Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 052  (Read 1845 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 052

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Global Angel அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: August 27, 2015, 11:10:26 AM by MysteRy »
                    

Offline Gotham


சிதைவுண்ட நொடிகளில்
துவண்டு போகும் மனது
பட்டாம்பூச்சியென
சிறகுவிரித்து பறந்த காலங்கள்
நினைவுகளில் ஆங்காங்கே
இன்னும் ஒட்டிக்கொண்டு
தானிருக்கின்றன


கூடப்பறந்த பட்டாம்பூச்சி
எல்லாம் தத்தம் மலர்கண்டு
மலர்ந்துவிட
எனக்கான பூதேடி
சிக்கித் தவிக்கின்றேன்
தனிமையில்
பூங்காவனத்தினில்


கண்டவர் கொண்டிட
கொண்டவர் கொண்டாடிட
முகத்தினிலும் மனத்திலும்
சந்தோஷம் பொங்கும்
தருணங்களிலும்
எங்கோ ஓர் ஓரமாய்
இன்னும் வலிக்கின்றது
ஏக்கத்தில்


தனிமையான பொழுதுகளில்
நடைபயிலும் நேரங்களில்
கண்ணில்பட்ட
ரயில்நிலைய நாற்காலியும்
நானும் ஒன்று தானோ


எத்தனைபேர் இளைப்பாறி
சென்றாலும்
ஒவ்வொருமுறை ரயில்கூவும்
நேரத்திலும் என்போலவே
பூரித்திடுமோ நாற்காலியும்


வந்த ரயிலிலெல்லாம்
தேடித் தொலைந்த கண்கள்
நீ இல்லாத ஏமாற்றத்தை
சிதறுண்ட இதயம்
தாங்கும் முன்
ஆறுதலாய் இதோ
அடுத்த ரயிலுக்கான அறிவிப்பு


காற்று இருக்கும்வரை
காத்திருப்பேன்
உன்வரவுக்காக
நாற்காலியோடு நானும்...!!
« Last Edit: December 18, 2012, 05:12:00 PM by Gotham »

Offline தமிழன்


பாறையாக இருந்த மனதை
உன் பார்வையால் வெடி வைத்து அதை
பயிர் நிலமாக பண்படுத்தி அதில்
காதலெனும் விதை விதைத்து
காணாமல் போனவளே
காத்திருக்கிறேன் உனக்காக‌

காதல் செடியாகி கொடியாகி
மொட்டு விட்டு பூவாய் மலர்ந்து
கனியாய் கனிந்து
காத்துக் கிடக்குதடி காதலியே
காத்திருக்கிறேன் காதலியே
கனி பறிக்க வருவாயா

கை நாட்டாய் இருந்த என்னை
காதலெனும் கையொப்பம் இட‌
பழகித் தந்தவளே இன்று
என் தலையெழுத்தே மாறிவிட்டதடி
தரையிலே மீனாக‌
தத்தளிக்குதடி நீ(ர்) இன்றி என் ம‌ன‌ம்

வீதி விள‌க்கு பாதியும்
வின் விள‌க்கு பாதியுமாய்
ஒளிம‌ங்கிய‌ இர‌வில்
பாதையோர‌ இருக்கையில்
ப‌வள‌க்கொடியாய் நீ ப‌ட‌ர‌
கொலுகொம்பாய் நான் அணைக்க‌
பாதையோர‌‌ம‌தை ம‌ற‌ந்து பிற‌ர்
பார்ப்ப‌தையும் ம‌ற‌ந்து
உல‌கை ம‌ற‌ந்து போன‌ அந்த‌ நாட்க‌ள்

அதே இர‌வு ம‌றுப‌டியும்
அதே இருக்கைக‌ள் அருக‌ருகே
நானும் இருக்கிறேன்
நீ ம‌ட்டும் இல்லைய‌டி
என் நினைவே என்னை கொல்லுத‌டி
காத்திருக்கிறேன் காத‌லியே
க‌ருணை கொண்டு வ‌ருவாயா

ஒரு க‌ண‌மேனும் உனை பிரியேன்
உன் காத‌லை க‌ன‌விலும் ம‌ற‌வேன்
உறுதிமொழி த‌ந்த‌வ‌ளே இன்று
பிரிய‌ முடியாம‌ல் ம‌ற‌க்க‌ முடியாம‌ல்
த‌விப்ப‌வ‌ன் நான‌டி

இத‌ய‌மிருந்தால் அதில்
க‌டுக‌ள‌வேனும் என் காத‌ல் இருந்தால்
காத்திருக்கிறேன் உன‌க்காக‌ என்
கால‌முடிவுக்குள் வ‌ந்து சேர‌டி
« Last Edit: December 20, 2012, 02:03:35 PM by thamilan_sl »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வெறுமை நிறைந்த
மனச்சுவர்களில் எல்லாம்
தன்  கொடிய நகங்களால்
கீறிச்செல்கிறது
உன் நினைவலைகள் ...
உதிரமாய் சிந்தும் -என்
உணர்வுச் சிதறல்களை
பொறுக்கி எடுத்து
புசித்து மகிழ்கிறது என் தனிமை ....

உன்னை ,உன் நினைவுகளை சுமந்தே
என் செறிவிழந்து சருகாய் உதிர்கிறேன் .
என்னை தாண்டி செல்லும்
எவரும் நீயாய் இருக்க மாட்டாயா ?
தேடலில் ஆலாய் பறக்றது
சருகாய் உதிர்ந்த மனம் ..

என்னை தீண்டும் தென்றலிலும்
உன்னை தழுவிய விரல்களை
தேடி அலைகிறது காதல் மனம் ...
நீ நடந்த பாதகைளில்
சருகாய் கடந்தேன்
வருவாய் என எண்ணி ..

என்னை கடந்து எவர் போகினும்
உன்னை கடக்க இயலா மனது
ஓர் சாலை ஓரத்தின்
இரட்டை நாற்காலியில்
ஒற்றையாய் காத்திருக்கிறது ...
ஒரு முறை
மழையாய் என்னை அணைத்துவிடு
என் சருகான வாழ்வும்
உனக்காய் முடியட்டும் .

                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வாகனத் திரள் மிகுந்த‌
இந்த சாலையின் மனிதர்கள் யாரும்
தம் விழிமணிகளை
என் மேல் குவிப்பதே இல்லை
 
மிகை போதையில்
தன்னிலை மறந்து விழுந்து கிடக்கிற‌
ஒரு குடிகாரனை
நெஞ்செழும்புகள் வெளியே தெரிய‌
ஒட்டிய வயிறுடன்
தாங்கவியழா பசியில்
மயங்கிகிடக்கிற பாதைசாரியை
உதாசீன‌ செய்வ‌தை போல‌வே
என்னையும் க‌ட‌க்கிறார்க‌ள்
 
என் காத்திருப்பு
என் த‌த்த‌ளிப்பு
என் த‌னிமை
என் ஏக்க‌ம்
என் வேத‌னை
என் காத‌ல்
எதுவும் எதுவும்
உன்னை போலவே
அவர்களுக்கும் தெரியவில்லை
 
இந்த‌ ம‌ர‌நார்காலியின்
நிற‌மிழ‌ந்த த‌னித்த‌ ச‌ருகைபோல‌வே
வெளிறி கிட‌க்கிறேன் நானும்
 
வெறுமை த‌ன்னுடைய
அனைத்து ராக‌ங்க‌ளையும் இசைத்து
துன்பத்தின் தீபங்களை சுற்றி ஏற்றி
அத‌ன் வெளிச்சத்தின் கூர்வெம்மையின்
வதைவுக்கு என்னை உள்ளாக்குகிற‌து
 
தார்ப்பாலையாய்
கரிய புகைச் செறிந்த காற்றுடன்
நீண்டு படுத்திருக்கும் இந்த சாலையின்
வாகனங்களின் இரைச்சல் புயலில்
என் அழுகையின்
என் புலம்பலின்
என் முணுமுணுப்பின்
குர‌ல்க‌ள்
ஒலியிழந்து போகின்றன‌
 
ஒரு வெட்டவெளிப் பொட்டலில்
பூவுக்காய் அலைந்து கொண்டிருக்கும்
வண்னத்துப்பூச்சின் தேடலை
போல ஆகிவிட்டது
உன் வரவுக்காய் காத்திருக்கும்
என் காதல்
அன்புடன் ஆதி

Offline RDX

          என் தனிமையின் இரவுகள்

என் கற்பனைக்கு வடிவம் கொடுத்து
என் கனவுகளிற்கு விடை கொடுத்து
நினைவுகளை மட்டும் என்னிடம்
விட்டு சென்றால். ஒரு நொடி பார்வையில்
ஆயிரம் வார்த்தைகள் பேசும் அவள்
கண்கள் மட்டும் அன்று  ஏன் தான்
பேசாமல் மௌனித்ததோ புரியவில்லை
அவள் கண்களில் பூசியிருந்த  மை
கரைய என் மனம் கலங்கியது அவள்
கன்னத்தில் கை வைத்து ஏன்டா செல்லம்
அழுகின்றாய் என்ற போது மனம்
உருகியது. அவள் கண்ணீரின் அர்த்தம்
மட்டும் புரியமால் கலங்கி நின்றேன்.
அவளும் கடைசியாக தோளில் சாய்ந்து
போலம்பினால். ஒரு விநாடி பொழுதில்
கைகள் நழுவியது. அன்றுதான் மெளனமாக
பிரிந்தோம். ஒரு சில நொடிகள் மட்டும்
பிரிகின்றா போது வலிகள் புரிந்ததில்லை
தனிமை உணர்ந்ததில்லை.இன்று மட்டும்
தனிமையின் உண்மையான ஆழத்தை
உணர்கின்றேன். ஆனாலும் அவள்
நினைவுகளை பகிந்து கொள்ளும் அந்த
இரவு மின்னோளிகள் அந்த அமர்கைகள்
அந்த மௌனமான இரவுகள் பொழுதுகள்
மட்டும் காத்திருகின்றனா நம் வரவிற்காய்.
நானும் அவள் வருக்காக காத்திருக்கின்றேன்.
அவன் நினைவுகள் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் இப்போது கவிதைகளே நன்றியுடன்
RDX
« Last Edit: December 21, 2012, 05:26:36 PM by RDX »

Offline Rainbow

இந்த மனித சமூகத்திலிருந்து
விலகி அந்நியமாய்
தனிமையின் சமவெளியில்
தவிப்புகளோடு நிற்கிறேன்
 
என்றைக்கேனும் ஒரு நாள்
நீ வரக் கூடும்
என்ற நம்பிக்கையோடு
 
உன் அன்பின் நீரின்றி
உலர துவங்கிவிட்ட என் காடு
தனது இலைகளை எல்லாம்
இந்த மரபெஞ்சில் உள்ள‌
சருகைகளை போல்
ஒன்றொன்றாய் உதிர்க்க‌
துவங்கிவிட்டது
 
என் இதயமும்
என் காட்டின் இலைகளுடன்
ஒரு சருகாய் உதிர்ந்து
மக்கி மண்ணாவதற்குள் வந்துவிடு

உன் குளிர் காலங்களுக்காய்
எரிக்க சுள்ளிகளும்
கொஞ்சம் உலர்ந்த இலைகளுமாவது
மிஞ்சியிருக்கும்