Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 062  (Read 2024 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218358
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 062
இந்த களத்தின்இந்த  நிழல் படம் MysteRy அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 11:17:43 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218358
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என
புழக்கத்தில் இருக்கும் வழக்கத்தை
வேண்டுமென்றே வேண்டாமென மறுதலித்து
ஆசைக்கு என் மீது ஆசை இல்லாததனால்
ஆச்த்தியின் மீதெனக்கு ஆசையில்லை  அணுவும்

ஏழேழு தலைமுறையின் ஆஸ்தியே நீதானென
என் பெயர் போற்றி  புகழ் பாட பிறந்தவன் நீ ...

பூஉலகின் மொத்த பூக்களினும் மென்மையினிலும் மேன்மையினிலும் சால சிறந்தவன் நீ .....

அங்குலம் அங்குலமாய் அழகு துளி நீர் பட்டு
அகமகிழ நீராடிடும் உயிருள்ள நீரோடை நீ ....

ஆடைதுறந்தும்  ஆனாலும் அழகாய் ஆனந்தமாய்
கோடியே  குளிர்ந்திட  குளிக்கின்ற  பாலாடை நீ.... 

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் புன்னகை நிலவோ
அலை போல் பொங்குது மனம்
உன் புன்னகையின் மலர்ச்சியில்
வாடித் தெரிந்தன மலர்கள்

உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது
உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்

பூக்கள் கூட தோற்று போகும்
உன் பூ போன்ற புன்னைகையால் 

கல் நெஞ்சம் கூட பஞ்சாய் மாறும்
உன் விரல்கள் தீண்டினால் 

இருள் கூட ஓளி  பெறும்
 நீ உன் கண்களை திறந்தால் 
இன்னிசை கூட சலித்து போகும்
உன் மழலை சிரிப்பை  கேட்ட

சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
சதங்கை அறுந்து சிதறியதோ
நித்தம் உனக்கே இதேவேலை
நினைத்தால் கோபம் வந்துவிடும்

பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
பின்னே உணர்ந்தேன் சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே
சிந்தை குளிர வைத்ததடி



« Last Edit: March 10, 2013, 01:16:02 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியே
நீ என்னை நனைத்துவிட்டாய்
உன்னை அள்ளித் தாலாட்டும் நேரங்களில்
என்னை அறியாமலேயே நான்
உன் துளிகளில் நனைந்து விட்டேன்
நீ மெதுவாக எனை அள்ளிச் சென்ற போது
நான் என்னை மறந்தேன்
உன்னை ரசித்தேன்..
உன் ஒற்றைத் துளி சாரல்
என்மேனி தழுவும் போது
மெய்மறந்து போகிறேன் நான்
உன் சாரல் மெதுவாக
என் உதட்டோடு உறவாடும் போது
துளிர்த்திடுமே சந்தோஷம்
பனித்துளியை என் பிஞ்சுவிரல்களில்
தொடுகையில் என்னுள்ளே உற்சாகம்
மெதுவாய் நீ என்னை முத்தமிடுகையில்
தொலைந்துபோகிறேன் உன்னுள்
என் கண்களில் நீ நனைக்கும் போது
துடித்திடுமே என் கண்கள்
நீ பூமியில் விழும்போது
உன்னைத் தொட்டது என் கால்கள்
பிற குழந்தைகள் உன்னைப்பார்த்து
ஓடும் நேரத்தில்
ரசித்தேன் நான் உன்னை.
இந்த பிஞ்சு வயதில்
ரசித்தேன் நான் மட்டும் உன்னை
நீ என்னிடம் பேசும் பாஷை
எனக்குப் புரிவதாலே..
நான் உன்னை எப்பவும் ரசித்தேன்
இந்த பிஞ்சு வயதில்
ஏனெனில் என்மேல் தூறும் சாரல்நீ
எனக்கு மட்டுமே தூறும் மழைச்சாரல் நீ
என்று என்றும் என்னுள் ஓர் உணர்ச்சி
சந்தோஷத்தில் உன்னை அள்ளி அணைத்தேன்
என்றும் உன்னை என்னுள் வைக்க ஆசைக்கொண்டேன்
ஆனாலும் முடியவில்லை என்னால்..
அப்பப்போ என் மேல்வீசும்
சாரல் நீ மழையே
அப்பப்போ வந்துபோகும்
சாரல் நீ மழையே
அப்பப்போ என்னைத் தாலாட்டவரும்
சாரல் நீ மழையே
மறுமுறை நீ எப்போ வருவாய்
என்று தினமும் காத்திருப்பேன்
மழையே என் மழையே...!!!

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
என் குழந்தை கால புகைப்படம் ஒன்றைக் கண்டேன் நான்....
பட்டுத் தெறிக்கும் தண்ணீர் துளிகள் நடுவில் நான்....

கண்டேன் நான்...அங்கே  கண்டேன் நான்....

மனதைப் பறிக்கும் பன்னீர் துளிகள் வாசனை நான்...
  தாய் சொல்லும் கண்ணீர் துளிகள் யோசனை நான்...

நடக்கத் தெரிந்தும் தூக்கிச்  செல்லப்படும் பல்லாக்கு நான்...
கன்ன தொகுதியில் முத்தச்  சின்னத்தின் செல்வாக்கு நான்...

அனைவரின் முன்னும் அழத் தெரிந்த வீரன் நான்...
           சூதுவாது சுழியமும் அறியாத சூரன் நான்...

இவையேதும் இன்றில்லை சொல்ல...
சுவையேதும் ஒன்றில்லை வெல்ல...

புகைப்படம் பார்த்து இறைவனிடம் கேட்டேன்....

                  மெல்ல சென்று கருவறையில் வைத்து விடு...
  இல்லை  மெல்ல கொன்று கல்லறையில் தைத்து விடு...




« Last Edit: March 13, 2013, 04:10:27 AM by User »
:)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அம்மா என்னை அடித்தாலும்
எனக்கு உன்னுடனே விளையாட பிடிக்கிறதே  .
கறுத்த மேகங்கள் கை கோர்த்து விட்டன
உன் வருகைக்காக ...

நானும் கூட  காத்திருக்கிறேன்
உன்னோடு விளையாட
அம்மா பார்க்கும் முன்பு வந்து
ஒரு முறை என்னை அனைத்து விடு ....

என் வீட்டு ஜன்னல் தொட்ட நீ
என் நெஞ்சை நனைத்து போ கொஞ்சம் .
காற்றோடு  சிறு நடனமாடி வரும்
உனக்கில்லை மரணம் ...

நொடிக்கு ஒரு முறை ஜனனம்
எடுத்து என்னை குளிர வைக்கிறாய் .
ஓடும் நீரில் ஓடம் செய்து உன்னோடு
நான் ஆட ஆகா ஆகா ஆனந்தமே ...

என் புன்னகையில்  பூ தோற்குமாம்
உன் அழகில்  நான் தோற்கிறேன் .
என் விரல் தீண்டலில் கல் நெஞ்சம் கரையுமாம்
உன் தீண்டலில் நானே கரைகிறேன ...

இசை கூட  சலித்து போகுமாம்
என் பேச்சை கேட்டால் .
எனகென்னவோ உன்னில் இருந்து
வரும் இசையே பிடிக்கிறது ...

வாழ்வின் அர்த்தம் உணர்கிறார்கள்
பெற்றோர்கள் என் வருகையால் .
வாழ்வின் வாழ்வாதாரம்  உணர்கிறார்கள்
ஒவ்வொரு முறையும் உன் வருகையால் ...

உன்னோடு சிரித்து சிரித்து விளையாடி
இரவு  உறங்கிய பிறகும் கூட
நான் சிரிக்கிறேன் கனவில்
உன்னோடு விளையாடுவதாய் உணர்ந்து ...
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline kanmani

என் செல்லமே
மேகங்கள் உன்னுடன் கொஞ்சி மகிழ
உன் மேல் விழுந்தது
மழைத்துளியாய் ...
மழையைக் கண்டதும்
குடையினில் ஒளிந்துக்  கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்
ஆனந்தமாய்  ...
குடையின்றி
முகம் நிமிர்த்தி கண்கள் மலர
மழைத் துளிகளை தேகம் முழுவதும்
ஏந்திக் கொண்டதில் தான்
எத்தனை எத்தனை ஆனந்தம் ...
கள்ளக் கபடமற்ற
உந்தன் சிரிப்பினில் மயங்கிதான்
அந்த தேவனும் மழையைப்
பொழிந்தானோ ...
பாலைவனத்தில்
தண்ணீரின்றி தவிக்கும் பறவை போல
உலர்ந்த சருகுகளாய் இருந்த
என் உள்ளம்
பட்டாம்பூச்சிகளாய் பறக்கிறது
உன் சிரிப்பினில் ....




« Last Edit: March 14, 2013, 05:00:33 PM by kanmani »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
கடவுளின் படைப்பில்
பல உயிரை படைதான்
அதில் மனிதனையும்
படைத்து விலைமதிக்க
முடியாத வரம் ஒன்றை
பரிசாய் கொடுத்தான்
மனிதனின்  சிரிப்பு !

மனிதனின் மனதில் மகிழ்ச்சி
நிறையும் போது ஏற்படும்
சிரிப்பு ஆனந்த சிரிப்பு !

புது நட்பினை பார்த்ததும்
பூ போன்று மலரும் சிரிப்பு
இயல்பான சிரிப்பு !

வாழ்க்கையில் முன்னேறும்
போது எழும் சிரிப்பு
தன்னம்பிகை சிரிப்பு !

கணவன் தன்  மனைவின்
கண்டதும் மதி மயங்கி வரும்
சிரிப்பு சிக்கன சிரிப்பு !

காதலன் தன் காதலியை
கண்டதும் தன்னையே
மறந்து சிரிக்கும் சிரிப்பு
காதலின் ஆழத்தை உணர்த்தும் சிரிப்பு !

தோல்வி நேரத்தில்
தன்னுடைய வலியை
வெளிபடுத்தும் சிரிப்பு
இயல்பு சிரிப்பு !

பல தோல்விகளை கடந்து
வெற்றி பெரும் போதும்
ஏற்படும் சிரிப்பு சாதித்தவனின் சிரிப்பு !

எல்லா சிரிப்பிலும் பொய் இருக்கலாம்
ஆனால் குழந்தையின் குறும்புதனத்தில்
வரும்  சிரிப்பில் தன்னுள் உள்ள
 கவலையும் மறந்து சிரிப்பார்கள்
 அதுவே உண்மை சிரிப்பு !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..