அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் !! ஒரு சுவாரசியமான தகவல் !!அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாகஇருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல்நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி)தலைமையகம் இயங்கும் 'வாட்டர் கேட்' மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்தகட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார்என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
வெள்ளை மாளிகையில் இருக்கும் ஊழல் பேர்வழிகளைப் பற்றி 'வாஷிங்டன் போஸ்ட்' எனும் பத்திரிகைதொடராக எழுதி வந்தது. 'இவர்களுக்கு மட்டும் இந்த ஊழல் விஷயம் எப்படி தெரிகிறது? என்று அரசியல்வாதிகள்பயந்து போய் நிற்க, மற்ற பத்திரிகைகள் தலையை பிய்த்துக் கொண்டன.
இதற்கெல்லாம் காரணம். 'டீப் த்ரோட்' என்பவர் தான். ஒருநாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை தொடர்புகொண்டு 'டீப் த்ரோட்'என்ற புனை பெயரை கொண்டவர் 'வெள்ளை மாளிகையில் நடக்கக் கூடிய முக்கியஊழல்களைப் பற்றி துப்பு கிடைத்திருக்கிறது. நான் அதை உங்களுக்கு தருகிறேன். ஆனால், நான் இறந்தபின்தான் என்னைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
நிபந்தனைக்கு பத்திரிகை ஒப்புக்கொண்டது. அவர் சொன்ன துப்புகளை வைத்து வாஷிங்டன் போஸ்டின் இரண்டுநிருபர்கள் மொத்த வாட்டர் கேட் ஊழலையும் அம்பலப்படுத்தினார்கள். 'டீப் த்ரோட்' யார் என்று ஒட்டு மொத்தஅமெரிக்காவே தேடியது.
ஊழல் விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. அதிபர் நிக்சன் பதவி விலக வேண்டிய நிலை. 'யார் அந்த 'டீப் த்ரோட்'உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா? என்ற விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் அவர்அமெரிக்காவின் ஹீரோ' என்று எழுதியது.
நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், 'அவர் அமெரிக்க அதிபர் நிக்சனின் நிர்வாகத்தில்வேலை செய்யக்கூடிய ஓர் ஆண். அவர் அதிகமாக சிகரெட் பிடிப்பார். நிறைய ஸ்காட்ச் குடிப்பார்' இப்படி ஒருக்ளுவை வைத்து அமெரிக்காவில் யாரை கண்டுபிடிக்க முடியும்?
இப்படியே 33 வருடங்கள் கடந்தன. அமெரிக்க எப்.பி.ஐ. ஏஜென்ட் வில்லியம் மார்க் பெல்ட் 'நான் தான்அந்த டீப் த்ரோட்' என்று அறிவித்தார். அப்போது வாஷிங்டன் போஸ்ட் எதுவும் சொல்லவில்லை. 2005 -ம்ஆண்டு 95-வது வயதில் வில்லியம் இறந்த பின் தான் 'ஆம் இவர் தான் டீப் த்ரோட்' என்று அறிவித்தது. கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியது வாஷிங்டன் போஸ்ட்.'சத்தியத்திற்கு அமெரிக்கர்களும் விலக்கல்ல'