Author Topic: ~ குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 – 2016 ~  (Read 560 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218487
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


மேஷ ராசி

இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தக் காரியத்தையும் பிரதிபலன் கருதி செய்ய மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு.

குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்னைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம், நஷ்டமானாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார்.

வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்பு மேம்படும். உறவினர் கள் வகையில் இருந்து வந்த பிரச்னை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர், புதிய சொத்துகள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்கநிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார்.

நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக் கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலைப் பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே, மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உடனிருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.

வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது. வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம்.

கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.
ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவர்கள். உழைக்காமலேயே கூடுதலான வருமானத்தைப் பெறுவீர்கள். பிரச்னைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். பணவரவு வந்தபடி இருக்கும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.

தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும்.

கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். உத்யோகஸ்தர்கள் அதிலும் அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர்.

எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களின் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த குருபெயர்ச்சி ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது.

செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சின்னஞ்சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே... இனி அது இருக்காது. தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத் துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை.

நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டியது வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், வேலைச்சுமையும் வரலாம். எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கு காண்பர். தாராள செலவில் தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.
மிதுன ராசி

மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே, நீங்கள் எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். எந்த காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்வீர்கள்.மிகுந்த ருசியுடன் கூடிய உணவை உண்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வை ஒரேமாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள். குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் தைரிய ராசியில் இடம் பெற்றுள்ளார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும்.

பூர்வீகச் சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக அடிக்கடி சோர்வு உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவுக்கும் வாய்ப்புண்டு. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் விலகி ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.

எந்தப் பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்துப் பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வெகுநாட்களாக மழலை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கிறீர்கள்.

அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷனாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும்.

அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலையை அடைவர். மாணவர்களின் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம்
செலவழிப்பர்.
கடகராசி

கடகராசி அன்பர்களே, நீங்கள் பக்தி சிரத்தையுடன் வாழ்வீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தன்னைப்போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். பசி பொறுக்க மாட்டீர்கள். நன்கு உழைப்பீர்கள். மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். கடல்கடந்து சென்று வேலை செய்வீர்கள். குருவின் இப்போதைய பெயர்ச்சியால் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்தது.

இனி அது மாறும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலை வாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன்-மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும்.

தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலை வாய்ப்பிலிருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன்பு குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழிலில் வளர்ச்சிபெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறை செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்கவைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். சக பணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது.

சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சகமாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.
சிம்ம ராசி

எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெறவேண்டுமென்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும்.

எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்யத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். திருமண வயதி னருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். எதைப் பேசினாலும் அவமானம், எதைச் செய்தாலும் தலைகுனிவு என்று கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த நிலை மாறும்.

உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்லத் தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எதையுமே சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலை பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம்.

சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரைஅணுகு வது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கக் கூடும். வேலையில் இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் தங்களது திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வும், பாராட்டும் கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு தக்க உதவிகள் அவ்வப்போது வந்து சேரும். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டியது வரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிறப்பு பரிகாரம்: வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
கன்னி ராசி

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே! குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டுமென்று விருப்பம் கொண்டவர்கள். விரய ஸ்தானத்தில் வரப்போகும் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து விடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.

வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதமான அணுகுமுறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். வழக்கு விவகாரங் களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிகட்டுவீர்கள். தம்பதியர் ஒ