Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 82329 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #315 on: September 06, 2016, 03:58:07 PM »
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.


விளக்கம் : அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரால், எச்செயலை, எவ்வாறு (எக்கருவி கொண்டு, எவ்வழி முறையால்) செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகுதி உள்ளவர்களிடத்தில் அச்செயலைச் செய்து முடிக்கும் பொறுப்பினை விட்டுவிடவேண்டும். இதுவே இக்குறளின் கருத்து. முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட கருத்துதான் என்றாலும், “இதனால்” என்ற சொல் செய்யுங் கருவி, வழிமுறை ஆகிய இரண்டையும் ஒருங்கே குறிப்பதை உணரலாம். “அவர்கண் விடல்” என்றது ஆய்ந்து அறிந்தபின் அவர் செய்ய நம்பி ஒப்படைத்தலைக் குறிக்கும். இதில் நம்புதல் என்பது வேலையின் நேர்த்தியைப் பற்றி மட்டும்தான். செய்பவரைக் குறித்து அல்ல. முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கு முரணாகச் சொல்லப்படவில்லை.

.................. ஓம்பி அருளாள்வார்க்கு .............
தன்னுயிர் .................. வினை.

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #316 on: September 08, 2016, 03:30:26 PM »
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.


----------------- அல்லார்க்கு -------------- ஞாலம்
--------------- பட்டன்று -----------.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #317 on: September 08, 2016, 04:10:29 PM »
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

குறள் விளக்கம்:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.


இன்பம் ............... இரத்தல் .................
..................... ................... வரின்.

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #318 on: September 09, 2016, 02:28:24 PM »
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.


                         ************************************************************

-------- மனத்தான் படிற்றொழுக்கம் --------
------------ -----  நகும்.



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #319 on: September 09, 2016, 03:23:48 PM »
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


குறள் விளக்கம் :
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.


சென்ற ...................  செலவிடா  ..............
நன்றின்பால் ............... ..................

Offline TraiL

  • Full Member
  • *
  • Posts: 100
  • Total likes: 193
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life is better when you are laughing :)
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #320 on: September 14, 2016, 02:46:32 PM »
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.


விளக்கம்
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.


__________ குற்றமு _______ அவற்றுள்
__________ மிக்க __________.


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #321 on: September 15, 2016, 08:54:46 AM »
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.



விளக்கம் :
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.


அற்றாரைத் .................. ஓம்புக ................
பற்றிலர் ...................... ......................

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #322 on: September 17, 2016, 03:21:56 PM »
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
.

             

------------- ஆகி நயமில ----------
------------- ஆதல் ---------


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #323 on: September 19, 2016, 08:31:50 AM »
   
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.


குறள் விளக்கம் :
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.



வன்கண் ..................... கற்றறிதல் .................
ஐந்துடன் ................... ....................

Offline TraiL

  • Full Member
  • *
  • Posts: 100
  • Total likes: 193
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life is better when you are laughing :)
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #324 on: September 19, 2016, 04:30:57 PM »
வன்கண்  குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

குறள் விளக்கம் :
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்

_________ குடியும் ____________ கோல்கோடிச்
____________ செய்யும் ______________.


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #325 on: September 20, 2016, 02:33:57 PM »
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.



விளக்கம் :
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.



..................... தெய்வம் விருந்தொக்கல் ...............
ஐம்புலத்தாறு ..................... ...................

Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #326 on: September 23, 2016, 02:58:02 PM »

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


விளக்கம் :

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.


நனவினால் -----------------,  ------------------ கனவினால்
--------------------,  ----------------- உயிர்
.
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #327 on: September 25, 2016, 11:22:19 AM »
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
 காண்டலின் உண்டென் உயிர்.


விளக்கம் :
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


.................. நீங்கித் ................. வையத்தின்
 வானம் ................... ..............

Offline EmiNeM

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #328 on: September 25, 2016, 06:19:32 PM »
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

பொருள்: ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

.......... மருந்து பிறமன் ...........
............... தானே மருந்து.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #329 on: September 26, 2016, 09:40:01 AM »
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.


விளக்கம்  :

நோய்க்கு மருந்தாவன நோயல்லாத பிறபொருள்கள்; அழகிய அணிகள் அணிந்தவளால் உண்டான நோய்க்குத் தானே மருந்தாக உள்ளாள்.


................... ஒள்ளிய ராதல் ..................
................... ............... கொளல்