Author Topic: மனப்பறவை  (Read 1147 times)

Offline Sun FloweR

மனப்பறவை
« on: December 16, 2022, 11:08:31 PM »
மனப்பறவை

வலிக்க வலிக்க
வேதனையின் நீட்சியில்
சிறகை அடித்து
பறந்து கொண்டே
இருக்கின்றது. .

இளைப்பாற இடமுமின்றி
களைப்பாற மனமுமின்றி
தன் இறகுகள் துவள
சுற்றிக் கொண்டே
இருக்கின்றது. .

தன் இலக்கினை
நிர்ணயிக்கத் தெரியாது
நிர்ணயித்த பாதையிலும்
செல்ல முடியாது
கண்ணீர் சிந்தியபடி
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றது. .

வெறுமை ததும்பும் வானமும்
ஆறுதலற்ற தனிமையும்
உடன்வர தன் ஒவ்வொரு
சிறகாய் உதிர்த்தபடி
அலைந்து கொண்டே
இருக்கின்றது
தன்னைத் தொலைத்த
மனப்பறவை ஒன்று....!

Offline KS Saravanan

Re: மனப்பறவை
« Reply #1 on: December 19, 2022, 02:55:36 PM »
காலம் தரும் மாற்றம்..!

தன்னை தொலைத்த மனப்பறவைக்கு மருந்தாக
மாற்றொமொரு மனப்பறவை நட்பாக..!

அதன் வலிகளையும் வேதனைகளையும்
ஏற்றிலே ஏற்ற முடியவில்லை..!

இளைப்பாற இடமுமுண்டு
களைப்பாற நேரமுமுண்டு
ஆனால் தனிமையில் எல்லாம் நரகமே..!

வாழ்வில் ஏங்கி போன பறவைக்கு
எட்டுத்திக்கும் எட்டாக்கனியாக இருக்க ..!

மனப்பறவையின் சிந்திய கண்ணீரும்
ஒடிந்த சிறகை கண்டு
அதை நோக்கி பயணம்..!

தன்னைபோல் இருப்பதினால் எளிதில்
நட்புகொண்டு ஆறுதல் தரும் வார்த்தைகளை
அதற்கான மருந்தாக தருகின்றது..!

நட்பில் காலம் தரும் மாற்றத்தினால் 
மனப்பறவைக்கும் புதிய பாதை பிறந்தது..!