Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 064  (Read 2056 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218346
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 064
இந்த களத்தின்இந்த  நிழல் படம் HumaNoid அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:30:23 PM by MysteRy »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நிலவு இருட்டுக்கு அழகூட்டியிருக்கிறது .
தென்றல் இயற்கையின் சங்கீதத்தை
இனிமையாய் இசைக்கிறது

அலையலையாய் சிரித்து நுரைநுரையாய்
பொங்குகிறது கடல் .காதலர்களுக்கு
இயற்கை அமைத்துக்கொடுத்த
இலவச சிம்மாசனம் கடற்கரை 

பசுமை போர்வைபோர்த்தி நீல நிற வானவில்லாய்
கண்ணுக்கு விருதளிக்கிறது இயற்க்கை
ஆஹா ... இயற்க்கை இவ்வளவு
அழகாய் இருந்தும் இயற்கையை நேசிக்காமல்
மௌனமாய் வாழுகிறது இந்த மானுடம் .

இயற்க்கை இயற்க்கையாய் இருக்கிறது
இயற்கையின் அழகை ரசிக்காத
மானுட மரங்களை சுமந்து கொண்டு

இதுமரங்கள் உடைகளின் நிறம்மாற்றும் காலம்.
அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம்
பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள்
நெளிய இலைகள் எல்லாம்வானவில்
போர்த்திச் சிரிக்கும் வர்ணங்களின் மாதம்.

காற்றில் சூரியனின் வெப்பம் நகர
ஓராயிரம் குளிர்வேகத் தடைகள்
உருவாகும்.குளிரில் நடுங்கிக் கொண்டே
வெப்பம் இழந்த வெயிலை இழுத்துக் கொண்டே
முகிலிடை ஓடுவான் ஆதவன் இலைகளுக்கு இது
குளிர் முத்தக் காலம்.

இன்னும் சில நாட்கள் தான்,
இந்தக் குளிரும்
உறைந்து போய்,
மேகத்தை உருக விடாமல் உடைக்கும்.

உடைந்து வீழும் மேகத் துண்டுகள்
ஆடைகளைந்தமரமேனியில் ஆனந்தமாய்
கூடுகட்டும்


தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இருள் மெல்ல துயில் களையும்
காலைப் பொழுது
பகல் கொண்ட வெம்மை தணிக்க
பனி கொண்டு மூடி
படுத்துறங்கிய பகலவனும்
மெல்ல துயில் கலைவான் ..

மெல்லிய புல்தரையில்
சிந்திய பனி துளிகள் பட்டு
சில்லென சிலிர்த்தது புல்வெளி
கள்ளென போதை கொண்டு
தன் கண்களை மூடிக்கொள்ளும்
காற்று வெளி ..
கண்களை திறந்து
காண்பவை எல்லாம்
கண் நிறையும் கற்பனையில்
இறகுகளின் போர்வைக்குள்
இன்னும் ஒருக்களித்து
உறங்கும் ஒரு பட்சி ..

விரிகின்ற ஒளிக்காய்
படர்ந்து பரிதவிக்கும்
பனிப்புகார் தன்னுள்
மறைந்து விசிக்கும்
மரங்களின் குளிர்மை சொல்லும்
இதுவொரு இளவேனில் காலம் .

இயற்கையின் எழில் களையும்
இரும்பு மனம் கொண்டவர்க்காய்
வெளிகளுக்கு வேலிகள்
மரங்களுக்கு மரத்தடுப்பு
மனங்கள்போல்
மரமும் மடை மாறுமோ ..?
                    

Offline சிநேகிதன்

நிலவோடு உறவாடிய இருள்போர்வை
மெல்ல விலக ,அதிகாலை பனி சூழ,
புற்களை சிம்மாசனம் ஆக்கி,
பனித்துளிகள் அதன் மேல் வீற்றிருக்க ...

இரவும் முழுவதும் உறங்கிய அசதியில்
மரங்கள் துயில் எழுந்து சோம்பல் முறித்து
ஆதவன் வழங்கும்  ஒளி உணவிற்காய்
கீழ் வானத்தை நோக்கி எதிர் பார்த்திருக்க...
 
கதிரவனும் கண்ணை கசக்கி
துயில் எழ முற்பட 
சிறகுகள் விரிக்காத சிறிய பறவைகள்
அதை வரவேற்கும் வாத்தியங்களாய்
சங்கீதம் கற்காமலே  இனிமையாய்
குரல் எழுப்பிக்கொண்டிருக்கும்
இனிமையான காலை பொழுது.

தரு நிழலும் , தூய காற்றும் , வான்மழையும்
இயற்கையின் அணிகலன்கள் .
வளர்ந்துவரும் நாகரிக உலகம்
தன் தேவைக்கு இயற்கையை அழித்து
எதிர்கால சந்ததியை இருளில் தள்ள முற்படும்
அறியாமையை களைவோம்.

இயற்கை உணவுமுறை மாறியது.
மனிதனின் ஆயுளும் குறைந்தது.
ஊட்டசத்து குறைவு,தினமும் ஒரு புது வியாதி ,
தூய காற்றுக்கு தட்டுப்பாடு,
கணக்கிலடங்க புதிய வியாதிகள் .

கணினி மயத்தையும் , விண்ணுலகம் செல்லும்
வல்லமையையும் கற்று தரும் மானிடா  ..
இப்புவி இயங்க ஆதாரமாய் இருக்கும்
இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தையும் ,
அதற்குரிய வழிமுறைகளையும்
உன் சந்ததிக்கு கற்று தந்து
எதிர்காலத்தில் மனித இனம்
உணவிற்காய் அல்லல்படும் அவலம் களைய முற்படு. 


இயற்கையோடு ஒன்றிய நவீனயுகமே
வளமான வாழ்விற்கு வழி .
இயற்கை அன்னையை பாதுகாப்போம் .
நம் சந்ததி வளமுடம் வாழ உறுதி அளிப்போம்
« Last Edit: March 25, 2013, 04:58:05 PM by சிநேகிதன் »

Offline SaHaNa

பனி சூழ்ந்த காலையில்
பனி துளி சிந்தும் மரங்களில் நடுவில்
காத்திருக்கிறேன் நான்
அங்க இருக்கும் நாற்காலியை கூட கேடு பார்
அவை சொலும் நான் எனவனின் மேல இருக்கும் காதலை
மூன்று மாதங்களுக்கு முன்பே
இதே நேரம்
தேவைதைகளின் நல் ஆசி ஓட உன் முகம் நான் பார்த்தேன்
நீ கை பேசியில் இருக்கும் உன் அம்மா விடம் கோவித்து கொண்டு இருந்தாய்
உன் கோவங்கள் கூட குழந்தையின் மழலை போல் எனற்கு தோன்றின
அப்பொழுது பக்கத்தில் இருந்த மலர் சொனது
அடி கலியே உன் வெக்கம் சிவந்த கன்னம் பார்கையில்
எனற்கு குட வெக்கம் தோன்றுகிறது....
இனிக்கும் காத்திருகின்றேன் அந்த நொடி காக
ரொம்ப நாள் எனை தவிக்க விடாதே
தவிக்கிறது நான் இல்லை எனக்குள் இருக்கும் நீ!!!

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இயற்க்கை  இறைவனின் வரப்பிரசாதம்
இறைவனின் முதல் குழந்தை
இறைவன் படைப்பின் அதிசயம்
அதில் எத்தனை  அழகிய படைப்புகள் ...

காலையில்  கதிரவன் கண்திறக்க
இரவு மெல்ல இமை  மூட
பசுமையான காலை பனி
பாதையை மறைக்கும் மூடுபனி ...

சிறு சாரல் போல பனிபொழிய
மேனிஎங்கும் குளிரில் நடுங்க
என்னவனோடு கைகோர்த்து
கிளம்பிவிட்டேன் இயற்கையை ரசிக்க ...

குளிர்காணும் மரவேர்கள் ஆஹா ,
சிறுபுல்லின் மேல் பனித்துளி ஆஹா,
காலையில் மலரும் மலர்களின் வாசம் ஆஹா ,
என் மனமும் மணக்கிறது ...

காலையில் கிரிச்சிட்டு பறக்கும்
பறவைகளின் சங்கீதம் ஆஹா ,
வான் வெளியில் பிறந்த தூயகாற்று
சுவாசித்து பார்க்க ஆஹா அருமை ...

மோகம் கொண்டு அழைப்பு விடும்
வெண்மேகங்கள் ஆஹா ,
பூமிக்கு இறைவன் போடும்
வாசம் இல்லாத சாம்பராணி புகை ...

அழகிய அந்த பனிவிழும் காலை நேரம்
உன் கைப்பற்றி நான் இயற்கையை ரசிக்க
என்னை அறியாமல் தொலைத்தேனடா
முழுமையாய் என் இதயத்தை ...

என்னவனே காலை பூக்களோடு பேசிப்பார் ,
பனித்துளி கொண்ட இலையை தொட்டுப்பார் ,
பறவைகளின் கீதம் கேட்டுப்பார் ,
உலகம் உன் வசம் ஆகும் ...

இயற்கையை !
காதலித்துப்பார் !
ஒரு தலையாகவாவது !
ஒரு தடவையாவது !
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
வேகமாய் செல்லும் வாழ்க்கைப்பயணத்தில்
நிதாமனாய் மரங்களின் அழகைக் காணுங்கள்
காற்றின் இசைக்குறிப்போடு நெளிவுசுழிவோடு
தலையாட்டி மகிழும் அசைந்தாடும் இலைகள்

முகமெல்லாம் புன்னகைப்பூக்கும் பொம்மையோடு
விளையாடும் சின்னஞ்சிறு குழந்தையும் காணுங்கள்
என்றென்றும் மனதிலும் உடலிலும் தெம்புடன்
மனமெல்லாம் மகிழ்ச்சிக் பெருக்குடன் சந்தோஷமாய்

இயற்கையுடன் ஒன்றிவாழும் பூச்சிப்பொட்டுகள்
சாகவேண்டாமே உங்களின் காலடித்தடங்களில்
நம்மில் ஆயிரத்தில் ஒன்று பங்குகூட இல்லை
அதன் எடை சில நேரம் குறுக்கிடலாம் நம்வழியில்

பெரும்புயலில் ஒதுங்கிப்போவதல்ல வாழ்க்கை
அன்றி மழையோடு மழையாய் ஆடுங்கள்
புத்தும் புதுமலராய் பூத்திருக்கும் அழகுபூமி
இதற்கேன் நான் வலிமிகு சாபமிடவேண்டும்

விரைவான வாழ்க்கையின் நிதானநிமிஷங்கள்
கண்டுபருகுங்கள் இயற்கையின் அழகு இரவை
இயற்கை என்பது வரம் நமக்கான வரம்
அள்ளிப்பருகும் அழகோ என்றும் காணக்கிடைக்காது.