Author Topic: ~ வாழைத்தண்டு மருத்துவம்:- ~  (Read 186 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைத்தண்டு மருத்துவம்:-




உடல் கனம் குறைய வாழைத்தண்டு மிகவும் சிறந்தது. இதனை ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும். முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும். கீழ்க்கண்ட நோய்கள் வராமலிருக்கவும், வந்தால் குணப்படுத்தவும் ஆற்றலுடையது வாழைத்தண்டு. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீரடைப்பு, சிறுநீரகத்தில் கல் போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளுக்கும் வாழைத்தண்டு மா மருந்து. நீரிழிவு, வயிற்றுப்புண், சரும நோய்கள், வயிற்றுப் பூச்சி, பல்லில் பூச்சி, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கும் வாழைத்தண்டு உகந்ததல்ல.