அந்த சில நிமிடங்கள் - எதிர்பாராதது
எல்லோரது வாழ்க்கையிலும் 'அந்த சில நிமிடங்கள்' என்பது நிச்சயம் ஏதோ ஒரு வகையில் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தி வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடுவதுண்டு. ஒரு பெண் தன் வாழ்க்கையை மாற்றிய அந்த சில நிமிடங்களைப் பற்றி என்னிடம் கூறினார், வேலைக்காக எத்தனை பரீட்சைகள் உண்டோ அத்தனையையும் விடாமல் எழுதி வந்தாள். ஒரு வழியாக வங்கியில் வேலை கிடைத்தது, நீலகிரியில் முதல் முறையாக வேலையில் சேருவதற்காக தனது தகப்பனாருடன் கிளம்பி சென்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தனக்கு வங்கியில் வேலை கிடைத்த செய்தியைப் பற்றி தெரிவிக்கவில்லை, நீலகிரியில் வங்கி இருந்த இடத்தின் சற்று அருகில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர், அடுத்தநாள் வங்கிக்குச் சென்று வேலையில் சேர்ந்தாகிவிட்டது, வங்கியில் பணி செய்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் செங்கல்பட்டின் அருகிலிருந்த ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்று அங்கு பணியாற்றி வந்தார்.
புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்ணை தவிர வேறு பெண்கள் அந்த வங்கியில் பணி செய்தனரா என்பதைப்பற்றி அந்த பெண் என்னிடம் தெரிவிக்கவில்லை. செங்கல்பட்டு கிராமத்திலிருந்து அங்கு சென்று வேலை பார்ப்பவர்தான் அங்குள்ள வங்கி ஊழியர்களின் யூனியன் தலைவர், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதிகள் அங்கு இல்லாததால் அவருடைய வாடகை வீட்டிலிருந்த உபயோகிக்காத அறையை புதிதாக சேர்ந்த பெண்ணிற்கு கொடுத்து உதவினார். அந்த பெண் அங்கேயே தங்கி அலுவலகம் சென்று வந்தார், நீலகிரியில் அடிக்கடி மழை பெய்வது வழக்கம், வார இறுதியில் கடைக்குச் சென்று சமைப்பதற்காக சில சாமான்களை வாங்கிவருவதற்க்கு அந்த பெண் சென்றிருந்தார், திரும்பி வரும்போது நல்ல மழை, மழை நிற்பதாக தெரியவில்லை அதனால் மழையில் குடையை பிடித்துக்கொண்டு முழுவதும் நனைந்து வீடு வந்து சேர்ந்தார்.
அடுத்தநாள் அந்த பெண்ணிற்கு ஜுரம், உடன் இருந்தவர் பெண்ணிற்கு தேவையான மாத்திரைகள் உதவிகள் காப்பி கஞ்சி ரொட்டி என்று உதவி செய்திருக்கிறார், அந்த பெண் உடல் நலமாகி மீண்டும் அலுவலகம் செல்ல துவங்கினார், வாரக்கடைசியில் விடுமுறை சமயத்தில் அந்த ஆண் நன்றாக குடித்துவிட்டு இந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார், இந்த பெண்ணிற்கு யாரிடம் சென்று இதைப்பற்றி சொல்வது என்று புரியாமல் நாட்களை கடத்தி வந்தார், அந்த பெண் அந்த ஆணை அண்ணன் என்று கூப்பிட்டு வந்தார் [safeஆக] ஆனாலும் அந்த ஆணின் தொடர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க வழிதெரியாமல் விழித்து வந்தார். இந்நிலையில் அந்த ஆடவரின் தமக்கைகளிடம் கைபேசியின் மூலம் அடிக்கடி பேசுவதுண்டு, அப்படி பேசும் போது ஒருநாள் வேறு வழியின்றி அவர் தன்னிடம் நடந்துகொள்ளும் முறைகளைப் பற்றி சொல்லி இதற்க்கு ஏதாவது தீர்வு சொல்லும்படி அழுதுள்ளார்.
அந்த ஆடவரின் தங்கைக்கு திருமணம் நிச்சயதார்த்ததிற்க்காக அவர் செங்கல்பட்டில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்த போது அவரது அக்காவும் தாயாரும் இந்த பெண் சொன்ன புகாரைப்பற்றி அவரிடம் விசாரித்த போது அவர் சற்றும் அவற்றிற்கு அஞ்சவில்லை, பதிலேதும் சொல்லாமல் மவுனமாகவே இருந்த்விட்டார், இதையடுத்து அவரது தாயாரும் தமக்கையும் நீலகிரியில் அவர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர், அப்போது அந்த பெண்ணிடம் திருமணமாகாத இருவர் ஒரே வீட்டில் தங்கியிருப்பது ஆபத்தானது அல்லவா என்று அந்த பெண்ணிடம் விசாரித்துவிட்டு அந்த ஆடவரிடம் இதற்க்கு என்ன செய்து முடிவு கட்டுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர், அவர் வேறு வழியில்லைஎன்றால் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் தங்கள் ஊருக்கு திரும்பிவிட்டனர். இருவரும் வெவ்வேறு மதம் இனம் மொழி என்று எல்லாவிதங்களிலும் வெவேரானவர்கள் என்பதே அதற்க்கு காரணம். பெண்ணின் வீட்டில் இந்த செய்தியை கேட்ட அனைவரும் வாயடைத்து விட்டனர். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை, அந்த பெண்ணிற்கு அந்த ஆடவரை திருமணம் செய்து கொள்வதற்கு சிறிதும் பிடிக்கவில்லை, அவள் வேறு ஒருவரை காதலித்துவந்தாள். ஆனால் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருப்பதாக ஜோதிடர்கள் எழுதி கொடுத்திருந்ததால் வேறு திருமணம் செய்வதில் தடை இருந்தது. இந்நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர், அதற்க்கு காரணம் அந்த பெண் கர்ப்பமுற்றிருந்தார், அந்த பெண்ணிற்கு பிடிக்காத வாழ்க்கை அமைந்தது என்பதால் கருச் சிதைவிற்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கர்பத்தை அவளால் கலைக்க முடியவில்லை, மருத்துவரிடம் சென்று கலைத்துவிடுவதற்க்கு அந்த ஆடவர் சம்மதிக்கவில்லை. பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு பன்னிரண்டு வயதுவரை இரண்டு காதுகளிலும் சீழ் ஒழுகிக்கொண்டே இருந்தது, அடிக்கடி வலிப்பு வந்து எங்கே இருந்தாலும் கீழே விழுந்துவிடுவான், காரணம் அந்த பெண்ணிற்கு பிடிக்காத கர்ப்பம், பிடிக்காத திருமணம்.
அந்த பெண்ணின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய 'அந்த சில நிமிடங்கள்' அந்த ஆண் குடித்துவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 'அந்த சில நிமிடங்கள்' எத்தனை கொடுமையானது. அந்த சில நிமிடங்களால் அந்த பெண்ணின் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது. இதைப்போன்று ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்பம், சுகம், துக்கம், விபத்து மரணம், நோய், என்று கணக்கிலடங்கா காரியங்கள் எதிபாராமல் நடந்துவிடும் 'அந்த சில நிமிடங்கள்' என்பதை பற்றி சிந்திக்கும்போது மனிதனின் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே எதிர்பாராததுதான். 'எந்த சில நிமிடங்கள்' வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடக்கூடியது என்பதை யாரும் அறிந்திருக்கவே முடியாது.