வர்ணம் தீட்டப்படாத பழைய வீடு
உடைந்து சீராக்கப்படாத சுவருள்ள வீடு............
முற்காலத்தைக்காட்டும் மின்வசறி
முற்காலத்தைக்காட்டும் வடிவம்
முன்முத்தமுமுள்ள மொத்த அம்சமும்
மிடுக்கான தோற்றமுமுள்ள முற்காலவீடு..........
தொலைக்காட்சி சின்னத்திரையில்
அடிக்கடி மிளிர்ந்தவர்களா?...............................
தொலைதூரமாக பயணிக்கையில்
உல்லாசமாக மிளிர்ந்தவர்களா.?........................
பலவாறு இக்காட்சியை காணுகையில்
கூட்டுக்குடும்பமாக மிளிர்ந்தவர்களே
யென ஏன் காணக்கூடாதோ?.............................
தாய், தந்தை, அண்ணன், தம்பி,
அக்கா, தங்கை, பேரன், பேத்தி...
ரத்த சம்பந்தமான உறவு
இவர்களிடையே பாசப் பிணைப்பு
இயற்கையாக அமைந்தும்
இது சாத்தியமாகுமா?........................................
கூடிவாழ்தலால் விட்டுக்கொடுத்தல்,
சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை
இவைகளெல்லாம் இல்லாமல்
அந்தஸ்து, வேலை, பொருளாதாரம்,
உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம்
இவைகளால் சிக்கல்கள் வரும் போது
இது சாத்தியமாகுமா?........................................
சிறப்பான கூட்டுக்குடும்பம் ஏதென்றால்
அனைவரும் தனக்குண்டானவற்றை
யெல்லாம் விற்று கூடி வாழ்ந்தார்கள்..................
இறைப்பணி செய்யவும் செய்வதில்
செத்து மடியவும் தயாரானார்கள் .......................
ஒருவனும் தனக்கென்று எதனையும்
வைக்கவுமில்லை சொல்லவுமில்லை ..................
யாவரும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள்
இறை அடையாளங்களோடு அவர்கட்குள்
இறையும் இருக்கிறேன் என்று வெளிப்பட்டார்.....
இங்கு மட்டுமல்ல உலகெங்கும் பரவியது
இது சாத்தியமாகுமா?........................................
சிறப்பான கூட்டுக்குடும்பம் ஒன்றுண்டு .............
கூடாரவாசியான யாம் தனிமையில் இருந்தாலும்
வீடென்றும் காடென்றும் சேர்க்கிறோம்
யாரதைவாரி்க்கொள்வாரென்று அறியாமலே .....
கைவேலையல்லாத நித்திய வீட்டிலே
இது சாத்தியமாகுமா?........................................
சாத்தியமாகுமே................................................
வாழ்க வளமுடன்.............................................,.