்கும் ஆபத்தை உருவாக்குகின்றார். ஒரு வித காரணமும் இல்லாமல் நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானால், நீங்கள் தயவு செய்து ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும். அவரால் மட்டுமே இந்த நடத்தைக்கு பின்னால் உள்ள சரியான காரணத்தை கண்டறிய முடியும்.
2. வழக்கமான மற்றும் எளிய உடற்பயிற்சி. கர்ப காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் லேசான மற்றும் எளிய உடற்பயிற்சியானது உங்களின் சுகப்பிரசவத்திற்கு உதவ முடியும். கர்ப்ப காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் லேசான உடற்பயிற்சிகள், உங்களின் ஆற்றலை அதிகரிக்கும், மற்றும் அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வலுவான தொடை தசைகள் பிரசவ வலியின் பொழுது ஏற்படும் மன அழுத்தத்திற்கு எதிராக போரிட உங்களுக்கு உதவுகின்றது. ஒரு ஆழமான எளிய உடற்பயிற்சி, நீர்வாழ் கர்ப்பகால பயிற்சிகள், போன்ற பயிற்சிகள், உங்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனினும் இந்த உடற்பயிற்சிகள் ஒரு நிபுணரின் நேரிடி கண்காணிப்பில் மட்டுமே செய்யவேண்டும். அவ்வாறு இல்லை எனில் அது உங்களுக்கு தீங்கு செய்வதுடன் உங்களின் சிசுவிற்கும் தீங்கு விளைவிக்கும்.
3. கர்பகால உணவுகள். கர்பகால உணவுகள் மிகவும் முக்கியமானது. ஏனெனில் கர்பகாலத்தில் நீங்கள் உட்கொள்ளும் உணவானது உங்கள் மற்றும் உங்களுடைய சிசுவின் உடல் நலனுடன் நேரிடையாக சம்பந்தப்படுகின்றது. நீங்கள் உட்கொள்ளும் உணவின் மூலமே உங்களின் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் உங்களின் சிசுவிற்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றது.
சத்தான உணவின் மூலமே ஒரு தாய்க்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கும். நல்ல ஆரோக்கியமான தாயினால் மட்டுமே பிரவவ வலியை எதிர்கொள்ள இயலும். மேலும் ஆரோக்கியமான உணவுகள் சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்கும். நீங்கள் உங்கள் உடலுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள் மற்றும் புரதங்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி நீர் அருந்தி உங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. தண்ணீரை அதிகமாக பயன்படுத்துங்கள். தண்ணீரானது பிரசவ வலியைக் குறைக்கும் ஒரு அரு மருந்தாகும். தண்ணீரானது பிரசவ வலியை குறைப்பதுடன் சுகப்பிரசவத்திற்கும் உதவுகின்றது. நீங்கள் சூடான தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி, அதனுள் எவ்வுளவு நேரம் செலவளிக்க இயலுமோ, அவ்வுளவு நேரம் செலவிடுங்கள்.
சுடு நீர் பிரசவ வலியை எளிதாக சமாளிக்க உதவுகின்றது, மற்றும் தண்ணீரானது சுகப்பிரசவத்திற்கும் உதவுகின்றது. இதை விட , நீங்கள் அதிகமான குடிநீர் குடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
5. சுவாசப் பயிற்சி. சுவாசப்பயிற்சியானது வலி இல்லாத சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் உடற்பயிற்சிகளில் மிக முக்கியமானதாகும். முறையான, மற்றும் போதுமான அளவிலான ஆக்சிஜன், குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும், எனவே சரியான மற்றும் பொருத்தமான மூச்சுப்பயிற்சியானது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும். பிற உடற்பயிற்சிகளில் கவனம் செழுத்துவதுடன் நீங்கள் கண்டிப்பாக மூச்சுப்பயிற்சியில் கவனம் செழுத்த வேண்டும்.
6.மோசமான கர்பகால கதைகளிடம் கவனம். திகில் நிறைந்த மற்றும் சோகமான கர்பகால கதைகளுக்கு தயவு செய்து காதுகொடுக்காதீர்கள். அது உங்களிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி உங்களின் கர்பத்தை கண்டிப்பாக பாதிக்கும்.
உங்களிடம் வருத்தத்தை தூண்டி அல்லது தேவையற்ற தருணங்களை நோக்கி உங்களின் கவனத்தை கவர முயலும் மக்களிடம் சற்று விலகி இருங்கள். உங்களின் பொன்னான நேரத்தை நல்ல கதைகளை படிக்க பயன்படுத்துங்கள்.
7. பேச்சே உங்களின் துணைவன். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம் விட்டு நல்ல விஷயங்களைப் பேசுங்கள். உங்களை வெளிப்படுத்தும் உங்களின் பேச்சு மட்டுமே உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். பிறருடன் மனம் விட்டு நீங்கள் பேசும் விஷயங்கள் உங்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் அவர்களுடன் உங்களின் அனுபவத்தை பகிர்ந்து அவர்களுக்கு உதவ முடியும். எப்பொழுதும் சும்மா இருப்பது உங்கள் சுகாதாரத்தை பாதிக்கும் ஒரு ஆரோக்கியமற்ற செயல் ஆகும். இதன் மூலம் உங்களிடம் எதிர்மறை உணர்வுகள் தூண்டப்படலாம்.
8. மது மற்றும் தேநீர் நுகர்வை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் கர்பம் தரித்திருக்கும் பொழுது உங்களின் மது மற்றும் டீ அல்லது காபி நுகர்வுகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிகமான காஃபின் குறைந்த பிறப்பு எடை, வளர்ச்சி மந்தம், மற்றும் கருச்சிதைவு, போன்றவற்றிற்கு சில நேரங்களில் காரணமாகலாம்.
துரித உணவு வகைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெளியே தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.