Author Topic: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...  (Read 1077 times)

Offline kanmani

தசை பிடிப்பு, சிலருக்கு எப்போதாவது வரும். சிலருக்கு அவ்வப்போது வந்து செல்லும். மேலும் சிலருக்கு அடிக்கடி வரும். பொதுவாக தசை பிடிப்பு வந்தால், ஒரு நிமிடத்தில் தானே சரியாகிவிடும். ஆனால், சில சமயங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் கூட தொடரும். அது எப்போது வரும், எப்படி வரும் என்று யாராலும் கூறமுடியாது. ஆனால் வரக்கூடியவாறு நாம் நடந்து கொண்டால் சரியாக வந்துவிடும்.

தசை பிடிப்பின் காரணங்கள்:

1. உபயோகப்படுத்தப்படாத தசை 2. அதிகப்படியாக உபயோகப்படுத்தப்பட்ட தசை

3. அதிக வியர்வையினால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுகள் (Ca, K)
4. அதிகமான லாக்டிக் அமிலம் (தசையின் உணவு சுழற்சியால்)
5. உயிர்வாயு தடைப்பட்ட தசை திசுக்கள்
6. தடைப்பட்ட இரத்த சுழற்சி

தசை பிடிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதை பின்பற்றி வந்தால், விரைவில் தசைப் பிடிப்பிலிருந்து விடைபெறலாம்.

உயரமான பாதணிகளை தவிர்க்கவும்

உயரமான பாதணிகள் கால் விரல்களை வளைந்து இருக்க செய்யும். இதனால், இரத்த ஓட்டம் சீராக இருக்காது.

இறுக்கமில்லாத பாதணிகளை அணியவும்

இறுக்கமான பாதணிகள் நடக்கும்போது கால்விரல்களிலும், அவற்றின் நுனிகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் சீர் குறைந்து விரல்களில் பிடிப்பு ஏற்படும்.

உடலில் சீரான சமமான நீராதாரம்

உடலில் சமமற்ற நீராதாரம் இருந்தால் தசை பிடிப்புகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகவே உடற்பயிற்சி செய்யும் போதும், அதிகம் வியர்க்கும் போதும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

போதுமான தாதுப் பொருட்கள் இல்லாமை

கால் விரல்களில் வரும் பிடிப்புகள் குறிப்பாக தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை காரணமாக வருவது. நாள் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் குறைந்த பட்ச அளவு, கால்சியம் 1,000 மி.கி., பொட்டாசியம் 4.7 கிராம் ஆகும். இதுவே மெக்னீசியதின் அளவு, ஆண்களுக்கு 400-420 மி.கி. மற்றும் பெண்களுக்கு 310-320 மி.கி. ஆகும்.

கால் அசைவுகள்

கால் விரல்களுக்கு நெகிழ்வு தன்மை தருவதற்கு சிறப்பு பயிற்சி உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உதாரணமாக, தரையில் இருக்கும் ஒரு துண்டு அல்லது பளிங்கு எடுப்பது அல்லது ஓய்வாக உட்கார்ந்திருக்கும் போது விரல்களை ஆட்டிக் கொடுத்து பயிற்சி எடுங்கள்.

வெதுவெதுப்பான நீரில் காலை ஊற வைத்தல் அல்லது ஒத்தடம் கொடுத்தல்

 வெதுவெதுப்பான நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்தல், காலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த மிகவும் எளிமையான மற்றும் முக்கியமான வழியாகும். தூங்கும் முன் சூடான நீரில் குளிப்பது மற்றொரு சிறந்த வழி. இது கால் தசைகளை தளர்த்தி, பிடிப்புக்கள் வர வைக்கும் சாத்தியங்களை குறைக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சி

நாள்தோறும் கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்வது, தசைகளை தளர்த்தும். மேலும் தசைப் பிடிப்புகள் வருவதை தவிர்க்கும். இரவில் திடீரென்று கால்களில் தசைப் பிடிப்பு வந்தால் மெதுவாக நிதானமாக காலை நீட்டி மடக்குங்கள். இது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ள உணவுகள்

இவ்விரு தாதுக்களும் உடலில் உள்ள திரவங்களை எடுத்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. வாழைப்பழங்கள், கோழி, மீன் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள், சாப்பிட வேண்டும். குறைந்த கொழுப்பு உள்ள தயிர் அல்லது கொழுப்பு இல்லாத பால் மூலம் கால்சியத்தைப் பெறலாம்.

சரியான பாதணிகள்

சரியான அடித்தளம் உள்ள பாதணிகளை பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். உயரமான பாதணிகளை தவிர்க்க வேண்டும்.

தடித்த போர்வை

குளிர் காலத்தில் தடித்த போர்வை கொண்டு போர்த்தி தூங்குங்கள். மேலும் காலுறை அணிந்து தூங்குவது சிறந்தது.