Author Topic: இரத்த தானம் வேண்டுவோருக்கு....  (Read 3939 times)

Offline RemO

இரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்த இத்தளத்தை நம் தமிழ் உறவுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது.இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் இரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

”என் நண்பனைப்போல் உதவி செய்ய ஆளில்லை “  என்று சொல்லும் நமக்கு நிச்சயமாக நண்பனே வந்து உதவப்போகிறான் ஆனால் அந்த நண்பனின்  முகம் இதுவரை தெரியாமல், மொழி தெரியாமல், மதம் தெரியாமல், இனம் தெரியாமல் அன்பை மட்டுமே ஆணி வேராகக்கொண்டு இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.friendstosupport.org


இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம்  கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம். எங்கோ கிராமத்தில் வாழும்  ஒரு குழந்தைக்கு அரிய வகை இரத்தம் தேவைப்படும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும். இப்பதிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nala thagaval... ratha thaanam enrathu nalla thaanamthan koduthal meendum athuvagave vanthu vidum so elaarum ratha thanam pannanum
                    

Offline RemO

ama rose
elorum panina rompa nalarukum
ana palar inum paya paduranga