Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 15618 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #60 on: February 04, 2013, 10:31:41 AM »
திறமையை வளர்ப்போம் வாருங்கள்!



ஒரு நாள் ஒரு குட்டி ஒட்டகம், தாய் ஒட்டகத்திடம் கேட்டது:

“அம்மா, நா உங்கிட்ட சில கேள்விகள கேக்கலாமா?”

“ம்ம்ம்.... கேளேன்....!”

“நமக்கு மட்டும் ஏம்மா இவ்வளவு நீளமான கால்கள்?”

“நாம பாலைவனத்துல பிறந்து இருக்கோம்ல.... பாலைவனத்த கடக்க மனிதர்கள் நம்மைப் பயன்படுத்தறாங்க. பாலைவன மணல்ல நடக்கும்போது காலு ரொம்ப உள்ள போயிடும். நீளமான காலு இருந்தால் சுலபமா அடுத்த அடுத்த அடி வைக்கலாம்......”

கொஞ்ச நேரம் யோசித்த குட்டி அடுத்த கேள்வி கேட்டது:

“அப்பிடியா? நமக்கு ஏன் முதுகுல ஓர் மேடு இருக்கு?”

“அது மேடு இல்லை கண்ணு, அதுக்கு பெரு திமில். நாம பாலைவனத்தில பிரயாணம் செய்யும்போது பல நாட்கள் உணவு, நீர் கிடைக்காமல் போகலாம். இந்த திமிலில் நிறைய கொழுப்பு இருக்கும். உணவு நீர் கிடைக்காத போது, இந்த கொழுப்பு நம் பசி தாகத்தைத் தீர்க்கும்”.

இப்போது சற்று அதிக நேரம் சிந்தித்தது குட்டி.

“அம்மா, நமக்கு எதுக்கு கண்கள்ல நீண்ட ரப்பைகள் இருக்கு?”

“பாலைவனத்துல திடீர்னு காத்து அடிக்கும்; காத்து கூடவே, பாலைவனத்துல இருக்கற மண்ணும் மேல கிளம்பும். பாலைவனத்துல பிரயாணம் செய்யற நாம நம்ம கண்ணை பாதுகாக்கத் தான் இப்படி பெரிய ரப்பையை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறார்....”

“அப்படின்னா, நாம ஏம்மா இந்த ‘மிருகக் காட்சி சாலைல’ இருக்கோம்?”

நம்மில் பல பேர் இப்படித்தான்! நம் திறமை வேறு, நாம் செய்யும் வேலை வேறு என்று அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

நம் திறமைக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் செய்யும் வேலையில் நம் திறமையைக் காண்பிக்க வேண்டும்.

எனக்குத் திறமையே இல்லையே என்று யாருமே சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். கட்டாயம் ஒவ்வொருவரும் திறமைசாலிகள்தான்! திறமை வேறு படலாம். ஆனால் திறமை இருப்பதை மறுக்க முடியாது.

கடும் உழைப்பால் மிகப் பெரிய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஜீனியஸ் என்பதே 99% வியர்வை சிந்த உழைப்பதுதான். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ‘மலையும் அணிலும்’ என்ற தலைப்பில் அமெரிக்க இலக்கிய மேதை எமர்சன் எழுதிய கவிதையில் வரும் கதை இதோ:


ஒரு பெரிய மலைக்கும் ஒரு குட்டி அணிலுக்கும் வாக்குவாதம் நடந்தது. மலை மிகக் கர்வமாக அணிலைப் பார்த்து ‘பொடிப் பயல் நீ’ என்றது.

அணில் மிகவும் அடக்கமாக சொன்னது: ‘உண்மைதான். நீங்கள் ரொம்ப பெரிய ஆள்தான். ஆனால் ஒரு வருடம் என்பது மாதங்கள், நாட்கள், மணித் துளிகள் சேர்ந்து உருவானதாக இருந்தாலும், அதனுள் சின்னச்சின்ன வினாடிகளும் உண்டு. நீங்கள் பெரியவன் என்று கர்வப்படுகிறீர்கள். நான் சின்னவனாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறேன். ஆட்டுக்கு வால் அளந்து வைத்த கடவுளால் எல்லாமே மிகச் சரியாக அளவிடப்பட்டு படைக்கப்
பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. உங்களைப்போல் ஒரு காட்டையே என்னால் முதுகில் சுமக்க முடியாது. ஆனால் உங்களால் என்னைப்போல் ஓர் சிறு பட்டாணியை உடைக்க முடியுமா?’

இதே கருத்தைச் சொல்லும் நம் ஔவைப்பாட்டியின் இந்தப் பாட்டைப் பாருங்கள்:

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறை யான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

வான்குருவி கூடு போல நம்மால் கட்ட இயலாது; கரையான் புற்று, தேனீக்களின் தேன் கூடு இவையெல்லாம் மனிதனால் செய்ய இயலாது. ஆனால் மனிதனைப்போல இவற்றிற்கு திறமை இல்லை.
அதனால் நானே பெரியவன் என்று யாரும் மார்தட்டிக் கொள்ள வேண்டாம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சுலபமாகச் செய்ய வரும்.
எனக்கு மற்றவரைப் போலத் திறமை இல்லை என்று வா(தா)டுவதை விட என்ன திறமை இருக்கிறதோ அதை வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறை செலுத்தலாம், வாருங்கள்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #61 on: February 04, 2013, 10:53:04 AM »
திருடனும் தெனாலி ராமனும்..



தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..

''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...

திருடன் பிடிபடுகிறான்....

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #62 on: February 04, 2013, 10:54:38 AM »
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.



“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!



அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #63 on: February 04, 2013, 10:56:32 AM »
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.



ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.

அவள் வருத்தத்திலிருந்த போது

சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.

“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.

நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்

எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #64 on: February 04, 2013, 10:58:46 AM »
தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.



“அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள்,

“முடியாது” என்றார்.

‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட

“நீ கேட்டகுணங்களுடன் ஒரு மனிதனை நான் உருவாக்குவதைவிட இந்த குணங்கள் கொண்ட மனிதனாக நீயே உருவாகிவிடு. அப்படி உருவானால்

இந்த குணங்கள் எல்லோரிடமும் இருப்பதை கண்டுபிடிப்பாய்” என்று.

உன்னிடம் இருப்பதே உலகத்தில்!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #65 on: February 04, 2013, 11:00:29 AM »


சிவாவுக்கு வேலைக்காக அப்ளிகேஷனுடன் வைக்க அவசரமாய் கெஸட்டு ஆபிஸர் அளிக்கும் நற்ச்சான்றிதழ் தேவைப்பட்டது..

மூன்றாவது வீட்டில் சங்கரன்..அரசு அதிகாரி..அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறான்..ஆனால் பேசியது இல்லை..

அவரிடம் கேட்டுபார்த்தால் என்ன என்று வீட்டுக்கு சென்று அவர் முன் பவ்வியமாய் நின்றான்.
.
நான் மூன்றாவது வீட்டில் தான்குடியிருக்கிறேன்..உங்களை அடிக்கடிபார்த்திருக்கேன்.என்று கூறிவிட்டு விஷயத்தை சொன்னான்
.
''இல்லையப்பா..நீ நல்லவனா கெட்டவனா தெரியாது..நான் இந்த ஊருக்கு வந்து 5 வருஷம்தான ஆகிறது..வேறு எங்கேயாவது வாங்கிகொள்''..என்றார்..

''சார் மூன்று ஆண்டுகள போதும் ..தயவு செய்து'' என்று சொல்லிக்கொண்டு இருக்கை
யிலே ''கிளம்புப்பா.உனக்கு சொன்னால் புரியாது.''.என்றார்..

முகத்தில் அடித்தாறப்போல் சொன்னது அவனுக்கு என்னவோ போல் இருந்த்து.

அடுத்த வாரத்தில் சங்கரனுக்கு தீடிர் நெஞ்சு வலி எற்ப்பட்டு நிலமை சிக்கலாகி ஆபிரேனுக்கு பிறகு வீடு திரும்பினார்.

அவர் வீட்டில் ஒய்வில் இருக்கையில் அவரை பார்க்க
வந்தான்..
அவனை பார்த்த்தும் ''என்னப்பா..விஷயம்..என்றார்
.
.உடல் நிலை சரியில்லை என பார்த்துபோகலாம்னு வந்தேன்.''என்றான்..
.
உனக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை..வீணாக வந்து
தொந்தரவு செய்யாதே..என்றார் காட்டமாக..

அதற்க்குள அவரது மனைவி''
''....அடடா....தம்பியை நான்தான் வரச்சொன்னேன்..உங்களுக்கு ஆபிரேஷன் பண்ணியபோது இரண்டுபாட்டில் சமயத்தில் இரத்தம்
கொடுத்த்து இந்த தம்பிதான...உங்க உடம்பிலே தம்பியின் சேர்ந்து ஒடுது.''..என்றார்..
.
மெதுவாக எழுந்திரித்து கையெடுத்து வணங்கினார்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #66 on: February 04, 2013, 11:01:50 AM »


அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #67 on: February 04, 2013, 11:03:08 AM »


ஒரு அரசன் ஜென் குருவை காண வந்தான்.
அவர்கள் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உரையாட தொடங்கினர்.

அரசன் கேட்டான்.

குருவே ஜென் என்பது இயல்பாய் இருத்தல் என்பது தான் இல்லையா ?

அதற்கு மெளனமாக தலையசைத்தார் குரு.

இயல்பு என்பது மனதை பொறுத்த விசயம் இல்லையா ? மன்னன் அடுத்த கேள்வியையும் குரு முன் வைத்தான்.

அதற்கும் தலையசைப்பே பதிலாக இருந்தது குருவிடம்.

அப்படியானால் ஜென் மார்க்க உபதேசத்தின் படி மனமே புத்தர் இல்லையா ? மூன்றாவது கேள்வியையும் முன் வைத்தான் மன்னன்.

” நான் இதற்கு இல்லை என்று பதில் சொன்னால் உலகமே அறிந்த உண்மையை நான் மறுப்பதாகிவிடும். ஆம் என்று சொன்னால் தெரியாத விசயத்தை தெரிந்து கொண்டதாக நினைப்பீர்கள் “ என்றார் குரு.

உங்களை போன்ற ஞானிகளும் மரணத்தை தவிர்க்க முடியதல்லவா ? மன்னன் விடுவதாக இல்லை.

ஆமாம் என்றார் குரு.

அப்படியெனில் செத்த பிறகு எங்கே செல்வீர்கள் ? இது மன்னனிடம் உள்ள விடையறியா கேள்வி.

தெரியாது என்றார் குரு.

தெரியாதா ? எல்லாம் அறிந்த குரு நீங்கள் உங்களுக்கு தெரியாதா ? மன்னன் விடையறியாமல் போன விரக்தியுடன் கேட்டான்.

ஆமாம், எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் இன்னும் செத்ததில்லை. என்று கூறிவிட்டு எழுந்து நடந்தார் குரு.

# விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது என்பது ஜென் மார்க்க தத்துவம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #68 on: February 06, 2013, 03:38:47 PM »
"அபசகுனம்"



அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.

ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர், ''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #69 on: February 08, 2013, 07:01:04 PM »
"சுமை"



ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..

ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...

பகவான் ரமணன் கூறுகிறார்...

உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..

சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?

மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை..
கூடுவதில்லை..

அவருக்குதான் சுமை குறைகிறது..

இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கிவைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
வீணாக சுமையை சுமக்கவேணடாமே..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #70 on: February 08, 2013, 07:02:40 PM »

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #71 on: February 08, 2013, 07:04:03 PM »

ஒரு பேராசிரியராக வேலை பார்ப்பவன் புரட்சிகராமான சிந்தனை வைத்திருந்தான்..

திருமணம் செய்தால் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்வது என்று...

அது போல் தேடுதலில் ஒர் கணவனை இழந்த பெண்ணை சந்தித்தான்..

திருமணமே வேண்டாம் என்று இருந்தவளை மனதை மாற்றி அவளை திருமணத்துக்கு சம்மதிக்கவைத்து திருமணம் செய்துகொண்டான்..

ஆனால்பின்னர் மண வாழ்க்கை அவனுக்கு எற்றுக்கொள்ளகூடியாதாக இல்லை..

ஏன் என்றால் திருமணத்துக்குபிறகு அந்த பெண்விதவை இல்லை...

ஆனால் அவள் நேசித்தது விதவை தன்மையை...
இப்போது அவளிடம் அழிந்துவிட்டது..

இப்படித்தான் பல் வேறு வகைகளில் பொருத்தம் பார்த்து எதிர்பாரப்புகள் வைத்து மண வாழக்கையில் தடுமாறிபோகிறார்கள்..

எந்த பெண்ணை திருமணம் செய்தாலும்அவர்கள் கற்பனையில் வைத்திருக்கும் பெண்ணுக்கு ஓத்திருக்க வாய்ப்பில்லை..

நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமானத்தில் இருப்பார்க்ள..அவர்களை ரசிப்பதே வாழ்க்கை..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #72 on: February 08, 2013, 07:05:16 PM »

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #73 on: February 08, 2013, 07:07:06 PM »

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218451
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #74 on: February 08, 2013, 07:09:33 PM »


ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.

அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.

அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.

அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் கட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.

கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.

மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பெ இப்படியா கழுத்துலெ சுத்திட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நாம்ம வாங்குனது ஆட்டுக்குட்டிதானா அல்லது வேறெதாவது கிரகமா? என்று மிரண்டவனாய் நடந்தான்.

நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பொணத்தத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச் சாத்தனெ ஆட்டுக்குட்டின்னு நெனைச்சு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! தூ கிரகம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.

சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!

நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.