Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 077  (Read 2481 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 077
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetieஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:39:11 PM by MysteRy »

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
என்ன உலகமிது என்ன உலகமிது...

பசியினில் மனிதன் பரிதவித்து ..
தூக்கிலிட்டு..வாழ்விழந்து போகிறதே...


மனிதத்தின் உதவியின்றி
ஒரு சமுதாயம் உணவின்றி சாகிறதே..

உணவின் மேலே உருளுது ஒரு உலகம்..
உணவிற்காக உயிரைக் கரைத்து அலையுது ஒரு உலகம்..

பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை
பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை..

பசியில்லை என்றே மறுக்கின்ற குழந்தைக்கு
பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை..

ஏற்றமும் இறக்கமும் ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ மனிதனின் வாழ்வில்

உனக்கான உணவை..

அளவாக அருந்து பிறர்க்காக உனது..

உணவினைப்பகிர்ந்து
ஏழைக்கு உதவ நாளைக்கு என்றேன்

இன்றே ஏதும் செய்..

மானிட உணர்வை மனதினில் வை
மனித நேயத்தை மலர்ந்திட வை
இறைவன் இப்போது இளைப்பாறும் வேளை..
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பர்தர்க்கேற்ப உதவி செய்ய முன்வருவோம் ..



ருசி தேடி உண்ணும் கூட்டமும் இங்கேதான் பசியோடு வாடும் கூட்டமும் இங்கேதான்... ஏனிந்த நிலை  - சிந்தியுங்கள்
« Last Edit: August 27, 2015, 11:31:45 AM by MysteRy »
By

Ungal Softy

Anonymous1989

  • Guest
பகிர்ந்தோம்

ஆம் நாங்கள் பகிர்ந்தோம்
எங்கள் சுக துக்கங்களை,
எங்கள் துயரத்தை,
பிறர் பெற்ற சந்தோசம் ,
விளையாட்டு பொருட்களை,
விளையாடிய நேரத்தை,
நம் உடைமைகளை,
நம் உயிரை .
ஆம் நாங்கள் அனைத்தையும் பகிர்ந்தோம்.

நாங்கள் பகிர ஆரம்பித்ததோ கூட்டாஞ்சோற்றில்,
இன்று பகிர்ந்து கொண்டு இருப்பதோ அளவில்லா அன்பை.

அன்று பகிர ஆரம்பித்தது உயிர் நட்பை
என்றும் பகிர்வோம் எங்கள் உயிர்மூச்சை.

நட்பிற்காக என்றும் பகிர்வோம் உயிர் மூச்சை!


  -என்றும்  அன்புடன் அனானிமஸ்1989
« Last Edit: August 30, 2015, 11:33:12 PM by Forum »

Offline NiThiLa

                                                          பசி


கண்கள் இருள
காதுகள் அடைக்க
புலன்கள் மங்கி
கட்டியம் கூற
பசி என்னும் அரக்கன் வருகிறான்

எதிர்த்து போரிடும்
பசித்த வயிறுகள்
தோல்வி காண
வெற்றி விஜயம் தொடங்குகிறான்

புரியமால் அழும் சிசுவின் குரல்
புரிந்தும் வழியறியாது தவிக்கும் தாயின் கண்ணீர்
இவை கண்டு இயலமாஅயில் தீக்குளிக்கும் தந்தையின் மனது
இது தான் எங்கள் ஏழைகளின் அடையாளம்

இப்படிதான் தொடங்குகிறான் அவன் வெற்றி முழக்கத்தை
இன்னும் தொடரும் கடைசி ஏழையின் உயிர் துடிப்பு அடங்கும் வரை
இவை காணும் நேரம் மனது கேட்கும் கேள்வி

"" என்று ஓயும் இந்த பசிப்பிணி கோரம்
   அன்று கூறுவோம் நம் நாடு ஒளிர்கிறதென்று
   அது வரை செய்வோம் அடுத்த விடுதலை போர்
   வெற்றி காணும் வரை
""
[/size][/size]
« Last Edit: August 27, 2015, 11:32:44 AM by MysteRy »
bhavadhi

Offline SweeTie

பகல்  முழுவதும் பறந்து இரை தேடி பகிர்ந்துண்ணும்
காக்கைகள்போல்
திக்கும் திசையுமாய் அலைந்து போராடி பசி  போக்கும்
சிறுவர் கூட்டம்
புத்தகம் தூக்கி பள்ளி செல்லும் வயதினிலே  பட்டினியால் வாடும்
இளைய சமுதாயம்
ஜன்னல்கள் சட்டை போடும் நவ யுகத்தில் கந்தல்  உடையோடு உலாவரும்
ஏழ்மைச் சிறுவர்கள்

நாளைய பொழுதின் விடியலை நோக்கி யந்திரமாய்  ஓடும்
உலகம்  இது
தட்ட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தாலும்  கூச்சலிட
வேண்டும் ஒரு சமுதாயம்
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் தூக்கிவிடுங்கள்
அவர்களும் சேர்ந்து ஓடட்டும்
மானிடனே சிந்தித்தால் மட்டும் போதாது செயற்படு
எங்கே உன் மனிதாபிமானம்

 நாவுக்கு ருசியூட்டி  கேளிக்கை கூத்துக்களில் கொண்டாடுகிறது
நாகரிக உலகம்
ஒரு சான் வயிற்றுக்காக திண்டாடி மன்றாடி தினமும் மரணிக்கிறது
ஏழ்மை உலகம்
I  Pad இல் twinkle twinkle little star  பாடி உணவு உண்ணும் நவநாகரிக
குழந்தையும் இங்குதான்
உணவுக்காகத் தெருத் தெருவாய் பிச்சை  ராகம் பாடி வறுமைப் பிணி போக்கும்
சிறுவனும் இங்குதான்
இறைவனின் படைப்பில் ஏன் இந்த ஒர வஞ்சனை?   வாங்கி வந்த சாபமா?
முன்னோர் கொடுத்த பாவமா?

அவசர உலகத்தில் மறந்துபோன மனிதநேயம் விழித்துக்கொள்ளட்டும்
தட்டி எழுப்புங்கள்
நாளைய தலைவர்களுக்கு நல்லதோர் வழி பிறக்க செய்திடுவீர்
சிறு கொடைகள்
நல்லதோர் சமுதாயம் நாளை உருவாக வழங்கிடுவீர்  தினம்
ஒரு பருக்கை
வறுமையின் ஓலம் தணியட்டும்  நாடு நலம்பெறட்டும்
 
« Last Edit: August 27, 2015, 11:33:12 AM by MysteRy »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
« Last Edit: August 31, 2015, 07:19:25 PM by Maran »

Offline thamilan

ஏழைச் சிறுவர்கள் இவர்கள்
சிக்காமல் பறக்கும்
சோற்றுப் பருக்கைக்குப் பின்னால்
அலையும் இவர்களுக்கு
புல்நுனியில் அமரும் பட்டாம்பூச்சியை
பிடிக்க நேரம் ஏது

கண்ணீர் வெள்ளத்தில்
கரையேற துடிக்கும் இவர்களுக்கு
மழைநீரில் காகிதக்கப்பல் விட
நேரம் ஏது

வாழ்க்கையே இவர்களுடன்
கண்ணாமுச்சி ஆடும் போது
இவர்கள் எப்படி கண்ணாமுச்சி ஆடுவார்கள்

பசிக் கயிற்றில்
பம்பரமாக சுழல்பவர்கள்
பம்பரம் விட நேரம் ஏது

பூக்களை ஏந்த வேண்டிய இந்த
மெல்லிய காம்புகளில்
வாழ்க்கையின் பாரத்தை
ஏற்றியது யார்

திருட்டு கொலை கொள்ளை
இவற்றுக்கெல்லாம் மூலக்காரணம் என்ன
பசி தானே
இந்நாட்டின் நாளைய மன்னர்கள்
இந்தப் பசிக்கொடுமையால்
திருடர்கள் ஆவார்களோ இல்லை
பிச்சைக்காரர்கள் ஆவார்களோ
இறைவன் தான் அறிவான்

விருந்து விநோதமென
உணவை வீண்விரயம் செய்யும் கனவான்களே
நாய்க்கு கூட
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த உணவு
இங்கே ஏழைச் சிறுவர்கள் ஒரு நேர உணவுக்காக
நாயாய் அலைவது தெரியவில்லையா
உங்கள் கண்களுக்கு
 
தனிமனிதனுக்கு உணவில்லையேல்
இந்த ஜகத்தினை எரித்திடுவோம் 
என்று சொன்ன பாரதி
மறுபடி நீ பிறந்திடு பாரினில்
« Last Edit: August 27, 2015, 11:34:05 AM by MysteRy »

Offline ! Viper !

மூன்று வேளை
முழுமையாக உண்ணும் நமக்கு
தெரிவதில்லை
அதில் ஒரு வேளை உணவு மட்டுமே
இந்த பிஞ்சுகளின் மூன்று வேளைக்கான
உணவாய் இருக்கிறதென்று

உணவின் அருமை
உழவனுக்கு தெரியும்
பசியின் அருமை
ஏழைக்கு தெரியும்
பணத்தின் அருமை மட்டுமே
பணக்காரனுக்கு தெரியும்
பணம் என்னடா பணம்
அது இன்று வரும் நாளை போகும்

உழவனுக்கு தெரியும்
 ரூபாய் நோட்டுகளின் அருமை
ஏழைக்கு தெரியும்
சில்லறை காசுகளின் அருமை
பசி முதல் பணம் வரை அனைத்திலும்
ஏழை இன்னும் ஏழை ஆகிறான்
பணக்காரன் மேலும் பணக்காரனாகிறன்

இது யார் செய்த தவறு
நாம் ஒன்றிணைந்தால்
இந்த நிலை மாறும்
ஒரு ஏழையின்  பசியை
ஒரு வேளை ஆற்றி பாருங்கள்
அவர் தரும் புன்னகை என்ற பரிசு
உங்களுக்கு பெரிதாய் ஒன்றை சாதித்த
உணர்வை உண்டாக்கும்

இதை விட பணம் ஒன்றும் பெரிதாய்
சாதித்து விட போவதில்லை
பணத்திற்கு முன் மண்டியிட்டால்
எவர் முன்னும் உன் தலை நிமிர போவதில்லை
இறைவன் முன் மண்டியிட்டால்
எவர் முன்னும் நீ  தலை குனிய தேவை இல்லை
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
சிந்திப்பீர் செயல்படுவீர்

Offline Dong லீ

பாவமாய் இருக்கிறது !
நான்கு சுவருக்குள்
மனிதவியல் பூங்காவாய் வீடுகள்!
அதில் இயந்திரமாய் வாழும்
மனிதர்களை பார்த்தால்
பாவமாய் இருக்கிறது !!

உலகமே எங்கள் பெரிய வீடு!
சுவர்கள் கொண்டு நாங்கள்
எல்லை கோடிடவில்லை!!
இரவில் சுகமாய் உறக்கம்
நிலவின் காவலில் !
குளிர் தென்றலின்  தாலாட்டில் !!
காலையில் விறுவிறுப்பாய் விடியல்
சூரியனின் ஒளிச்  சிதறல்களில்!
குயில்களின் சிணுங்கல்களில் !!

இயற்கையை இயற்கையாய் ரசித்து
இன்பமாய் ஓர் வாழ்க்கையை
வரமாய் தந்த இறைவா !!
ஒரு வேளை உணவேனும்
நிம்மதியாக பொறுமையாக
உண்ண முடியாமல்
பணம் பணம் என
ஓடிக்கொண்டே
இந்த வாழ்க்கை சிறையில்
சிக்கியிருக்கும் பணம் படைத்த
மனிதர்களுக்கு விடுதலை தந்து
காப்பாற்று இறைவா !!

எங்களைப்போல்
உணவை பகிர்ந்து
நட்பை உணர்ந்து
உலகை ரசித்து
இயற்கையை அணைத்து
பணத்திற்கு அடிமையாகாமல்
நிம்மதியாய் வரம் போன்ற
ஓர் வாழ்க்கையை
அவர்களுக்கு தர முடியாவிட்டாலும்
சிறிதளவேனும் நிம்மதியான
ஓர் வாழ்க்கையை
அவர்களுக்கு தந்து
வாழ்த்திவிடு இறைவா !!