Author Topic: உண்ணும் உணவை  (Read 405 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உண்ணும் உணவை
« on: March 08, 2012, 06:32:18 AM »
நாம் உண்ணும் உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், அப்பொழுதுதான் அந்த உணவின் பலன் அனைத்தும் உடம்பிற்கு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவை வாய்க்குள் அள்ளி எறிந்துவிட்டு செல்வது ஆபத்தானது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் நின்ற கோலத்தில் உணவை அள்ளி திணித்துவிட்டு ஓடுவர் பலர். காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை இதே நிலைதான். ஒரு சிலர் உண்ணும் உணவு கடமைக்காக மட்டுமேதான் இருக்குமே தவிர உணவின் தன்மை, ருசி பற்றி உணர்வதில்லை. இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உண்ணும் உணவை டென்சன் இல்லாமல் மெதுவாக சாப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு உண்ணும் பழக்கத்திற்கும், உடல் எடைக்கும் உள்ள தொடர்பு குறித்து சமீபத்தில் 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் அமெரிக்கா நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.

நேரம் தவறக்கூடாது

எந்த பணி செய்பவர்களாக இருந்தாலும் உண்பதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. உணவு உண்ணும் போது அதிலும், நம் கோபதாபங்களை எல்லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம்மிடம் எழும் அந்த உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டென்சன் கூடாது

விருந்துகளில் சிலர், வேகமாகவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆன்டி ஆக்ஸிடெண்ட்

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது. அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும் என்றும் ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்