Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 060  (Read 2050 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 060
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Varun அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 11:16:21 AM by MysteRy »
                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விண்ணில் இருப்பதை போல் தன்னிகரில்லா
தானை தனிச்சிறப்பதனை

உன்னிலிருந்து இம்மண்ணும்  தனித்துவமாய்
திகழ்ந்திட

இரக்கத்தின் பிறப்பிடமாய் இருக்கும் எல்லாம்
வல்ல இறைவனின்

இறையருள்மிக்க அரும்பெரும் இரக்கத்தின் 
இக்கத்தினால் தான்

பொன்னான பெண்களுள் பெரும் மதிப்புமிக்க பெண்ணான

உன் அருந்தாயின் மணிவயிற்றினில்  சிலகாலம்
பெரும் தவமிருந்து

விண்ணிலிருந்து மண்ணிற்கு அரும்வரமாய் இறக்குமதியான
இறக்கு-மதி நீ,இரக்க-மதி நீ .......

வல்ல இறைவனின் வளம்நிறை இரக்கத்தின்
இறக்கத்தால் தானோ ?

உனக்கு"இரக்கமே"அருள்மிகு சிறப்பு பெயராய் இறங்கியது ..

இதயமுழுதும் மட்டுமின்றி, இம்மியளவும் கூட
இனிமை காட்டியதில்லை நீ

இருந்தும் இனியவளே உன் இனி நினைவின் கிறக்கத்தினில்
கிறங்கியவனாக

கிறுக்கிதள்ளிய கிறுக்கல்கள் தான் இக்கவிதை !!

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........

இருக்கும் வரை தெரியாது
அந்த உயிரின் மதிப்பு
அதில் முதல் இடம் உனக்கு .....

எனக்காய் நீ சமைத்து என் பின்னே வந்து
சிறு விளையாட்டு காட்டி என்னை
 சாப்பிட வைக்க சிரமபடுவாய் .....

இன்று அண்ணன் சமையலில் காரம் கூடிட
கண்கள் கலங்குது உன் கை பக்குவத்தில்
ஒரு பிடி சோறுக்காய் ஏங்குகிறது என் மனது  ...

தலை விரித்து போட்டே வைக்காதேனு திட்டி
எனக்கு எண்ணெய்  வைத்து சடை போட்டு ரசிப்பாய் !
 அப்போது என் முகத்தில் மட்டும் சிரிப்பு இருக்காது...
 
இன்றும் நீண்ட கூந்தல்  எனக்கு இருக்கு
நீ வந்து  எனக்கு எண்ணெய் வைக்க
ஏங்குகிறது என் மனது ...

நீட்டி படுக்க ஆறு அடி கட்டில் இருந்தும்
உன்னுடன் சுருண்டு படுத்துறங்கும்
சுகத்துக்காக ஏங்குகிறது என் மனது ....

பெண் பிள்ளை என்றதும்
பேரின்பத்தில் திளைத்தவளே !
நான் சோறுன்ன ஜிம்மியை
துணைக்கு அழைத்தவளே !....

என்னை அழகழகாய்
அலங்காரம் செய்து அழகுபார்தவளே !
சிக்கனமாய் செலவு செய்தவளே!....

என் தேவையின் போது 
மட்டும் சிக்கனத்தை மறந்தவளே ,
எனக்கு போட்ட முதல் தடுப்பு  ஊசியின் போது
மருந்து எனக்காய் .வலி உனக்குமாய் இருந்தவளே !...


உன் நினைவு வந்து உன் புகை படத்தை
நான் பார்க்கையிலே
சில நேரம் சிரிக்கிறாய் .....

சில நேரம் முறைக்கிறாய் ,
சில நேரம் ஆறுதல் தருகிறாய் ,
சில நேரம் அரவனைக்கிறாய் ....

சில நேரம் கண்டிக்கிறாய் ,
சில நேரம் என்னோடு பேசுகிறாய்
இப்படி பல முகம் காட்ட உன்னால்
மட்டுமே முடியும் அம்மா ....

என் நன்றியை நான் எப்படி உரைக்க
உன் முதுமை என்னும் குழந்தை பருவம்
வரும் போது  உனக்கு எல்லா பணிவிடையும் ....

செய்யும் பாக்கியம் கூட  எனக்கு இல்லையே
ஆதலால்  நான் தாய்மை அடைந்தாள் நீயே
எனக்கு மகளாய் வந்து விடு ...

பேசாத கல்லை வணங்குவது நம்பிக்கை
பேசும் அன்னையை  வணங்குவது தன் நம்பிக்கை
மனைவியை மதித்திடு தவறில்லை
ஆனால் அன்னையை துதித்திடு !
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
பத்து மாதம் கருவில் சுமந்து
இடுப்பு வலி பொறுத்து
உன கண்களில் நீர் வழிந்தாலும்
உன் தாய்மைக்கு அடையலாம்
நான் என்று ....

எனக்காக உன் விருப்பட்ட
உணவுகளை உண்ணாமலும்
உறங்காமலும் முத்து போல
பாதுகாத்து உன் சொத்தாய்
பெற்றாயே அம்மா ......

காடுகளை கழனியாய் மாற்ற
களத்து மேட்டு மரத்தில்
தொட்டில் ஒன்று கட்டி
ஆராரோ பாடல் பாடி -நான்
அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து ....

வெயில் என பாராமல் பச்சை உடலுடன்
வலி வேதனைகளை தாங்கிக்கொண்டு
வேலைகளை நீ செய்யும் நேரத்தில்
உன் பிள்ளை அழுகுரல் கேட்கவும்
ஓடி வந்து கொஞ்சி கொண்டே ...........

தொட்டில் இருந்து அவசரமாய்
என்னை தூக்கி மடியில் படுக்கவைத்து
ரத்தத்தை முறித்து பலாய் மாற்றி
என் பசி தீர்த்திடுவாயே
அம்மா !

நாட்கள் நீளும் போதும்- நான்
நடக்க நடை வண்டி இல்லாமல்
 நடை பழகி கொடுத்து தத்தி தாவி
நடந்து வரும் அழகை பார்த்து
ரசித்த ரசிகையும் நீயே அம்மா !

அக்கா படிக்கும் போது -அவள்
செய்யும் செயலை பார்த்து
படிப்பது போல அவள் புத்தகத்தை
தலைகீழாய் நான் வைத்து முனங்கிட
என் ஆர்வம் அறிந்து ஆசானாய் மாறினாயே அம்மா !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
சுமையைச் சுகமாக்கி
சுமந்து சுகமடைந்தாய்

உதிரத்தை அமுதாக்கி
உயிரூட்டினாய்

பத்தியச் சோறுண்டு
பாதுகாத்தாய்

முதல் உறவாய்
முதல் குருவாய்
முதல் இறையாய்
நிறைந்தாய்

என் உணர்வே
உன் உயிராய்
என் உறவே
உன் உலகாய்
மா(ற்)றினாய்

கைமாறில்லாக் கடனாற்றி
கடனாளியாக்கிவிட்டாய்
பாசம் பொழிந்து மழையானாய்
எனைக் காக்க நெருப்பானாய்
சிறகடிக்க விண்ணானாய்

தன்னலமற்ற தாயே...
நீயின்றி நானில்லையே
ஆயிரம் உறவுகள்
கொண்டாலும்
உனக்கு இணை இல்லையே...

கோயிலில் தொழுதாலும்
அங்கே புன்னகைப்பது
உன் முகம் தான்

கடவுள் கண்முன் வந்தால்
கேட்பேன் ஒரே வரம்
"மீண்டும் உன் கருவறையில்
ஓர் இடம்"
எனக்காக கண்ணீர்
சிந்தும் நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்

நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்

நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வரமாட்டாள்
துடித்து வருவாள்
அதுதான் அம்மா!!!!!!!

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
முந்நூறு நாள் பத்து மாதம்
எனை ஆண்டு, நீ மாண்டு மறு
பிறப்பெடுத்தாய் என் உரு காண,

பாலூட்டி சீருட்டி வளர்த்தாய் உன்
ரத்தம் முறித்து, இதைவிடவா சுவையாய்
இருந்துவிடப்போகிறது தேவர்கள் கடைந்த அமிர்தம்,

சுயநலவாதியாய் இருந்தாயே என்
தாயே அன்பு எனும் ஊற்றை ஊற்றிக்
கொடுப்பதில், எனக்கு,

என் தலையில் நீ போடும் ரெட்டைஜடை
சுங்கில் அறிவேனம்மா அவிழ்க்க முடியா
உன் அன்பின் உன்னதத்தை,

உடல் காய்ந்து உன் அணைப்பில்
அறியும் சுகத்தை நான் அறியேன்
அம்மா யாரிடமும்,

தலையணை சுகத்தை அறிந்ததே
இல்லையம்மா  உன் மடியிருக்க
என் தலை உன் மடியிறங்க,

கால் நடக்க வந்தால் உன் மனம் நோகுமோ,
சொல்லாமலே புரிந்து காலனி அவிழ்த்து என்
கால்வலி போக்குகிறாய் உன் கை ஒத்தடத்தில்,

தாயே நான் கண்ட பெண்களில்
தன்னிகரற்ற பெண் நீ, தன்னம்பிக்கையுள்ள
பெண்ணும் நீதானம்மா,

ஒருதாயின் கடமையை உன்னில் கண்டு
என்னிலாய் கொண்டேன், என் வாழ்வின்
முதல் குருவும், முதற் புள்ளியும் நீதானம்மா,

உன் வழி நடப்பேன், உன் பேர் சொல்லும்
பிள்ளையை நடப்பேன் அம்மா, என் பிள்ளை
என் பேர் சொல்ல....இது சத்தியம் என் தாயே!!!
« Last Edit: March 02, 2013, 09:00:37 PM by vimal »

Offline சிநேகிதன்

நினைவிலும் கருவிலும்
ஆசையாய் பிள்ளையை சுமந்து
இரத்த அணுக்களை உருமாற்றி
பாலாய் மாற்றி உணவாய் கொடுப்பவள் !

வீட்டுவேலை செய்தேனும்
தன் பிள்ளையை கல்வி அறிவு
பெறவைப்பவள் !

கைக்குழந்தை முதல் வாழ்க்கை இறுதி வரை
தான் பெற்ற குழந்தைக்கு வயது ஆனாலும்
என்றும் குழந்தையாய் பார்ப்பவள் .

பிள்ளை எங்கு சென்றாலும் நீ சீரோடும் சிறப்போடும்
வாழவேண்டும் என்ற நினைப்பில்  வாழ்பவள்  !

தன்னை கவனிக்கவில்லை
என்றாலும் தான் பெற்ற குழந்தை சந்தோசமாக
இருந்தாளே போதும் என்று நினைப்பவள் !

இவ்வுலகில் எந்த உறவுக்கும்
ஈடு சொல்ல முடியாத உன்னத உறவாய்... தாய் !!
 
தான் வளர்ந்து கவனிக்க படவேண்டிய
காலத்திலும் ஒரு நேர உணவுக்காக
தவிக்க விடுவதா நான் செய்யும் நன்றி?

ஒவ்வொரு மனிதனும் இதை சிந்தித்தால்
நாட்டில் முதியோர் இல்லம் என்பது
உரு தெரியாமல் இருந்திருக்கும்.
இன்று வீதிக்கொரு முதியோர் இல்லம் !

தாய் சிறந்த கோவிலும் இல்லை .
தாயை மதிக்காத எந்த பிள்ளையின் வேண்டுகோளையும்
கடவுள் செவி மடுப்பதில்லை.

கண்ணில் காணாத கடவுளை  பூஜிப்பதை விட
உயிராய் வாழும் தாய் வாழ்வதற்கும்
மனம் மகிழ்வதற்கும் ஆதாரமாய் இருப்போம்
நம்  உயிர் உள்ளவரை !

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அணுவளவும் தீங்கில்லா அன்பு போற்றிடும்
அன்னையின் அன்பிற்கு நிகரேது ....!
பக்கபலமாய் பல உறவிருந்தாலும்
அன்னை உறவிற்கு இணையேது....!!

அதிகாலை எழுந்து
அடுக்களை களைந்து
அமுது படைத்து
அன்பாய் மழலை செல்வத்தை
அன்பு பாராட்டி , நீராட்டி
சீராட்டி சீருடை அணிவித்து
படைத்த அமுதை பக்குவமாய் அளித்து
புத்தகப்பையை தன தொழில் சுமந்து
பள்ளி வாசல் வரை வந்து
பள்ளிக்கு அனுபிவைத்தாலும்
பிள்ளை கவனமாய்
கல்வி, கேள்விகளில்
கண்ணும் கருத்துமாய் உள்ளதா,
களைத்த வேளையில் உணவுண்டதா என்று
கவலையில் ஆழ்பவள் அன்னை .........!

அந்திசாயும் மாலை பொழுதினில்
பள்ளி முடிந்து வரும் பிள்ளையை
சுணக்கம் காமிக்காமல்
வணக்கம் சொல்லி
அன்பு ஒன்றே பிரதானமாய்
அன்பாய் அரவணைத்து
பரிவுகாட்டி, பள்ளியின்
அன்றைய நிகழ்வுகளை கேட்டறிந்து
பாடங்களை படிக்கவைத்து
படுத்துறங்க சென்றாலும்
அனுதினமும் தொடர்கிறது
அன்னையின் தவிப்பு ...!
அது பிள்ளையின் எதிர்காலம்
பற்றிய கணிப்பு ...!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்