Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 056  (Read 2053 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 056


இந்த களத்தின்இந்த  நிழல் படம் Pavithra   அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 08:19:32 PM by MysteRy »
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உறவுகள் பல ஆண்டவன் படைத்தாலும்
தொப்புள்கொடி உறவே சிறந்தது
உதிரம் கொடுத்து பத்தரைமாத
தங்கமாய்,கருவறையில் சுமந்து
உன் மறுபிறப்பில் என் உரு கொடுத்தாய்!

நித்தம் தன் இரத்தம் முறித்து
உணவாய் கொடுத்தாய்,நித்திரை
கலைத்து தத்தம் தன்னை காத்தாய்
சிறு எறும்பு என் மீது ஏறினாலும்
எமனாய் மாறினாய் நீயே!

உன் நெஞ்சில் நிறைந்த
களங்கமில்லா பாசத்தை,பாடும்
தாலாட்டுலேயே உணர்வேன், நீ
ஊட்டிய நிலாச் சோற்றின்
சுவைக்கு ஈடாகுமா உண்பன அனைத்தும்!

நான் கலங்கும் வேளைகளில்
கண்ணின் கருவிழியில் வைத்து
தாங்கினாய், காலத்தால் அழிக்கமுடியா
உறவு நீ, அன்பின் துணைகொண்டு
ஆராயமுடியும் அண்டம் நீ!

எனை தாங்கிய ஏடாகிய
உன் தோள்களிலும்,மடியிலும்
காணாத சுகமா கண்டேன்
இன்று நான் துயிலும்
பஞ்சு மெத்தையில்!

நான் பிறந்த இம்மண் வாசனை
அறியுமுன் , அறிந்தேனடி உன்
வாசனை, தகப்பனென்ரு அடையாளம்
கொடுத்தவளும் நீதான் , என்
பண்பறிவை படைத்தவளும் நீதான்!

நான் உயர வளர்ந்தாலும்
தளரவில்லை உன் அன்பு
ஆடையென்ன அலங்காரமென்ன
கல்லாய் நிற்கும் கடவுள் கூட
காணிக்கை எதிர்பார்க்கிறது!

எதிர்பார்ப்பிலாமல் கிடைக்கும்
அன்பு, அன்னையின் அன்பு ஒன்றே
நம் சுவாசத்தின் சுதந்திரம் அவளே
முதர்கடவுளுக்கு முன்னோடியும் நம்
கண்முன் வாழும் தெய்வமும் அவளே

அனைத்தையும் அளக்க அளவுகோள்
ஆயிரமாயினும் அன்னையின்
அன்பை அளக்க அளவுகோள் இல்லை
அன்னையே அணையா விளக்கே
காலம் கடந்தாலும், கடலலைகள்
ஓய்ந்தாலும் , என் உயிர் பிரியும்வரை
நீ எரிய திரியாய் இருப்பேனடி!!!

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அன்பையும் கருணையையும்
ஒன்றாக எனக்கு கற்று தந்தவள் .
நான் தோல்வியில் துவண்ட நேரத்திலும்
வெறுமையில் வாடிய நேரத்திலும்
என்னை அன்பால் அணைத்தவள் ...

செல்லும் பாதை தெரியாமல்
அடைய வேண்டிய இலக்கு புரியாத
தடுமாறும் நேரத்தில் எனக்கு
கலங்கரை விளக்காய் இருந்தவள் ...

நேர்மையும் துணிச்சலையும்
எனக்குள் விதைத்தவள் என் தாய்
அவள் விருப்பம் நான் அறிந்தது இல்லை
என் விருப்பம் அவள் மறந்தது இல்லை ...

நான் விதைக்கப்பட்ட  நாள் முதல் அவள்
சிதைக்க பட்ட நாள் வரை மாறாமல்
இருந்தது அவள் காட்டிய அன்பு மட்டுமே
வளரும் போது தெரியவில்லை
வளர்க்கும் போது தெரிகிறது (தாய்மை )

இன்று என்னவனை நெஞ்சிலே சுமந்து
ஜென்மம் பல கடந்து நாங்கள்
வாழ்ந்த வாழ்க்கைக்கு பரிசாக
கிடைத்த பொக்கிஷம் நீ மகளே ...

ஈரைந்து  மாதம் சுமந்து வலிவாங்கி
என்னை பெற்றவளின் வேதனையை
நான் உணர எனக்கு சந்தர்ப்பம்
கொடுத்த என் தங்க மகளே ....

வெறும் புயலாய் இருந்த என் வாழ்க்கையை
வசந்தமாக்க  வந்தவளே உன் மழலை
பேச்சுக்கு என் முத்தங்களை உனக்காய்
பரிசளிப்பேன் நீ நடந்து பழக
உன்னுடன் நான் தவழ்ந்து வருவேன்
நீ கல்வி பயில நானும் உன்னுடன் படிப்பேன் மகளே ...

நான் இல்லாத நேரத்தில் உன் சேட்டை
தங்காமல், பூச்சாண்டி வருவான்
உன்னை பிடிக்க என்று சொல்லி உன்
வீரத்தை குறைக்க பார்க்கும்
சொந்தம் உண்டு கலங்காதே மகளே ...

நீ மேதையாக பள்ளியில் உன்னை
சேர்க்க சாதியின் பெயரை சொல்லி
அவனோடு சேராதே பேசாதேன்னு
வேதம் ஓதும் சாத்தானின் பேச்சை
கேட்காமல் நல்ல நட்பு கண்டு கொள் மகளே ..

பல திறமை நீ கொண்டு பல போட்டி
நீ  வென்று உன் சுய சிந்தனையில் முன்னேறு
நீயும் நலமுடன் வாழ்ந்து உன் சுற்றாரையும்
வாழ வைத்து அன்பால் ஆட்சி செய் மகளே ...

நீ அரவணைப்பதில் அன்னையாய் இரு
உரிமையாய்  கண்டிப்பதில் தந்தையாய்  இரு
தோழமையில் தோள்  கொடுக்கும் தோழியாய் இரு
எங்களுக்கு என்றும் அன்பை மட்டுமே வழங்கும்
அர்ட்சய பாத்திரமாய்  இரு மகளே ....
« Last Edit: January 18, 2013, 04:48:25 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
இருப்பதிரண்டு ஆண்டு கடந்து
என் கரடுமுரடான வாழ்க்கைக்கு
களை  நீக்கவந்த கயல்விழி
கண்கள் கொண்ட தாய் அவள்

கருவில் சுமந்தால் மட்டும் தான் தாயா ?
மனதில் சுமந்தாலும் தாய்தானே
என்னை மனதில் சுமந்து
என் சுமையை சுகமாக சுமந்தவளும்
அவளே !

தாய் பாசத்தையும் தந்தையின்
அன்பையும் ஒன்றாக கலந்த
கலவையாய் தந்து நிலையாய்
என் நெஞ்சில் நிறைந்தவளும் அவளே !

இருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு
நினைவு பொக்கிசமாய்
மரண வேதனையை கடந்து
அவளை போல அழகான குழந்தையை
பெற்று தந்தவளும் அவளே!

இரவு பகல் பாராமல் குழந்தையின்
நலன்கருதி தினம் தினம்
தான்  நித்திரை துளைத்தவலும்
 அவளே !

 குழந்தை அழுகுரல் கேட்டாலே
பதறி போய்டுவால் தன் குழந்தை
பசியால் அழுவதற்கு முன்னே
பசி அறிந்து தான்  இரத்தத்தை ....

பாலாக முறித்து பசியை
போக்குவதும் அவளே !
வீட்டில் பொத்தி வளர்த்த குழந்தையை
வீதியில்  கொண்டு வந்து வானத்தை நோக்கி ...

பறப்பது போல தூக்கி கொஞ்ச
மகிழ்ச்சி வெள்ளத்தில்
துள்ளிக்குதிக்கும் அன்பு செல்லத்தை
கண்டு ஆனந்தம் கொள்ளுவலும் அவளே !

என்னை ஆட்சி செய்யவந்தவலும்
என் வாழ்வில் ஒலித்தந்தவலும்
என்மனைவியும் ,குழந்தையும்
அவர்கள்கு சமர்ப்பணம் !,
« Last Edit: January 18, 2013, 04:06:12 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
விரும்பி வருந்தி
அணைக்க அழைக்கையில்
பழுப்புக்காட்டி ஓடி மறையும்
எதிர்பாரா நேரத்தில்
மனம் குளிர
மடியில் விழுந்து புரளும்......

சில சமயம்
பெரிய தோரணைக்காட்டி
சின்னஞ்சிறு கதைகள் பேசும்
பல சமயம்
கைக்கடக்கமாய்க் கிடந்து
பல அரியதை உணரக் காட்டும்....

கடலாய் மலராய்
காவியமாய் ஓவியமாய்
ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்
இன்சுவையும் கூட்டும்.....

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள்  சொர்க்கத்தைச் சேர்க்கும் ...

சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப்  போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

கணக்கில்லா முத்தங்கள் வாங்கினாலும்
கனிய  கொடுத்த முத்தத்தின் -ஈரம்
காய்வதற்குள் அடுத்த முத்தத்திற்காக ஏங்கி
காத்திருக்கும் குழந்தையின்
முத்தத்திற்காக தாய்...

தாய்,குழந்தை வித்தியாசம் தெரியவில்லை
இருவர்  முத்தத்தின் ஈரம் - தாய்
கொஞ்சி பேசுகையில் வித்தியாசம் தெரியவில்லை...
யார் குழந்தையென்று..

குழந்தையோடு கொஞ்சி,கொஞ்சி
சோறூட்டி மகிழையில் குழந்தையோடு தாயும்
தாயோடு குழந்தையும் -தாய் பாசம்!!
தாயின் கருவரைவரை சென்று மகிழ.....

தாயின் முத்தம் குழந்தை அழவில்லை
கண்களில் மகிழ்ச்சி !குழந்தை அழுகிறது
அப்பாவின் அன்பு முத்தம் மீசை
குத்துகிறது என்று ......தாயின் அணைப்பு
தனிமையை உணர்ந்ததில்லை
தழுவிக்கொண்டும் இருப்பதால்
« Last Edit: January 21, 2013, 04:58:54 PM by Bommi »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அழகிய நிலவாய்
உன்னை போல்
அரும்பாய் இருந்திருந்தால்
அனைவர் மனதிலும்
அழகாய் சிம்மாசனம் இட்டிருக்கலாம் ...

அளவில்லா கொஞ்சலும்
அன்பான கெஞ்சலும்
அட்ச்யமாய் கிடைத்திருக்கும்
பூ பூவாய் சிரிப்பும்
புன்னகையின் தேடல்களும்
உன் பிஞ்சு மனதின் கள்ளமில்லா சிரிப்பில்
கல கலவென பூத்து கமழ்ந்திருக்கும் .

வஞ்சமிலா நெஞ்சணைத்து
வளவளக்கும்  பாஷை கேட்டு
ஒவொரு உளறல்களுக்கும்
உருப்படியாய் வார்த்தை  தேடி
உவகை கொண்டு மகிழ்ந்திருப்பர்

சிரி இபொழுது மொத்தமாய் சிரி
வயதானால் உன் வாயை அடைக்க
வாலிபர்கள் காத்திருப்பர்
உன் வனப்பு மீது மோகம் கொண்டு
காமுகர்கள் வலை விரிப்பார்
காதலனால் நீ ஏமாற்ற படலாம்
கணவனால் வஞ்சிக்க படலாம்
நண்பனால் துரோகிக்க படலாம்
நயவஞ்சகங்கள் சூழ்ந்து
நலுங்கு பாடலாம் ..
ஆதலால் இன்றே சிரித்துவிடு
எதிர் காலம் உனக்கு எப்படி இருக்குமோ ..!!!
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.- குறள்

நாடு, நகரம், இனம்,ஜாதி,
மதம் இவை எதுமென்றி
உலகெங்கும் பேசும்  ஒரே
மொழி மழலை மொழி

தாய் தன்சேயை வாரி அணைக்கையில்
அமிழ்தாய் ஊறும்  உமிழ்நீரும்
அதோடு சேர்ந்த அமிழ்த மொழியும்
அதற்கு ஈடாய் பேசும் தாயும்
அந்த உளறல் மொழியில்தான்
எத்தனை அர்த்தங்கள்......!! 

வாய் பிதுக்கி, கைகளை  குவித்து
கால்களை  நீட்டி முடக்கி, விழி பேசி 
தலையசைக்கும், குறும்புகளை
ரசிக்கும் குணமிருந்தால்
அதன் ஒவ்வொரு குணத்திற்க்கும் 
ஆயிரமாயிரம் கதை புனைந்திடலாம்......!!

அள்ளி அணைத்திட  கெஞ்சும் மொழியிலும்
அதை  புறம் தள்ளும்  மழலையின்
ஆசையாய்  கொஞ்சும்  மொழியிலும்
ஆனாந்தம்  எத்தனை
மழலை பேச்சை எப்படி அறிவாளோ
தேவைஅறிந்து அளிப்பவள் அன்னை....!

விண்ணின் விண்மீனை போல்
வாழ்வில் ஒளிர என்றும்
குறுக்குவழியை  கையாளாதே
செருக்கை ஒழியென அறிவுரைப்பவள்
காலனாவிர்க்கு கூட  வழி இல்லையெனினும்
தம்பிள்ளையை  கலெக்டராய்
பார்க்க ஆவலுள்ளவள்  அன்னை....!!

ங்ஞாம்ம்  ம்மமா  ப்ப்பா ததாதா
மாமாமா ப்லலலா ம்ம்ம்ம்ம்ம்உம்.......
காகககக் தர்ர்ர்ர்ர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர்   ...............
(ஏதும் விளங்காவிடில்
மறுமுறை முயற்சியுங்கள் )
மழலை மொழி கற்க,  கற்று தர
பல்கலைகழகங்கள் தேவைஇல்லை..
மழலையோடு சற்று உரையாடினால்
நாமும் மழலையாவோம்....!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்