Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 072  (Read 2513 times)

Offline MysteRy

நிழல் படம் எண் : 072
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Socratesஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:36:23 PM by MysteRy »

Offline Maran

கையில் கிடைத்திருக்கிறது
அன்பின்
திறந்த புத்தமொன்று
சில இனிப்பான
பக்கங்களோடு !..

தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும் !
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும் !!
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நீ...
தோழியாய் கை கோர்த்தபோது
நான் இருப்பேன்
இறுதிவரை என்றேன்.,
சும்மா...எதுவரை என்றாய்.

நீயும் இருப்பாய்
நானும் இருப்பேன்
அதுவரை என்றேன்..!

எப்படி இணைந்தாய்
என்னோடு நீ !
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த தோழமையாய் !!

வெற்றிகள்..
சந்தோஷங்கள்..
துணிவு..
நம்பிக்கை..
தைரியம்..
அத்தனையும்
சரிந்து
தொலைந்து
மடிகிறது..
உன்
ஒற்றைப் ப்ரியத்தில் !!

உனக்கான காதலைப்பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறேன்,
நீயோ...
காதலே தெரியாதவளாய்
நடித்தபடி.!.
உனக்கு யார்
ஆஸ்கார் தரமுடியும்
என்னைத்தவிர.

ஒரே ஒரு தரம்
காதலித்துத்தான் பாரேன் !
பிடிக்கும் உனக்கு என்னை !!
யாரோடும்.....
எதுவும் முடிவதில்லை!!!

வாழ்வின்
அத்தனை கனவுகளையும்,,,
வலிகளையும்
கட்டிக்கொள்கிறேன்
உனக்காக நான் !


« Last Edit: February 09, 2014, 11:08:13 AM by Maran »

Offline bharathan

மனம் சேர்ந்தது
கை கோர்த்தது
இதயம் இடம் மாறியது 
இடைவெளி மட்டும் எதற்கு பெண்ணே
ஒன்றாவோம்
சிறகை விரித்து பறப்போம்

Offline தமிழன்

எங்கோ பிறந்த இருவர்
கரம் கோர்த்து
அக்கினிவலம் வந்து
வாழ்வில் மணமக்களாய் சேர்ந்தனரே

மணப்பொருத்தம் பார்க்கும்
மதிஇழந்த மானிடரே
மனப்பொருத்தம் பாரீரே
விளைவு
ஒரு பேனா போடும்
ஒரு கையெழுத்தால்
இணைந்தகைகள்  பிரிகின்றனவே

அன்பெனும் பசை தடவி
இணையும் கைகள்
ஆண்டவன் பிரித்தாலும் பிரியாது
காதலில் இணைந்திட்ட கைகள்
காலன் வந்திளுத்தாலும்
கணமேனும் அசையாது
« Last Edit: February 15, 2014, 07:43:35 PM by தமிழன் »

Offline PiNkY


என் அன்புத் தோழா இதோ என் கவி வரிகள்..
உனக்காக நம் நட்பின் கரங்களை இணைத்த அந்த
இனிய நினைவுகளின் சுவடுகளுக்காக..
 
துன்பத்தில் துவண்டு வீழ்கையில் ..
ஆறுதலாய்..!
கை கொடுத்த என் தோழனுக்காக
தடுமாறித் தலைகுனிந்த போது தாங்கித் தோள் கொடுத்த
என் தோழனுக்காக..!
என் அன்பார்ந்த நட்பின் கைகோர்த்த நினைவுகள்.,
என் கவிதைகளாய்

கண்ணீருக்கு உருவம் கொடுத்த போது.,
தோழனாய் கை நீட்டி துடைத்தவனுக்காக 
என் இனிய தோழமையின்.,
நாட்களின் நினைவில்
என் நினைவின் துளிகள்..

தோழா நம்மை இணைத்த நட்பின் கரம்.,
நட்போடு நாம் இறுதி வரை இணைந்து இருக்க விடாமல்
காலம் தான் நம்மை பிரித்ததேனோ.??

வாழ்கையின் ஓட்டத்தில் இயந்திரமாய்  ஓடினாலும்.,
என் தோழனே.!
உன் நினைவுகள் என்னில் ஓடாமல் இல்லை.!
நீயும் என் நினைவுகளுடனும்.,
நம் நட்பின் நினைவுகளுடனும்.,
கை கோர்த்து நடத்துக் கொண்டுதான் இருப்பாய் ..

என் தோழனே நீ எங்கே.?
இணைந்த நம் நட்பின் கரங்களை.,
காலம் விலக்கியதன் கண்ணீரின்
நினைவுச் சுவடுகளுடன்.,
தோழா உன் அன்பின் கரங்களை தேடுகிறேன்.,
என் சந்தோசத் தருணங்களில்.,
என்னை இரு மடங்கு சந்தோஷ படுத்தும் உன் நட்பிற்காக .!!

என் உயிர் தோழனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகள்.,
என் தோழனை பெருமைபடுத்தட்டும்.!
நான் சுவாசிக்கும் காற்றிற்கு தெரியும்.,
நம் நட்பை தான்.,
நான் சுவாசமாய் சுவாசிக்கிறேன் என்று.!!


Offline Anu


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நண்பனே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்!!!