Author Topic: Aanantha Jothi (ஆனந்த ஜோதி)  (Read 3916 times)

Offline gab

Aanantha Jothi (ஆனந்த ஜோதி)
« on: October 28, 2012, 11:24:34 PM »
நினைக்கத் தெரிந்த மனமே
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?

உயிரே விலகத் தெரியாதா?

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா?
அன்பே மறையத் தெரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

« Last Edit: October 28, 2012, 11:31:56 PM by gab »

Offline gab

Re: Aanantha Jothi (ஆனந்த ஜோதி)
« Reply #1 on: October 28, 2012, 11:25:47 PM »
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்

வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
« Last Edit: October 28, 2012, 11:32:31 PM by gab »

Offline gab

Re: Aanantha Jothi (ஆனந்த ஜோதி)
« Reply #2 on: October 28, 2012, 11:27:24 PM »
கடவுள் இருக்கின்றார்
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

கடவுள் இருக்கின்றார் கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா?

இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா?
வெளியே தெரிகி்ன்றதா?

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
கண்ணுக்குத் தெரிகின்றதா?

புத்தன் மறைந்து விட்டான் அவன்தன் போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா? உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா?

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை வீசி காக்கவும் தயங்காது
காக்கவும் தயங்காது

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
கண்ணுக்குத் தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றார் கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார்

« Last Edit: October 28, 2012, 11:32:44 PM by gab »

Offline gab

Re:Aanantha Jothi (ஆனந்த ஜோதி)
« Reply #3 on: October 28, 2012, 11:28:48 PM »
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்

வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!

பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவைப் பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்

வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!

உரிமையில் நான்கு திசை கொண்டோம் உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம் முத்தமிழ் என்னும் உயிர் தந்தோம்

ஒரு தாய் மக்கள் நாமென்போம்

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்

« Last Edit: October 28, 2012, 11:33:05 PM by gab »

Offline gab

Re: Aanantha Jothi (ஆனந்த ஜோதி)
« Reply #4 on: October 28, 2012, 11:30:22 PM »
பனியில்லாத மார்கழியா
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

ஆஹா...ஆ... ஆஹா.. ஆ.. ஆ..ஆ..ஆஆஆ

தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
« Last Edit: October 28, 2012, 11:33:16 PM by gab »