Author Topic: ~ சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்! ~  (Read 843 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரிச் ஃப்ரூட் சாலட்



தேவையானவை:
எல்லா பழங்களையும் துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கலந்து சாப்பிடலாம்.

செய்முறை:
மாம்பழம், கிர்ணிப் பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, தர்பூசணி, அத்திப் பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி - தேவையான அளவு.

பலன்கள்:
வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் நிறைவாக உள்ளன. சத்துக்கள் நிறைவாகக் கிடைக்கும். குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், பெண்கள் என அனைவருக்கும் ஏற்றது. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீன்ஸ் சாலட்



தேவையானவை:
மெலிதாக நறுக்கிய பீன்ஸ், தக்காளி, வெங்காயம், குடமிளகாய் - தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.

செய்முறை:
நறுக்கிய காய்கறிகளை அடுக்கிவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

பலன்கள்:
 நார்ச்சசத்து. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மலச்சிக்கல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெள்ளரி - பேபி கார்ன் சாலட்



தேவையானவை:
வெள்ளரிக்காய் - 2, தக்காளி, கேரட், எலுமிச்சம் பழம் - தலா 1, பேபி கார்ன், தயிர் - சிறிதளவு, உப்பு, மிளகு - தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரிக்காயின் தோல், விதையை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, கேரட், பேபி கார்னை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மிளகு, தயிர் சேர்த்துக் கலக்கவும். வெள்ளரி சாலட் தயார். இதை ஃப்ரீசரில் வைத்து, ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிடும்போது, கூடுதல் சுவை கிடைக்கும்.

பலன்கள்:
வெள்ளரியில் நீர்ச்சத்து நிறைவாக உள்ளதால், கோடைக் காலத்தில் ஏற்படக்கூடிய நீர் இழப்புப் பிரச்னையைப் போக்குகிறது. நெஞ்சு எரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்னையைப் போக்குகிறது. புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் தக்காளியில் உள்ளது. அனைவருக்கும் ஏற்ற சாலட் இது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெஜிடபிள் சாலட்



தேவையானவை:
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 1, வெள்ளரி, கோஸ், வெண்பூசணி,  புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, சுரைக்காய் -  சிறிய துண்டுகள், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - இரண்டு டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறிகளைத் தீக்குச்சி வடிவில் சிறிய அளவில் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, காய்கறிகளுடன் சேர்த்துக் கலக்கவும். இதில், மிளகுத் தூள், சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு,  கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிடலாம்.

பலன்கள்:
 செரிமானத்துக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைவாக உள்ளதால், சிறுநீரைப் பெருக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெண்டைக்காய் குடமிளகாய் சாலட்



தேவையானவை:
 கத்தரிக்காய், வெண்டைக்காய், குடமிளகாய் தலா - 100 கிராம், சீஸ் - 20 கிராம், மிளகு - 10 கிராம், பூண்டு - 2 பல், ஆலிவ் ஆயில், துளசி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குடமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் நன்றாகச் சுட்டு எடுக்கவும்.  பிறகு, தோலை நீக்கி, துளசி, ஆலிவ் எண்ணெய், மிளகு, தோல் நீக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு, மையமாக அரைக்கவும். இது சாஸ் போன்ற கலவையாக இருக்கும். அடுத்து, கத்தரிக்காயை மிக மெல்லியதாக வட்ட வடிவிலும், வெண்டைக்காயை நீளவாக்கிலும் வெட்டி, அடுப்புத் தணலில் காட்டிச் சுடவும்.  க்ரில் வசதி இருந்தால், அதில் போட்டும் கருகவிடாமல் சுட்டுஎடுக்கலாம். வெண்டைக்காய், கத்தரிக்காயை ஒவ்வொரு லேயராக அடுக்கி, அதற்கு மேல் சீஸ் போட்டு, இதன் மீது, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள, குடமிளகாய் சாஸ் சேர்க்கவும்.  சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சாலட் இது. வெண்டைக்காயில் வைட்டமின் சி மற்றும் பி நிறைவாக உள்ளது. இது சிறுநீரைப் பிரித்து, உடல் வெப்பத்தைக் குறைக்கும். இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. சீஸில் கால்சியம் உள்ளது. ஓரளவுக்கு வைட்டமின் டியும் உள்ளது. கால்சியத்தை எலும்பு கிரகிக்க, இந்த வைட்டமின் டி துணைபுரியும். இதில் ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெள்ளரி ஃப்ரூட் சாலட்



தேவையானவை:
 வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நாட்டு வெல்லம்- 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின்  விதைகளை நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, நாட்டு வெல்லம், மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்துப் பரிமாறலாம்.

பலன்கள்:
இந்த சாலட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெள்ளைப் பூசணி சாலட்



தேவையானவை:
 வெள்ளைப் பூசணி - 200 கிராம், கெட்டித் தயிர் - 2 கப், தாளிக்க: கடுகு, உளுந்து - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பூசணியைத் தோல் நீக்கித் துருவி, நன்றாகப் பிழிந்து தனியாக வைக்கவும். பிழிந்துவைத்த பூசணியுடன் கெட்டி தயிர், உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கலந்துவைத்துள்ள பூசணியுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

பலன்கள்:
தயிரில் ப்ரோபயாடிக் உள்ளது. குழந்தைகள், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்



தேவையானவை:
கார்ன் - 100 கிராம், அன்னாசிப் பழம் - 100 கிராம்,  பூண்டு - ஒரு பல், வால்நட் - 4, துளசி இலை - 5, எலுமிச்சம் பழம் - 1, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுஎடுக்கவும். மிளகு, வால்நட், பூண்டு, துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாற்றை விட்டு, மையமாக அரைத்து, சாஸ் போல் தயாரிக்கவும். அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, சோளத்தைச் சேர்க்கவும். இதில் சாஸ் சேர்த்துக் கலக்கியோ, அல்லது அன்னாசிப் பழம், சோளத்தை சாஸில் முக்கியோ சாப்பிடலாம்.

பலன்கள்:
அன்னாசிப் பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது மூளை செல்களைத் தூண்டி, உற்சாகத்தைத் தரும். இதயத் தசைகளின் செயல்திறனை மேம்படுத்தும். மிளகு, பூண்டு, துளசி என உடலுக்கு நலம்தரும் மூலிகை நிறைந்த மருத்துவ சாலட் இது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீட்ரூட் பனீர் சாலட்



தேவையானவை:
பீட்ரூட் - 200 கிராம், பனீர் - 100 கிராம், கோஸ், கேரட் - தலா 50 கிராம், கெட்டி தயிர், தேன் - சிறிதளவு, உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:
 பீட்ரூட்டை வட்டமாக வெட்டி, நீராவியில் ஒரு சில நிமிடங்கள் வேகவிட வேண்டும். பனீரை அதே அளவுக்கு, மிக மெல்லியதாக வெட்டி, பீட்ரூட் மேல் அடுக்கவும்.  ஓர் அடுக்கு பீட்ரூட் எனில், அடுத்த அடுக்கு பனீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும். கேரட், கோஸ் போன்றவற்றைச் சீவி, அவற்றுடன் கெட்டி தயிர், தேன் சேர்த்துக் கலக்கி, சாலட் மீது வைக்கவும்.

பலன்கள்:
 பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இரும்புச் சத்தைக் கிரகிக்க, வைட்டமின் சி அவசியம். இந்த சாலட்டில் இவை இரண்டும் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி நீரில் கரையும் வைட்டமின் என்பதால், இதை முடிந்தவரை சமைக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.