Author Topic: நான் இருப்பேன் இங்கே..............  (Read 538 times)

!! AnbaY !!

  • Guest
உனக்கும் எனக்கும் இருப்பது
இங்கே எவருக்கும் புரியாது
எதை நான் சொல்லி
எனை நான் காட்ட
 
எட்டாத தொலைவோடு நீயாம்
தரைமீது இலையாக நானாம்
யுகம் கடந்தாலும் முடியாதாம்
ஆராய்ச்சி முடிவென்று
இதை தான் தந்தார்கள்
பேதைகள் இவர்கள்
 
புன்னகைத்து கொண்டவன் நான்
பதில் சொல்ல துணிந்தேன்
 
“ நீ வந்த திசை பார்த்து
நான் விழி திறந்தேன்
நீ போகும் வழி தானே
நான் போ...கும் வழி என்பேன்
நீ மறையும் இடம் பார்த்தே
நான் மடிந்து போவேன் ”
 
அந்த ஒரு நாள் உன்னோடு
எனக்கு போதும் - அது
மறு நாள் நீ வரும் வரை
மொட்டுக்களாய் மீண்டும்
நான் இருப்பேன் இங்கே