Author Topic: நடந்திடுமா காதலியே ???  (Read 792 times)

Offline RemO

நடந்திடுமா காதலியே ???
« on: February 24, 2012, 08:51:02 PM »
வேண்டாம் வேண்டாம் என்று
விரல் வழியே நீ கொஞ்ச

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று வார்த்தைகளால் நான் கெஞ்ச

இறுதியாக கடைசி உருண்டை சாப்பாட்டையும்
இனிதே உனக்கு நான் ஊட்டிவிடல் வேண்டும்

நீ குளித்து முடித்ததும்
உன் கார்கூந்தல் காட்டிற்கு

ரப்பர் பேன்ட் என் கைகளால் நான்
இட வேண்டும்

அழகிய உன் விழிகளுக்கு
பார்வையாய் நான் மாற வேண்டும்

நம் காதலின் ஆழம் கண்டு
கட்டில்கள் முதல் கதவுகள் வரை

நாணி கவிகள் தினம்
புனைய வேண்டும்

சில சமயங்களில்
நம் அறை மட்டுமன்றி

குளியறையும் சமையலறையும்
தன் செயல்பாட்டை மறந்து

நமக்காய் வெட்கப்பட்டு
விழிகளை மூட வேண்டும்

போய் வருகிறேன் என்று நான் சொல்லும்போது
போகனுமா என்று நீ விழிகளால் கேட்க வேண்டும்

என் இரும்புக் கரங்கள் உன் கரும்பு
இதழ் கண்டு இளகிட வேண்டும்

தினமும் உன்னை உப்பு மூட்டை சுமக்கவேண்டும்
நீ திட்டும் போது நான் உப்பில்லாதவனாய்
நிற்க வேண்டும்

ஒரு நொடி சண்டை வேண்டும்
மறு நொடி சமாதானம் வேண்டும்

உன்னுடன் நான் இருக்கும் நாளெல்லாம்
நான் அலுவலகம் செல்லாது இருக்கும்
ஞாயிற்றுக் கிழமையாய் ஆக வேண்டும்

என் காலை சாப்பாட்டிற்கு
நெற்றியில் ஒரு முத்தமும்

மதிய உணவிற்கு
கன்னத்தில் ஒரு முத்தமும்

இரவு உணவிற்கு
இதழ்களில் ஒரு முத்தமும்

நித்தம் நீ தர
நான் பெற வேண்டும்

சட்டைகள் அணிவது முதல்
சாமிக்கு சரணங்கள் சொல்லுவது வரை

சண்டைகள் பல நம்மில்
தினமும் வர வேண்டும்

இது அனைத்தும்
பசியால் அழும் பச்சிளம் குழந்தை

பால் தரும் அன்னையைக் கண்டது போல்
பட்டென நம்மில் மறைய வேண்டும் .


இதெல்லாம் நடந்திடுமா?


காதலியே ...........



Naan Rasithathu
« Last Edit: February 24, 2012, 08:52:48 PM by RemO »

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #1 on: February 25, 2012, 01:55:19 AM »
romba nala kavithai remo kaathalodu vazha pogum vazhvai evlo azhaga sola vera varthaiye illai rombaaa arumaiyanathu

ஒரு நொடி சண்டை வேண்டும்
மறு நொடி சமாதானம் வேண்டும்


itha varigal migavum enaku pidithathu

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #2 on: February 25, 2012, 02:49:26 AM »
thanks datchu
ithula iruka ela vaigalum enaku pidichuruku
epadilam nan irukanum nu nenaikurano apdi iruku

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #3 on: February 25, 2012, 03:51:03 AM »
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் .......
ஆனாலும் கவிதை விரசம் தொனித்தாலும் ... விரும்ப கூடிய கவிதைதான்
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #4 on: February 25, 2012, 12:37:30 PM »
kavithai padika endru ninaithen
athu pidikavum ena ninaivu paduthum varigal remo
mannikavum remo
aanal paaratu ezhuthiyarai saarum
antha ezhuthiya nanbarai arimuga padutha munaiyungal allathu avarin ezhuthuakaluku avar peyar punainthidungal remo

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline RemO

Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #5 on: February 25, 2012, 12:58:28 PM »
Angel virasama :S enaku ethum apadi theriyalaye

Suthar kandipa avara inga arimuga padutha muyachikiren


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #6 on: February 25, 2012, 03:32:26 PM »
nalla padichi purinchaa therium poda dei  :D
                    

Offline RemO

Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #7 on: February 25, 2012, 11:03:57 PM »
Elam parkura parvaila iruku di.

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #8 on: February 26, 2012, 12:30:51 AM »
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் .......
ஆனாலும் கவிதை விரசம் தொனித்தாலும் ... விரும்ப கூடிய கவிதைதான்

Kanavu kanugal nu abdul kalam soli irukar di kanavu kandipa oru naal ninaivagumdi

virasatha virasama partha than thapu athaye nala vishayama rasanaiyoda parkalam thane


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #9 on: February 26, 2012, 01:21:41 AM »
unmai than datchu nanum athai than soluren
:D ne enai mariye yosikura datchu

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #10 on: February 26, 2012, 02:50:42 AM »
naa athathane solli iruken  ... virasam thonichaalum  virumba koodiyaa kavithainu  :)  thappa paakurathu nengathan naa illa eni un kavithaikum naa riply panna porathila...
                    

Offline RemO

Re: நடந்திடுமா காதலியே ???
« Reply #11 on: February 26, 2012, 10:34:25 AM »
:D ithu enoda kavithai ila nan sutathu than :D