Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 067  (Read 2069 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218363
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 067
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ananya அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 09:32:15 PM by MysteRy »

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
அனாதைக் குழந்தையின் பிறந்த நாள் பரிசுகள்


உயிரை வதைக்கும்
தனிமை கண்டு
கண்கலங்குவதேனோ
என்
செல்லப் பெண்ணே?

இந்த உலகம்தானடி
தனிமையில் தவிக்கிறது
உன் உறவின்றி...

உன்னில் -உனக்காக
வாழும் உன் மனம் நான்
நானும் கூட ஒரு
தோழிதான் உனக்கு!

என் கண்மணியே
கண்கலங்காதே!
உனக்காக ஆயிரம்
சொந்தங்கள்
உள்ளதடி
இந்த பூமியில்...

காலையில் உன்
பூ முகம் காண
ஓடி வரும் சூரியன்
உன் தந்தை!

இரவில் உன்னைத்
தாலாட்டி தூங்க வைக்கும்
வெண்ணிலவு
உன் தாய்!

தினமும் உன்
மூச்சுக் காற்றுடன்
கலந்து விளையாடும்
பூங்காற்று - உன்
சகோதரன்!

உன்னைப் பார்த்ததும்
மனம் உருகி
ஓடி வந்து
அணைத்துக் கொள்ளும்
வான் மழை
உன் தோழி!

என்னைவிட அழகா நீ?
என்று எப்போதும்
பொறாமைப் படும்
மலர்கள் உன்
சகோதரிகள்!

இத்தனை இருந்தும்
ஏன் நீ இன்னும்
கண்கலங்குகிறாய்?

இவை அனைத்தும்
கடவுள் உனக்காக -
நீ
பிறந்த அந்த நாள்முதலே
கொடுத்த பரிசுப்
பொருட்கள் கண்ணே!
« Last Edit: April 20, 2013, 10:38:14 PM by Jawa »

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
அந்தக் கால விழாக் கொண்டாட்டம்..
ஆடம்பரம் இல்லாமல் அன்பினை மட்டும் கொண்டது..
இப்போதோ.?
ஆடம்பரத்திற்காக மட்டுமே..
அன்பின்றி கொண்டாடும்  விழாக்கள் தான் அதிகம்..

புத்தாடைகள் உடுத்திக் கொண்டாடினால் தான் பிறந்தநாளா.?
இல்லாதோர்க்கு இருக்கும் உடைகளில் ஒன்றை தானம் செய்து..
கொண்டாடினால் அல்லவோ அது சிறந்த பிறந்தநாள்.. ??

பலவகை உணவுகள் வைத்து கொண்டாடினால் தான் பிறந்தநாள.?
சில வகை உணவுகளை ஏழைக்கு கொடுத்து கொண்டாடினால் அல்லவோ.?
அது உண்மையான பிறந்தநாள் ./

எதற்காக பிறந்தோம் என்று நினைத்து கொண்டாடாமல் இருப்பதாய் விட..
நாம் ஏதேனும் சாதிக்க பிறந்தோம் என்று நினைப்பை கொண்டு..
முயற்சி செய்தால் அல்லவோ.? அது உண்மையான கொண்டாட்டம்.?

பிறப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல
பிறப்பு நமக்கு கிடைத்த வரம்..
அதை பிறர் வாழ்த்த வாழ்ந்து காட்டுவதே .
பிறப்பிற்கும் நமக்கும் மரியாதை ..

பிறப்பை ஒரு சபதமாய் எடுப்போம்..
வாழ்வை  ஒரு சகாப்தமாய் வாழ்வோம்..



Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
என்னை இந்த உலகிற்கு  அறிமுக படுத்திய நாள்
என் வயது ஒன்றை கூட்டி காட்டும் சோதனை நாள்
பணம் கொண்டவர்கள் பகட்டை  வெளிக்காட்டும் நாள்
இல்லாதவன் கூட மனதில் சந்தோஷம் வெளிக்காட்டும் பொன்னால்
அந்த நாளை தெரியாதவர் உண்டு. ஆனால்  மறந்தவர் இல்லை ...

என் தாயின் கருவில் உதயமாகி என்னை
பெற்ற நேரம் மரணத்தின் வாயிலை தொட்டுவிட்டு
வந்த என் தாயே உனக்கும் இன்று பிறந்த நாள் தான் 
என்றும் உன்னை மறவேன் ...

என் வாழ்வுக்கு உங்களின் உழைப்பை கொடுத்து
நல்ல பிள்ளையை இந்த மண்ணில் வளர்த்து
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் விலை உயர்ந்த பரிசை
கொடுத்து உச்சி முகர்ந்த தந்தையே
என்றும் உன்னை மறவேன் ...
 
என் பிறந்த நாள் அன்று நான் கேட்பதை
  மறுக்காமல் வாங்கி  கொடுத்து
அன்றைய பொழுதை  எனக்கே எனக்கான
 நாளாய் மாற்றும் என் உடன் பிறப்பே
என்றும் உன்னை மறவேன் ...

என் பிறந்த நாளை மறவாமல்
வித்தியாசமான பொருளை
பொருள் உணரும் படி கொடுத்து என்னை
 வியப்பில் ஆழ்த்தும் என் தோழனே
என்றும் உன்னை மறவேன் ...

எந்த பிறந்த நாளையும் மறவாத நான்
இந்த பிறந்த நாள் நினைவில் கொள்ள வேண்டாம்
என்று இருந்தேனோ அதே பிறந்த நாள்
மாலை நேரம் என் FTC நட்புக்கள் என்னை மனதார வாழ்த்த
இந்நாள் என் வாழ்வின் மகிழ்ச்சியின் மைல் கல் ஆனது
என் நட்பு பூக்களே உங்களை என்றும் மறவேன் ...
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ
பாரீர் அள்ளிப் பருகமாட் டோமோ
செம்பவ ழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே

சுற்றி நிற்கும் குழைந்தைகள் கை தாட்ட
அன்பு வாழ்த்துகள் சொலும் பொது அந்த
சிறுமின் முகத்தில் தெரியும் அந்த சந்தோசம்
சொல்ல வார்த்தைகள் இலையே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
நம் வாழ்வின் ஒவ்வொரு ஆண்டும்
பிறந்த தேதி  நினைவு படுத்தும் நாள்
பிறந்தநாள் ...

வருடம் பிறந்தாள் உலகத்தில்
உள்ள அனைவரும் குதுகலமாய்
கொண்டாடும் நாள் ..

நாம் பிறந்தநாள் நம்மை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் நம் உறவினர்கள்
அனைவரும் குதுகலமாய் கொண்டாடும்  நாள் ....

நாம் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் சேர்க்கும் நாள்
பிறந்தநாள் ஒரு வருடம் என்ன சாதித்தோம்
என்று நினைவு படுத்தும் நாளும்கூட ...

நாம்கொண்டாடும்   நாள்
அர்த்தம் உள்ள நாளை அமைய வேண்டும்
 சந்தோசம் நம்மை சுற்றி
உள்ளவர்கள்கும் மட்டும் சேர்ந்தால்
அர்த்தம் மற்று போகிவிடும் ...

நம் அருகில் இருக்கும் நம்மை போல
பெற்றோரால் கைவிட பட்ட அனைத்து
உடன் பிறவாத பிறப்புகளுடன்
சந்தோசத்தை பங்கு போட்டு கொண்டால் ....

நம்மை ஒரு உறவு என்று நினைத்து
நம்மோடு சந்தோசத்தை பங்கு போடும்
உடன் பிறவாத பிறப்புகழலால்
மகிழ்ச்சி பலமடங்கு உயரும் ...

அவர்கள்கு நம்மால் முடிந்த ஆடை
அன்று முடிந்த அருசுவையான
உணவுகளை கொடுத்து ஆசிர்வாதம்
பெற்று வாழ்நாளை அர்த்தம்
உள்ள நாளை மாற்றுவோம் ..

ஆதரவு அற்ற உறவுகுகள்க்கு
ஆதரவு கொடுத்து அவர்களை
ஆனந்த படுத்தி அர்த்தம் உள்ள
நாளாகவும் வாழ்வில் மறக்க
முடியாத நாளாய் மாற்றுவோம்
« Last Edit: April 24, 2013, 04:45:54 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline RDX


மதமின்றி மொழியின்றி ஒரு தாய்
பிள்ளைகளாய் கைகோர்த்து  பாரபட்சம் 
ஏதுமின்றி வேறுதினம் பிறப்பெடுத்தும்
ஒரு  தினத்தில்  பிறந்தோம்  என
எண்ணி  பிறந்ததினம்  கொண்டாடும் 
இவர்களது அதிஷ்டமும் ஒற்றுமையும் 
தான்  என்ன. உதிரத்தில்  ஒன்றாய்  பல 
சகோதரங்களின்  அண்ணனாய் 
தம்பியாய்  பிறந்தும்  தனியோருதனாய் 
நாதியற்று  வாழும்  என்
துரதிஷ்டம்  தான்  என்ன . நட்புடனும்
ஒரு தட்டில் உணவருந்தியும்  மகிழும்
இவர்களினது 
கொடுபனவு  என்ன . தாய் தந்தை 
உறவிருந்தும்  இந்த  அநாதை 
இல்லச்சிராறாய் ஆவது  பிறந்திருக்கலாம் 
என்று  என்னும்  என்  நிலைதான்  என்ன .
உறவுகள் ஏதுமின்றி  பிறந்தும் பல
சகோதரங்களின் சகோதரர்களாய் வாழும்
இவர்கள் தான் அதிஸ்டசாலிகள் 
உறவுகளுடன்   பிறந்தும்  நான்  தான்
துரதிஷ்டசாலி . ஹ்ம்ம் ஏனிந்த
இறைவன்  என்  படைப்பில்  சூழ்ச்சி
செய்தானோபுரியவில்லை . இவர்களை 
போல்  நல்ல  நண்பனாய்
நல்ல  சகோதரனாய்  வாழா   எனக்கும் 
ஒரு  வரம்  வேண்டும்  இறைவா ..
« Last Edit: April 24, 2013, 10:46:10 PM by RDX »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கோடு போட்ட சட்டையினுள்
கொலு கொண்ட மனசுக்குள்
சில கோடுகளாய் உன் நினைவு

பள்ளி கண்டு பால்முகம் கொண்டு
பல்லை காட்டி சிரித்த அவ்வேளையில்
பாலிய நண்பனானாய்
பல தினம் அதில் சில பிறந்த தினம்
உன்னுடன் விழாக் கோலம் கொண்டதுண்டு .

வசீகரமான உந்தன் முகம்
என் அம்மா வசீகரியை வசீகரித்ததில் வியப்பில்லை
அம்மா தரும் லட்டுக்கு சண்டை இட்டோம்
கேக் செய்த சட்டியை வழித்து உண்டோம்
ரகசியமாய் திருடி ரகளை செய்தோம்
மிளகாய் பொடி போட்டு மாங்காய் தின்று
காய்ச்சல் கண்டோம்
வாசலில் போடும் கோலம் அழித்து
முதுகில்  கோலம் வாங்கினோம் .
மலையில் தம்பழ பூச்சி பிடித்தோம்
மெத்து மெத்தை உன்னை போல்
அழகென்று சொல்லி சிரிப்பாய்

ஆனால் கடந்த சில காலமாய்
என்னுடன் இல்லை நீ
எங்கிருக்கிறாய் நீ
என்நினைவு கொள்கிறாய நீ
எனக்காக பல இதயம் வாழ்த்தினாலும்
உனக்காக இங்கு
ஓர் இதயம் ஏங்குவது தெரிகிறதா தோழனே .