Author Topic: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்  (Read 944 times)

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #15 on: October 08, 2013, 10:00:20 AM »
இஞ்சி முரப்பா

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, வெல்லம் - கால் கிலோ.

செய்முறை: இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும்.

வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #16 on: October 08, 2013, 10:00:40 AM »
பூண்டு-உளுந்து சாதம்

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கறுப்பு முழு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி!

இதற்குத் தொட்டுக்கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #17 on: October 08, 2013, 10:00:58 AM »
தேன் இஞ்சி

தேவையானவை: இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், தேன் - கால் கப்.

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியில் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சியை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந்தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர... பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சியை தேனில் போடக்கூடாது.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #18 on: October 08, 2013, 10:01:16 AM »
பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை: பட்டன் காளான் - 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, பூண்டுப் பல் - 10, சோம்பு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸ§க்கு சிறந்த சைட் டிஷ்.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #19 on: October 08, 2013, 10:01:34 AM »
ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்

தேவையானவை: இஞ்சி - 8 அங்குலத் துண்டு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு கப், ஆரஞ்சு சாறு - 2 கப், இஞ்சி துருவல் - சிறிதளவு, குளிர்ந்த நீர் - 3 கப்.

செய்முறை: இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன், அடுப்பை 'சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆற விடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர்ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #20 on: October 08, 2013, 10:01:51 AM »
பூண்டு-கடலைப்பருப்பு துவையல்

தேவையானவை: கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப் பல் - 5, புளி - ஒரு சிறு நெல்லிகாய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #21 on: October 08, 2013, 10:02:12 AM »
ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை

தேவையானவை: துருவிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன், பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, புருக்கோலி பூ - 1, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக்கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை இஞ்சி - பூண்டு சமையல்
« Reply #22 on: October 08, 2013, 10:02:34 AM »
பூண்டு-காய்கறி சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) - ஒரு கப், பூண்டுப் பல் - 6, மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் - தலா கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை இரண்டு கப் தண்ணீரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 3-4 நிமிடங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும