Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 075  (Read 2237 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218357
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 075
இந்த களத்தின்இந்த  நிழல் படம் sameeraஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:38:05 PM by MysteRy »

Offline thamilan

உதயமென்பது விண்ணிலில்லை
உன் நெஞ்சினிலே
உலகம் என்பது மண்ணிலில்லை
உன் தோள்களிலே
சிகரமென்பது  மலையிலில்லை
உன் பணிவினிலே

ஒரு துளி அன்பு
ஒரு துளி நேயம்
ஒரு சிறு பாராட்டு
இது போதும் நட்புக்கு

விரிகிற வானம்
பெருகிய சூரியன்
நிறைகிற வெளிச்சம்
இது அனைத்துமே
நட்புக்கு முன்னாள் சிறிதே

பாடு சிரி பறவையாய் திரி
துயரத்தை தூர எறி
துள்ளித் குதித்து
வானத்தைத் தொடு

நண்பன் ஒருவன் கூட இருந்தால்
வானம் உனது வசமாகும்
வையம் உனக்கு தலை வணங்கும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
 கூடா நட்பு கேடாய் முடியும்
இது யோசிக்க வேண்டிய விஷயம்
இவ்வுலகில் நாம்  கேட்க காண பகிர
ஆரோக்கியமான விஷியங்கள்
ஆயிரம் உண்டு நண்பர்களே  !

சிலருக்கு கணவன் மனைவி தேர்ந்தெடுக்க
 உரிமை இல்லாத போதும்
 நல்ல நட்பை தேர்ந்தெடுக்க
 தடை சொல்வதில்லை  யாரும் ..!

உன் வாழ்நாளில் இவன் என் நட்புக்கு
  தகுதியானவன் என்று தோன்றும்
 நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல நட்பு கொள்
 அதுவே உன் மிக பெரிய சொத்து !!

அப்படி ஒரு நல்ல நட்பு கிடைத்தால்
அதை யாருக்காவும்  விட்டு கொடுக்காதே,
மனம் துவண்டு நீ நிற்கும் நேரம்
தூணாக வந்து துணை நிற்பான்..!

இயலாத குழந்தையை  தாங்கும் தாய் போல
உன்னை அரவணைத்து
உன்னை உனக்கே அடையாளம் காட்டுவான்
உனக்குள் இருக்கும் திறமையை
வெளிக்கொண்டு வருவான் ..!


உன் வெற்றியை அவன் வெற்றியாய்
கொண்டாடுவான்
உன்னை போட்டியாக கருதமாட்டான்
யாதொரு தீங்கும் உன்னை நெருங்காமல்
பார்த்திருந்து காப்பான்
 நீ  எட்ட நினைக்கும் தூரத்தை
கரம் கோர்த்து
உன்னை சாதிக்க வைப்பான் ..!


நல்ல நட்பிலே என்றும் சுயநலம் இருக்காது
நட்பு என்றுமே மனதை பலப்படுத்தும்
வாழ்க்கையை மேம்படுத்தும்
எந்த உறவு இல்லாமலும் வாழ்ந்து விடலாம்
ஒரு நல்ல நட்பு உடன் இருந்தால்..!
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Dong லீ

நிழலை அலசிய
நதியின் மடிநின்று
மனதை அலசிய
நட்பின் கணங்களை
எண்ணுகிறேன்
 உதட்டிலும் மனதிலும்
 புன்னகை
பல அடுக்கு மடிப்பிதழ்களாய்
உள்ளத்தில் படர்ந்த
எண்ணங்கள்
எல்லையில்லா அமைதியை
அள்ளித் தெளிக்கிறது
உலகில் எந்த ஓர்
மூலைக்கு போனாலும்
தாய் தந்தை
இன்ன பிற
ரத்த பந்தத்தால் ஆன
உறவுகளை பெற இயலவில்லை
ஆனால் அங்கும் ஓர்
நட்பு எனக்காக அமைகிறது
நதியின் உருவில்.
நட்பின் நினைவலைகளை
பிரதிபலிக்கும் நதியும்
நண்பனை போல் தான்

இவ்வுலகை சுற்றி
தாமி எடுத்து
சமூக வலைகளில்
நண்பர்களுக்கு பதிவேற்றுவதை விட
நண்பர்களை சுற்றிக்கொண்டு
தாமி எடுத்து
சமூக வலைகளில்
இவ்வுலகுக்கு பதிவேற்றிட
விரும்புகிறேன் நதியே
மெல்ல சிரி
கண் சொடுக்கி
சேமித்து கொள்கிறேன்
« Last Edit: July 01, 2015, 11:13:04 PM by Dong லீ »

Offline நிலா

ப்ரியசகி...

உக்கிர வெய்யிலில்
உச்சி குளிர மெத்தனமாய்
மெல்ல நடை போட்டோம்!

கை கோர்த்துக் கொஞ்சம்
கனவுலகில்  சஞ்சரித்தோம்!

இருவர்க்கும் பொதுவாய்
எத்தனை எத்தனையோ!

இலக்கியப் பித்து
LKG சிநேஹிதர்கள்
நிலா காயும் நேரம்
நெடுநடைப் பயணம்...


இவற்றுக்கெல்லாம்
இப்போது இடம்  இல்லை!

சற்றே உரக்க விளித்தால்
உடன் வந்து நிற்க -  அன்று போல்
என் பக்கத்து வீட்டிலும்  நீ இல்லை!

நம் தோழமை மட்டும்
எப்போதும்
என் மனதின் பக்கமாய்!


நேரமோ தூரமோ
நட்பின் தடையென
நம்பியதில்லை நாம்!

கண்ணில் படாத
ஏதும் கருத்திலே
நிலைப்பதில்லை என
நட்பறியா நல்லவர்
யாரோ
உளறிச் சென்றதை
உருப்போட்டதும் இல்லை நாம்!

நம் பால்யம் சுமந்து வரும்
உன் கடிதங்கள்
உறைமீது ஒட்டியிருக்கும்
உன் புன்னகை

நீ ரசித்த உலகை
நான் ரசிக்கக் கடை விரிக்கும்
உன் குண்டுக் கையெழுத்து

இவையெல்லாம் தான்
நம்மிடை வந்து சென்ற
சில பல வருடப் பிரிவை
இல்லை யென்றாக்கியவை !

வெறும்
'பேனா' நட்பன்று நமது -
உறவைப் 'பேணும் நட்பு'!


« Last Edit: July 03, 2015, 12:43:53 AM by நிலா »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
« Last Edit: August 18, 2015, 11:43:25 PM by Forum »