அரிசி சப்பாத்தி
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்