Author Topic: ~ ஃப்ளோரிங்... தேர்வும் பராமரிப்பும்! ~  (Read 753 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


‘பாத்ரூம்ல இந்த டைல்ஸைப் போட்டு, கால் வெச்சாலே வழுக்குது’, ‘என்ன கிளீனர் போட்டாலும் இந்த கிச்சன் டைல்ஸ் `பளிச்'சுனே ஆக மாட்டேங்குது’ என்பது போன்ற புலம்பல்களுக்கு ‘பை’ சொல்ல, வீட்டில் ஃப்ளோரிங்குக்கான மெட்டீரியல்கள் தேர்வு மற்றும் ஃப்ளோரிங் பராமரிப்பு பற்றிப் பேசுகிறார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘அந்தோனி என்டர்பிரைசஸ்’ஸின் உரிமையாளர் ஜோசப்.

‘‘பொதுவாக மொசைக், டைல்ஸ், மார்பிள், கிரானைட், மரம், கண்ணாடி இவற்றையே தரை மற்றும் சுவர்களுக்குப் பயன்படுத்துகிறோம். இவற்றில் தற்போது பெரும்பாலானோர் கிரானைட், டைல்ஸ், டைல்ஸ் வகையில் ஒன்றான மார்போனைட், மார்பிள் ஆகியவற்றை அதிகம் விரும்புகிறார்கள். இயற்கையில் கிடைக்கக்கூடிய கல்லான கிரானைட் விலை அதிகம் என்றாலும் பராமரிப்பது சுலபம். கிரானைட்டை நாம் எந்த வடிவத்திலும் செதுக்கி வடிவமைத்துக்கொள்ள முடியும்’’ என்ற ஜோசப், எந்தெந்த அறைக்கு எந்தெந்த மெட்டீரியலைத் தேர்வு செய்யலாம் என்ற பரிந்துரைகள் தந்தார்.



‘‘குளியலறை மற்றும் சமையலறை என அடிக்கடி அழுக்காகும் தரைகளுக்கு டைல்ஸ்தான் சிறந்த சாய்ஸ். இதனால் இந்த இடங்கள் வழுக்காமல் இருப்பதுடன், தேவைப்பட்டால் தரைத்தளத்தை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இந்த இடங்களுக்கு கிரிப் கிடைக்கும் விதத்தில் மேட் ஃபினிஷிங் இருக்கிற டைல்ஸ்களாக தேர்வு செய்யலாம். ஹால்களுக்கு டிசைனர் டைல்ஸ், கிரானைட் பொருத்தலாம். இப்போது கடைகளில் கிடைக்கும் வால் டைல்ஸ், சுவர்களுக்கான பெயின்ட் செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, வீட்டுக்கு அழகான லுக்கையும் கொடுக்கும்; குழந்தைகளின் சுவர் கிறுக்கல் பற்றிய கவலையும் இருக்காது.

கார் பார்க்கிங் பகுதிகளுக்கு என பிரத்யேக ஹெவி டியூட்டி டைல்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தேவையான கிரிப்பை கொடுப்பதுடன் பளு தாங்கவும் செய்யும். மொட்டை மாடியில் கூலிங் டைல்ஸ் பொருத்தினால், வெயிலை வீட்டுக்குள் இறங்கவிடாமல் தடுக்கும்.

தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீரை எற்றுக்கொள்ளக் கூடிய வெர்டிஃபைடு டைல்ஸ் மட்டுமே பொருத்த வேண்டும். மார்பிளை பொறுத்தவரை இத்தாலியன் மார்பிளில் ஆயிரத்துக்கும் அதிகமான வண்ணங்கள் கிடைப்பதுடன் தரைக்கு கூடுதல் அழகையும் கொடுக்கும்.

இப்போது வீட்டில் உள்ள ஃப்ளோரிங் பிடிக்காதவர்கள், அதை உடைக்காமலே மேல் பரப்பில் புதிய டிசைன்களைப் பொருத்தும் ‘ஃபிக்ஸிங் சொல்யூஷன்’ வசதியும் வந்து விட்டது!’’ என்றவர், தொடர்ந்து ஃப்ளோர் பராமரிப்பு பற்றி பேசினார்.



‘‘தினமும் வீட்டைத் துடைக்கவோ, கறையை நீக்கவோ கண்ட கண்ட ஆசிட் கிளீனர்களை அதிகம் பயன்படுத்தினால், தரையில் ஓட்டை விழும். எனவே, சோப் ஆயிலை மட்டும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தரையில் கறை ஏற்பட்டால் உடனடியாகத் தண்ணீரால் துடைக்க வேண்டும். வெகுநாட்களுக்குப் பிறகு சுத்தம் செய்யும் தரைகளை கிளீனரால் சுத்தப்படுத்தலாம். அப்போதும்கூட, அது எந்த தரைக்கான பிரத்யேக கிளீனர் என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

உப்பு நீர் படியும் பாத்ரூம் மற்றும் சமையலறை பகுதிகளை தினமும் சுத்தம் செய்தால், தளம் வீணாவதைத் தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் டைல்ஸ் கிளீனரை இங்கு வாரம் ஒருமுறையேனும் பயன்படுத்தலாம். எல்லா வகையான கற்களும் எண்ணெயை உறிஞ்சும் என்பதால், எண்ணெய் படியாமல் பார்த்துக்கொள்ளவும். மார்பிளை மட்டும் ரீ-பாலிஷிங் செய்துகொள்ள முடியும். ஆனால், அதுவும் ஓரளவுக்்கு மேல் கறைகளை நீக்கிவிடாது. தண்ணீர் டேங்குகளில் உப்பு நீர் கறை படிந்துவிடாமல் இருக்க, மாதம் ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது!’’

- அக்கறையுடன் தகவல்கள் தந்து முடித்தார் ஜோசப்.