ஹாய் வருண் அவர்களே ,
கடந்தமுறை இசை தென்றல் நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து உரிய நேரத்தில் நிரப்ப முடியாததுக்கு வருந்துகிறேன்.
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் யுவன் சங்கர்ராஜா இசையமைப்பில் ஒரு திரைபடத்தை தேர்வு செய்ய இருக்கிறேன். இந்த இசை தென்றல் நிகழ்ச்சியில் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக நன் தேர்வு செய்து இருக்கும் திரைப்படம் "7/ஜி ரெயின்போ காலனி"
செல்வராகவன் அவர்கள் இயக்கத்தில், வாழ்க்கையில் காதலின் எதார்த்தத்தை சித்தரித்து இருக்கும் இந்த திரைப்படம் , அந்த கதையமைப்பை மனதில் பதிய வைக்கும் விதமாக மெல்லிய இசையை கொண்டதாக அமைந்து இருக்கிறது . இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் மிக அருமையாக வித்யாசமான முறையில் பாடல்களை ரசிக்கும் விதமாக யுவன் ஷங்கர் இசை அமைத்து இருக்கிறார்.
குறிப்பாக இந்த திரைப்படம் பேசப்படும் விதமாக இருமுறை ஒலிக்கும் இரு பாடல்களை சொல்லலாம்.
"காண காணும் காலங்கள் " " நினைத்து நினைத்து பார்த்தேன்" என தொடங்கும் இவ்விரு பாடல்களும் எல்லாருடைய மனதிலும் இன்றும் நீங்காத இடத்தை பெரும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா அருமையாக இசை அமைத்து இருந்தார்.
இந்த திரைபடத்தில் இருந்து நான் கேட்கவிரும்பும் பாடல் ,,,, ஆண்களின் காதல் மனதை வகையில் சித்தரிக்கும் " கண் பேசும் வார்த்தைகள் " என தொடங்கும் பாடல் .
நன்றி.