Author Topic: பெண்ணுரிமை..  (Read 196 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 181
  • Total likes: 552
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
பெண்ணுரிமை..
« on: November 24, 2023, 01:56:33 PM »
காணுகின்ற யாவையுமே
கண்ணியம் தான் செய்திடுவான்
கண்ணினிக்கும் இயற்கையுமே
பெண்ணெனவே தொழுதிடுவான்

அத்தனையும் சக்தியென
சத்தமிட்டு பெண்மையினை
தொன்றுதொட்டு கூறி வரும்
ஒரு இனமே தமிழினமாம்

சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
என்றுறைக்கும் தமிழனுக்கு
உள்ளதொரு நல்லொழுக்கம்

இன்று அது கொஞ்சமென
மாறியது நஞ்செனவே
பெண்ணடிமை பேசுகிறார்
தமிழினிக்கும் நாவினிலே

தனை ஈன்ற தாயுமொரு
பெண்னெனவே புரியாமல்
பெண்ணுரிமை பேசிடுவோர்
மீது பகை வீசுகிறார்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று சொல்லி
அகம்பாவம் கொண்டே பெண்
உரிமைகளை முடக்குகிறார்

அச்சம் மடம் என்றெல்லாம்
அடுக்கடுக்காய் வார்த்தை சொல்லி
அடக்கிடவே முயலுகிறோம்
அற்புத பெண்ணினத்தை

கற்பெண்ணும்மொரு சொல்லை
காரணமாய் கொண்டேதான்
கலிகால தமிழர்களும்
பெண்ணுரிமை மீறுகிரார்

கற்பெண்ணும் ஒரு உணர்வு
பெண்மைக்கு மட்டுமல்ல
அர்ப்பமாய் பிறந்திட்ட
ஆணுக்கும் உள்ளதடா

கற்பிங்கு யாவருக்கும்
உடலிலே இல்லையடா
கண்ணியத்தை பேணுகிற
உள்ளத்தில் தான் உள்ளதடா

சொற்பமாய் நாம் வாழும்
சில காலம் எல்லாமே
கர்ப்பத்தில் நமை காத்த
பெண்ணை நாம் காப்போமே

பெண்ணடிமை எண்ணமதை
அகத்திலுலே ஏற்றாமல்
மண் மீது எந்நாளும்
பெண்ணுரிமை காத்திடுவோம்!!

கண்ணென பெண்ணை காக்க
ஆணுமே தேவை இல்லை
மண்ணிலே பெண்ணை போன்ற
மகத்துவம் ஏதுமில்லை

என்பதை உணர்ந்து ஆண்கள் பெண்ணடிமை என்னத்தை நீக்கினாலே பெண்ணினம் தானாய்
முன்னேறும்

அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean