மே தினம்
உழைப்பாளர் தினம் என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நடை பெரும் போராட்டங்கள், அதிலும் சிவப்பு நிற கொடியுடன் காக்கிச் சட்டை அணிந்தவர்கள் ஒன்று திரண்டு கோஷங்கள் இடுவது தான் நம் கண் முன் காட்சியாக நினைவிற்கு வரும், இவற்றிற்கு முன்னோடிகள் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் போராடிய முதல் போராட்ட தியாகிகள் என்றால் அது மிகையில்லை, உலகின் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக ஒரு உழைப்பாளியின் ஒரு நாளைய பணி நேரம் 8 மணி நேரம் என்பது தான்.
எந்த போராட்டமும் எளிதில் முடிவிற்கு வந்து விடுவதில்லை அதிலும் முதலாளிகளை எதிர்த்து போராடும் உழைப்பாளர்களால் அத்தனை எளிதில் கோரிக்கைகளை முடிவிற்கு கொண்டுவருவது என்பது சிரமம், 19 ஆம் நூற்றாண்டில் கடை பிடித்த முறைகள் தான் இன்றுவரையில் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக கையாளப்பட்டு வெற்றி தோல்விகள் சந்தித்து வருகிறது. முதன் முதலில் 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி முதல் தொழிலாளர் இயக்கம் அமெரிக்காவில் ஆரம்பிக்கபட்டது இந்தநாளை உழைப்பாளர் தினம் என்று உலகின் பல்வேறு நாடுகளில் அனுசரித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதாக இன்றைய இயக்கங்கள் இருந்தாலும் கம்யூனிஸ கட்சிகள் தான் போராட்டங்களை நடத்துவதும் உழைப்பாளர்களை இயக்கமாக ஒன்று திரட்டி போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளது, கம்யூனிஸ கொள்கைகள் காரல் மார்க்சின் தத்துவங்களின் அடிப்படையில் ஏற்ப்பட்ட பிரதானப்பிரிவாக கம்யூனிஸம் இருப்பதால், காரல் மார்க்சின் அடிப்படை கொள்கை என்பது முதலாளித்துவத்திற்கு எதிரானதும் இதனை கம்யூனிஸக் கொள்கைகள் என்று சொல்லபட்டாலும் காரல் மார்க்ஸ் அடிப்படையில் சோசியலிசத்தை கர்ப்பித்தார், 'முதலாளித்துவத்தை ஒழித்து உழைப்பவர் அனைவரும் சமம்' என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இதன் வழியில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இக்கொள்கைகள் பரவியுள்ளது. இன்றைய இந்தியாவில் மேற்கு வங்கம் கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் கம்யூனிஸம் வலுவுடன் செயல்பட்டு வருவதுடன் அதன் அதிகபட்ச உறுப்பினர்களை உடையதாகவும் உள்ளது. உழைப்பாளர்களின் நலன்களுக்காக எல்லா நாடுகளிலும் இயக்கங்கள் ஏற்ப்படுத்தி தங்களது உரிமைகளை கோரிக்கையாக வைப்பதற்கு இதன் சங்கங்கள் இருந்து வருவது யாவரும் அறிந்தது.
ஏனையோருக்கு இந்த ஒருநாள் விடுமுறை கிடைப்பது மிகவும் சந்தோசம். வாழ்க உழைப்பாளர்கள்