Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 051  (Read 2799 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 051

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Gotham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: August 27, 2015, 11:09:42 AM by MysteRy »
                    

Offline தமிழன்

இன்றைய இளைஞர்கள்
நாட்டில் முதுகெழும்புகள்
மலையோ பனியோ
முட்டி மோதி தகர்த்திட துடித்திடும்
இளரத்தங்கள்
நஞ்சோ அமிர்தமோ
பருகிப் பார்த்திட நினைத்திடும்
இளம் பருவத்தினர்

ஆக்கமும் ஊக்கமும் கொண்ட‌
இளைஞர்கள் அழிவுப் பாதையில்
போவதும் ஏன்
நாகரீக மோகத்தால்
நகர வாழ்வின் மாற்றத்தால்
திசைமாறீப் போவதும் ஏன்

இன்றைய இளம் பெண்கள்
பாரதி கனவு கண்ட‌
புதுமைப் பெண்கள்
ஆணுக்கு நிகர் பெண்கள் -அதை
அறிவில் காட்டுவதை மறந்து
பார்களிலும் டிஸ்கொத்தேகளிலும்
ஆட்டம் போட்டு காட்டுகிறார்கள்

குத்துவிளக்காய் சுடர்விட வேண்டிய‌
பெண்களின்று கொலுவிளக்காய்.
நாகரீகம் செய்த கோலமல்லவா இது

பெற்றோர்க‌ள் சிந்திய‌
விய‌ர்வைத் துளிக‌ள்
இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் கையில்
ம‌துக்கோப்பைக‌ளில் நிர‌ம்பி வ‌ழியும் ம‌துக்க‌ளாக‌
பெற்றோரின் க‌ன‌வுக‌ள்
பொசுங்கி சாம்ப‌லாகின்ற‌ன‌
போதைப் பொருட்க‌ளாக‌
ம‌காத்மா காந்திக்கு
வ‌ந்தே மாத‌ர‌ம் போல‌
இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு
'ஓப‌ன் த‌ பாட்டில்'

நாக‌ரீக‌ம் என்ப‌து
க‌ண்ணுக்கு பூசும் க‌ண்மை போல‌
அள‌வோடு இருந்தால் அழ‌காக‌ இருக்கும்
அள‌வுக்கு மீறினால்
அவ‌ல‌ட்ச‌ண‌ம் ஆகிவிடும்
« Last Edit: December 10, 2012, 11:42:06 PM by thamilan_sl »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
நாகரிக பெண் அன்று பட்டு பாவாடை  உடுத்தி
பவனி வரும் தேருபோல -தெருவில் வந்தால்
தெய்வம்  தேவதை  போல உடை அணிந்து
பவனி வரும் போது  கை எடுத்து கும்பிட தோணும் ..

இன்று தலையை முடியை -காற்றில்
பறக்கவிட்டு பக்கத்தில் வரும்
கண்களை மறைத்து விபத்துக்கு
உள்ளாகும் நாகரிகம் ..

உடலை மறைக்க வேண்டிய உடையை
 நாகரிகம்  என்ற பெயரில் ஆடை குறைப்பு
செய்து மது என்னும் போதைக்கு
அடிமையாகிறாள் மாது ...

பெண்கள் நம் நாட்டின்  கண்கள்
பாரதி கண்ட புதுமை பெண்
நம் நான்டின் பாரத தாய் என்று
மதிக்க படும் நம்நாடு பெண்கள் ...

இன்று பெற்றோர்   உழைத்த பணத்தில்
பார்ட்டி என்னும் பெயரில்  செய்யும் லூடி
 குத்து விளக்கு  பிடிக்க வேண்டிய
கையால் குடிபோதை  பாட்டில் ....

நாகரிகம் என்ற பெயரில்  சீரழியும்  பெண்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை
முழங்கிய பென்கன் சீரழிவுகள்  தானா
என்றும் என்னும் சுழல் இன்று ....

அன்று பெண் செருப்பு அணிந்து
நடந்தால் பாதத்தில்  அணிந்த
வெள்ளி கொலுசு சத்ததில்
மெல்லி இசையை உணரலாம் ...

இன்று காலனி என்று பெயரில்
சின்ன நாற்காலியை அணிந்து
ஒய்யார நடை போட்டு போகும்
பெண்களை பார்த்தால் கண் கூசும்  நிலை ...

தாயாய் மதிக்க  படவேண்டிய பெண்கள்
நாகரிகம் என்னும் சாக்கடையில்  விளதீர்கள்
ஒரு பெண்ணின் நடைமுறையில் தான்
வீட்டுக்கும்  நாட்டுக்கும்  நல்ல பெயரை தறமுடியும் !
அதனை உணர்ந்து செயல்படுங்கள் !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

பழையன கழிதலும்
புதியன புகுதலும் மரபாம் ..
கழிந்தது பலது
புகுந்தது பலி இது ...

பார் போற்றும் பண்பு
பலர் நாடும் பண்பாம்
தமிழர் தம் கலாச்சாரம்
கள்ள சாராயம் ஆனது ஏன் ...

கரை தட்டும் பாவாடை தாவணி
கால் தொடை தட்டும் மிடி ஆனதேன்
கேட்டால்
வெக்கை என்று சொல்லி ஒரு
விதமாய் சிரிப்பவரே
வெட்கம் கெடுகிறது
வேர்விட்ட புது கலாச்சாரம்

புல்லுரிவிபோல்
படர்ந்துவிட்ட போதை அதை
எதை வைத்து எடை போட
எண்ணம் எது கொண்டு கவி பாட ...

வண்ண வண்ண ஆடைகளும்
வாலிபரின் சேட்டைகளும்
வயாகரா போல உடல் அமைப்பும்
வயது வேறுபாடற்ற உறவாடலும்
வழுக்கிவிட்ட  கலாச்சாரம்
மேல் நாட்டின் சொந்தம் அன்று
இன்றோ மேல் நாடு போற்றிய
பண்பாடு நமை தழுவ
கீழ்நாடு துறந்த பண்பாடு
அணைத்து  கொள்கிறது
அயல்நாட்டை ....

இடைதொட்டு நடை பட்டு
வண்ண ஜடை இட்டு
நுதல் திலகமிட்டு
கழல் நோக்கும் கண்களின் அழகும்
பாதி துறந்த மேனியில்
பளபளக்கும் ஒற்றை வைரமும் கொடுபதில்லை
கையில் மிதக்கும் போதைகளும் அளிப்பதில்லை

பாரதி கண்ட புதுமை பெண்ணே
பார் ..ரதி ... கண்ட புதுமைகளும் உனக்குள் வேண்டாம்
களை  பறித்து கலை கதை படைக்கும்
கண்ணியமான நம் கலாச்சாரம் போற்றுவோம் .
                    

Offline Rainbow



பப்பும் மப்பும் மலிந்து விட்ட இந்நாளில்
தப்பும் தவறும் தணிந்து போகுமா என்ன
கன்னியரும் காளையரும்
கண் தெரியா நாகரிகமும்
கட்டுண்டு கிடப்பது
அயஹோ 
படைத்தவனுக்கே பலதடவை
தலைவலி வந்திருக்கும் .

தினம் ஒரு பெண்டிர்
தினம் ஒரு பப்பு
விதம் விதமாய் மப்பு
மங்கையரும் சளைதவரிஇல்லையாம்
சகபாடியாய் கை கோர்க்கிறார் பாரும் ...

பெற்றவரும் உற்றவரும்
மானம் போகுமளவுக்கு
உட்கொள்ளும் மதுபானம் பெரிதோ ..
கட்டவிழ்ப்பது காளையர்க்கு தகும்
கண்ணியம் இழப்பது பெண்டிர்கு அழகோ
என்று புரியும்
நீர் அணியும்
பாவாடை தாவணியும்
பட்டு சேலையும்தான்
பார்பதற்கு கிறக்கம்
பழகுவதற்கும் அடக்கம்
புரிந்து கொள்ளுங்கள்
நாகரீகம் நமை நாசபடுத்த அல்ல

Offline Gotham

விடியலுக்கு முன்எழுந்து
விண்ணவன் உதயனை
வரவேற்றான் மனிதன்
தன்வேர்வை சிந்தும் நேரத்தில்


பொழுதோடு உழைத்து
பொழுதுபோக்காய்
பொழுது போனபின்
வாழ்க்கையை கொண்டாடினான்


வாழ்வை கொண்டாடினான்


மனைவிமக்கள் உறவுகளொடு
தொடங்கியது கொண்டாட்டம்
நாட்களும் போனது
அறிவியலும் வளர்ந்தது
இடையில்
மனிதமும் மரித்தது


கொண்டாட்டங்களுக்கு மட்டும்
குறைவில்லாமல்
பிள்ளை பிறந்தால் கொண்டாட்டம்
வயதுக்குவந்தால் கொண்டாட்டம்
கலியாணத்திற்கு கொண்டாட்டம்
சாவிற்கும் கொண்டாட்டம்


கொண்டாட்டம் இல்லையேல்
மனிதன் வாழ்வோ பெரும்திண்டாட்டம்


தப்பேதும் இல்லை கொண்டாட்டங்களில்


கொண்டவனுடன் ஆடும்
கொண்டாட்டங்கள் முடிந்து
கொடுத்தவனுடம் ஆடும்
ஆட்டங்கள் வந்தனவே


மதிகொண்டால் தன் மானம்
தடுக்குமென
மதிகெடுக்கும் குடியுடன்
இவர்கள்
ஆடும் ஆட்டம்
கலாச்சாரத் திண்டாட்டம்


கொண்டாடுவோம்
தன்னை தன் நிலை
மறவா நிலையில்..


வாழ்க மனிதம்..!!!