Author Topic: ~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~  (Read 19429 times)

Offline MysteRy

ஞானக்குறள் - 30. துரிய தரிசனம்
« Reply #30 on: February 26, 2013, 11:54:26 AM »
ஞானக்குறள் - 30. துரிய தரிசனம்




வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.   291

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.   292

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.   293

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.   294

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.   295

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.   296

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.   297

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.   
298

ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.   299

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.   300

Offline MysteRy

ஞானக்குறள் - 31. உயர்ஞான தரிசனம்





கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.   301

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.   302

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.   303

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.   304

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.   305

இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.   306

அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.   307

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். 308

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள். 309

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு. 310