Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 057  (Read 2101 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 057

இந்த களத்தின்இந்த  நிழல் படம் SiBiஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 11:13:42 AM by MysteRy »
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நினைவு ஓவியம் மாற்றங்கள் ஏனடி உன்னுள் விலகி செல்ல ஏனடி நினைத்தாய்
உன் தூரம் ஏனடி என்னோடு மட்டும் என் தவிப்பை ஏனடி மறந்தாய்
என் கனவை ஏனடி கலைத்தாய் பிரிந்த இமை கூட நொடியில் சேர
உன் பிரிவு மட்டும் சேராத தண்டவாளமனது ஏனடி
அழியாத நீல வானம் போல் உன் நினைவு மட்டும் கலையாத ஓவியமாய்
என்றும் இதயத்தில் இருக்குமடி

வர்ணிக்க வார்த்தை இல்லை
உனது கூந்தல் அசையும் ஊஞ்சல்...
உனது நெற்றி காண்போர்க்கு வெற்றி...
உனது புருவம் தென் துருவம்...
உனது கண் கரிசல் மண்...
உனது கன்னம் தேசிய சின்னம்...
உனது மூக்கு பளிச்சிடும் பல்லாக்கு...
உனது உதடு அழியாத சுவடு...
உனது பல் வைர கல்...
உனது நாக்கு கஷ்மீர் பள்ளத்தாக்கு...
உனது கழுத்து விளையும் நாத்து...
உனது கரம் கற்பக மரம்...
உனது விரல் குற்றால சாரல்...
உனது இடை கானல் ஓடை...
உனது நடை ராணுவ படை...
உனது கால் தங்க தாஜ்மஹால்...
உனது பாதம் தேசிய கீதம்...
உனது இதயம் புரியாத ஓவியம்...
எனது இதயம் நீ வாழும் ஆலயம்...




« Last Edit: January 27, 2013, 03:42:51 AM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

நான் என் மனக்கோட்டையின் ராணி
அரசியாக நான்  இருந்தால் என் மன
கோட்டைக்கு மகாராஜாவாக
மக்களின் தலைவனாக
அரசனாக நான் இருப்பேன்!

நான் ஷாஜகானின் காதலியாக   
மும்தாஜாக நான் இருந்தால்
தாஜ்மஹாலுக்கு காதலியின் நினைவு
சின்னமாக கலை ஓவியமாக
ஷாஜகான் இதயத்தில் கூடி இருப்பேன்!

நான் காதலன் மனதில் காதலியாக நான் இருந்தால்
காதலர் தின வாழ்த்துக்கு கவிதையாக
இலக்கணமாக காதலை வென்று
வீரப்பெண்மணியாக வீரநடை
போட்டு இருப்பேன்

நான் வண்ண பூக்களின் ராணிஆக இருந்தால்
மாலையிட்ட மணமக்களுக்கு
வாசமிகு நறுமலராக ரோஜாவின்
ராஜாவாக என்றென்றும்  அவர்கள்
மனதில் வாழ்ந்து இருப்பேன்

என் அன்பே...நீ இருக்கும் இடத்தில்
நான் இருப்பேன்நீ இறக்கும் இடத்தில்
நான் இறப்பேன்! அன்பே
தேவதைகள் ஆயிரம் தெருவிறங்கி
வந்தாலும் என் மனம் ஓடாது உன்னை விட்டு
ஆதலினால் காதல் கொள்கை வெல்லும்


Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
நேர் வகுடு எடுத்து படிய தலை சீவி
காதில்  தொங்கல் போட்டு
நெற்றியில் சாந்து  பொட்டிட்டு
அழகாய் மை இட்டு
தரை தொட சேலை கட்டி
கை நெறைய வளையல் போட்டு
தலை  நிமிராமல் நடக்கும்
தமிழ் பெண் எங்கே ?

சட்டென்று செல்ல
 சுடிதார்  தான் சரி என்கிறாய்  !
குனிய நிமிர வசதி என்று
குர்த்தா  அணிவது சரி என்கிறாய் !
பொது இடங்களில் நெரிசலை சமாளிக்க
பேன்ட் அணிவது சரி என்கிறாய் !
அழகான வளையல்கள் இன்று
காதுகளில் அணிவது சரி என்கிறாய் !

பள்ளிகூட  பென்சிலை விட பருவ பெண்
பொலிவுக்கான  பென்சில்கள் அதிகம்
பச்சை குத்தும் அக்கால பழக்கத்தை
இன்று கையில் காலில் பொரிக்க
ஐந்தாயிரம் தருகிறாய்
அழகு நிலையத்தில் இன்று !
முத்து மாலைகள் தொங்கிய சங்கு கழுத்தில்
இன்று கைப்பேசி மாலைகள் !

வெளியே தெரியா தாலி கொடிகள்
தாராளமாய் தெரியும் தொப்புள் கொடிகள் !
ஆறடி வளர்ந்த கருங்கூந்தல் அன்று
நித்தம்  ஒரு நிறத்தில் கூந்தல் இன்று !
வெற்றிலை போட்டு சிவந்த இதழ் அன்று
அரை நொடியில் மாறும் உதட்டு சாயம் மாயம் இன்று !

உடை நடையில் மாற்றம் எதற்கு
அழகான உள்ளம் தானே தேவை வாழ்வதற்கு
ஊதியம் வாங்க உழைக்கும் பெண்ணே
உண்மை சுதந்திரம் இதுவல்ல !
இதை எடுத்து சொன்னால்
எனக்கு பொறமை என்பீர்
ஆண்  மகன் உற்று பார்த்தால்
உரக்க சத்தம் போடுவீர்கள் !

உங்களை பொறுத்த வரை
உடன் கட்டை ஏறியது
தமிழ் கலாச்சாரம் தானே !
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வான் மகளும்
மஞ்சள் பூசும்
பொன்மாலை வேளை
வண்டுகள் திருடிய
தேன் எல்லாம்
வகை வகையாய் பத்துக்கும்
தேன்  மாலை ...
ஆதவனும் வீடு திரும்புவான்
ஆடு மேய்த்த
அருக்கானியும் வீடு திரும்புவாள்
பார்மகளும் மஞ்சள்
போர்வை கொண்டு
பொழுதை மூடுவாள்

கார் குழலில்
பூச்சூடி
கண்ணிரண்டில் மை தீட்டி
கமகமக்கும் அத்தர் இட்டு
கையிரண்டில் வளையல் மாட்டி
காதுகளில் ஜிமிக்கி ஆட
கன்னமதில் வெட்கம் பூக்க
நில மகளும் நாணும்
நீள் விழிகள் தொலை நோக்கும்

வண்டி கட்டி குதிரை பூட்டி
வருவேன் என சொன்னவர்தாம்
வருகின்றாரோ
அன்றில் வெறும்
வண்டினமாகி
மலர் விட்டு மலர் தாவி
மருகும் உளம் காணாது
ஒரு பொழுது தவிக்க விடுவானோ ..

வெறும் அகம் நோக்கின்
அகுது கெஞ்சும்
புறம் நோக்கின்
அகல்கள் கெஞ்சும்
இதழ் நோக்கின்
இனிமை கொஞ்சும்
உன் முகம் நோக்கின்
முழுதும் அஞ்சும்
என் முளுமைகளும் கெஞ்சும் ..

நிலவு கண்டு கூசும் வெண்மை
நினைவு கொண்டு தேடும் பெண்மை
கனவு கண்டு காளையர் பிதற்றும்
கட்டழகி கயல்விழி
தொட்டனைக்க வருவாரோ என
காத்திருக்கும் வேளைதனில்
எட்டி நின்றே வதைதிடுவானோ
இல்லை அருகில் வந்து
அணைத்திடுவானோ  ...?

                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
மாலை நேரம், மறையும் பொழுது,
மங்கள் ஒளி, ஆகாயம் செம்மண்,
கறைபடிந்து, கதிரவனும் கண்கூசி,
ஆடுமேய்க்கும் ஆயர்களும் வீடு
திரும்பும் வேளை,

மஞ்சள் மசித்து மாதவி முகத்தினிட்டு,
பட்டு மேனியை பட்டை தீட்டி,
கைகளுக்கு அழகுக் கவசமிட்டு,
புருவம் தூக்கி கண்களுக்கு அழகுக்கூட்டி,
காதுமடலுக்கு அசைந்தாடும் தேர் பூட்டி,
முகஅழகை முன்வைக்கும் மூக்குத்தி அணிந்து,
கட்டுடளுக்கு கண் கவரும் பட்டிட்டு,
சாயமில்லா சிகப்பிதழ் பிரிய,
முத்துப் பற்க்கள் மூன்று தெரிய,
தங்கத்தாமரையாய் ஜொலி ஜொலிக்க,
மங்கையொருவள் மன மயக்கத்தோடு,
புறம் சென்ற தலைவனை எதிர்நோக்கி,
அகம் குளிர, உடல் சிலிர, அவன்
அரவணைப்பில் திமிர, நிலவொளியில்
நித்திரை கொள்ளா இரவில் தினம்
திளைக்க காத்திருக்கும் குணவதியே,
வேலையிருப்பினும் வருகிறேன்
வெள்ளாமையாய் நானும் திளைக்க!!!



« Last Edit: January 30, 2013, 09:31:05 PM by vimal »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
மாலையிட்டவளோடு வசதியாய் வாழ
வழிதேடி நெடுந்தொலைவு வந்து
வாழ்வதற்கேற்ற செல்வம் சேர்த்தும்
வஞ்சி அவளை காணாமல்
வஞ்சிக்க படுவேனென
அஞ்சி அஞ்சியே  நீண்ட பயணம் - இன்று
சாயுங்காலம் ஆவதற்குள்
சாந்தபடுத்திட
சாரட்டு வண்டியில்  தொலைதூர பயணம் ......

மஞ்சள்பூசிய பார்மகளை
மையல் கொள்ளும்
விண்ணவனின்  தழுவலால்
பார்மகள்  நானிடும்
அந்தி சாயும் வேளையிலே
கால்நடை மேய்க்க சென்ற
காளையரும், கணிகையரும்
களைப்பாற வீடு திரும்பிட
கயல்விழியாளை  கண்டுவிடுவோமா....
கண்டு  கன்னம்தழுவிடுவோமா என
விரிகிறது என்னபயணம்..?

தனம் தேட வந்தும்
தளிராய் தனித்து
தவித்திருக்கும்
யுவதியை சுற்றியே என்
எண்ணமும் செயலும்...
இதயத்தில் குடிகொண்ட
இந்திரலோகத்து அழகி
இரம்பையாம் என்
இதயராணியை நினைத்துவிட்டால்
இயந்திரத்தால் ஆற்றமுடியாத  வேலைகளும்.
இலகுவாகும்...........!

என்ன அலைகளில் உள்ள
என்னவளின்  அழகின் முன்
மின்னும் நட்சத்திரமும்,
வின்னின் நிலவும்,
மண்ணின் பலவும் தோற்றுபோகும்..!

தன்னவன் வருவானேன என்மீதே
திண்ணமாய் இருக்கும்
மன்னவள்  மதிமயங்கி
தன்னிலை மறந்து துயரிலிருக்கும்
அன்னவளை அணைத்து அவளின்
கன்னமதில் இதழ் பதித்து என்
எண்ணிலடங்கா ஆசைகளை
எண்ணத்தில் நிறுத்தி
எண்ணியதை செயலாக்கிட
எத்தனித்து  புறப்பட்டேவிட்டேன் ...
என்னவளோடு சேர்ந்திட...!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அந்தி வரும் நேரம், என்னவளைக்கண்டு
செம்மையை பிரதிபலிக்கும் வானம்,
நிலவின் அழகிய ஒளியை வரவேற்கும்
அவ்வேளையில், மணாளன்  நான்

வருகையை விழிமேல் வழி வைத்து
காத்திருக்கும் மனவாட்டியே, என்னை
ஆட்டி படைக்கும் அழகு ராணியும் அவளே !

அவளின் அழகை வர்ணிக்க
வார்த்தைகளே இல்லை !
பளபளக்கும் தங்க மூலம்
பூசப்பட்ட தங்க தேரு அவளின்
பூ உடல் !

வெள்ளை சிப்பிக்குள் ஒலித்து
வைத்த கருப்பு முத்து
அவளின் மின்சார விழிகள்.....

வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி
போல படபடவென துடிக்கும்
அவளின் மின்மினி இமைகள்....

மீன் போன்ற விழிகளின்
மேலே வில் போல வளைந்த
கருமையான புருவங்கள்.....

அக்கினியை சாட்சியாய்
நான் பொட்டு வைப்பதெற்கென
காத்திருக்கும் அவளின் நெற்றி. ....

என் உயிரை என்னிடம் வந்து
சேர்ப்பதற்க்காக சுவாசிக்கும்
அவளின் அழகான நாசிதுளைகள்
அதில் அணிந்து இருக்கும் மூக்குத்தி
ஒரு அழகு...


பார்த்ததும் கடித்து சாப்பிடத் தோன்றும்
ஆப்பிள் போல கண்ணங்கள்
அதில் சிறு முக பருக்கள் அழகு ...

செர்ரி  பழ  நிறத்தில் சிவந்து
இதயம் போல வடிவு கொண்ட
அவளின் பிஞ்சு இதழ்கள் ....

அவளின் ரத்தம் சிவந்த உதட்டில்
வரும் ஒரு சிறு புன்னகை  பகைவனையும்
சரணடைய செய்யும்...

கடலில் தேடி எடுக்கப்பட்ட
பல பளக்கும் முத்து போல
ஜொலிஜொலிக்கும் அவளின் பற்கள் ....

அவளது மழலை மொழியால்
அனைவரும் மயங்கியே போவார்கள்
அவ்வளவு  இனிமை அவளது பேச்சு ...

கடல் அலையோரம் கரை
ஒதுங்கிய சங்கு. அவளின்
இன்னிசை சேகரிக்கும் செவிகள்.

கர்வத்தோடு திரியும் மனிதர்கள் கூட
ஒரு நிமிடம் மெய் மறந்து நிற்பார்கள்
அவளின் கருந்தோகை கூந்தல்.....

சொல்லி மாளவில்லை சொல்லாமல்
இருக்கவும் முடியவில்லை கலந்து
கலப்படமாய் என்னுள் நின்றவளை,

உன் காத்திருப்பில் என் தவிப்பும்
கூடுகிறது, நாம் இருவரும் ஒன்றாய்
இணைந்து வாழ்ந்துவிட !!!
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..