Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 050  (Read 2685 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 050

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Shruthi அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: October 11, 2018, 08:06:37 PM by MysteRy »
                    

Offline தமிழன்

திருமணங்கள் இரு மனங்கள் சேர்வதேயன்றி
இரு உடல்கள் சேர்வதல்ல‌
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து
நிறைபிறை பார்த்து
நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள்
கோர்ட் வாசல்படி மிதிப்பதும் ஏன்

அன்பு எனும் பாசக்கயிரால் இணையாத‌
எந்தத் திருமணங்களும்
வெறும் வெள்ளைத்தாளில்
இரண்டு கையெப்பங்களால் இணையும்
எந்த திருமணங்களும்
விவாகரத்து எனும் ஒரு கையெழுத்தால்
இரண்டாக பிரிந்து விடும்

மனித மனங்கள்
வேறு வேறு அதில்
ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
வேறு வேறு

க‌ண‌வ‌ன் ம‌னைவி இருவ‌ருமே
இர‌ண்டு நேர்கோடுகள்

இவையிர‌ண்டும் ஒன்றுசேரும் போது
நேராக‌ சேர்ந்தால் அது
குடும்ப‌ம் எனும் கூட்ட‌லாக‌ அமையும்
அதே நேர்கோடுக‌ள்
குறுக்காக‌ இணைந்தால் அது
விவாக‌ர‌த்து எனும் வ‌குத்த‌லில் முடியும்

திரும‌ண‌ம் எனும் நூல் கொண்டு
ஒன்று சேர்க்க‌ப்ப்ப‌ட்ட‌ இர‌ண்டு ம‌ன‌ங்க‌ள்
விவாக‌ர‌த்து எனும்
க‌த்திரிக்கோல் கொண்டு
பிரிக்க‌ப்ப்ப‌டுவ‌து எத‌னால்?
ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொள்லாமை
அதீத‌ எதிபார்புக‌ள்
விட்டுக் கொடுக்காமை
இவையே கார‌ண‌ காரிய‌ங்க‌ளாகும்

குறையில்லாத‌ ம‌னித‌ன் எவ‌ரும் இல்லை
எந்த‌ குறைக‌ளையும்
நிறைவாக‌ மாற்ற‌த் தெரிந்த‌வ‌ர் வாழ்வு
சொர்க்க‌மாகும்
குறைக‌ளை ம‌ட்டும்
வாழ்க்கையாக‌ நினைப்ப‌வ‌ர் வாழ்வு
என்றும் ந‌ர‌க‌மாகும்
« Last Edit: December 07, 2012, 11:13:45 AM by thamilan_sl »

Offline Global Angel

கண்வழி புகுந்து
கருத்தது சேர்ந்து
கால ஓட்டத்தில்
கட்டிக்கொண்ட
காதல் இதயங்கள்தான் ...

முற்றிய பலா பழத்துள்
முழுதும் மறைந்திருந்தாலும்
தன்  தெள்ளிய சுவையை
தெவிட்டாது கொடுக்கும்
பருத்து வெடித்த பலா பழம்  போல்
நம்முள் முற்றி வெடித்து
கனிந்து கசந்தது காதல் அமுதோ ..?

எதனை எதனை இன்பப் பேச்சு
எளிதில் மறக்குமா அந்த மூச்சு ...
ஒன்றல்ல இரண்டல்ல
பல பத்தாண்டுகள் தாண்டி
பரவிவிட்ட கற்பனைகள்
கடிவாளமிட்ட குதிரையாய்
கனைத்து  கவிழ்த்து போனதேன் ..

உனக்கு வேண்டாம் எனக்கு வேணாம்
நம் இருவருக்குமாய் இரு குழந்தை
ஆணொன்று பெண் ஒன்று
அளவான அன்புகுடும்பம்
உன் அருகேயான என் நாட்கள்
உன் அன்போடான என் ஆயுள்
அறுந்து தொங்குவதன்
ஆத்ம பதில் என்னவோ ..?

என் கனவுகளை புசித்த உனக்கு
அதற்க்கு உயிர் கொடுக்க மனதில்லை
என் மன கருவினில் சுமந்த உன்னை
கரு சிதைவு செய்ய நீ தயங்கவில்லை
காதல் எனும் போது  தூங்கிய
ஜாதி , மதம் , இனம் , அந்தஸ்து எல்லாம்
கல்யாணம் என்றதும் கண் திறப்பு செய்தது ஏன் ..?
உன் கல்யாண மேடையில்
என் காதல் தூக்கில் இடும்வரை
நம் கனவுக்  குழந்தைகளுடன்
காத்திருப்பேன் உனக்காய்
...
                    

Offline MysteRy

பருவத்தின்      இமயமாம்   இளமை
இளமையின்   இமயமாம்   காதல்
காதலின்          இமயமாம்   இதயம்
இதயத்தின்      இமயமாய்   என்னவள்

அழகின் ஆதிமூலமே அயர்ந்து போகும்படி
அழகான அனைத்திற்கும்,
சவாலான அன்னமவளை,
அணுஅணுவாய்
அனுபவித்தே காதலித்தேன்.

காதலின் வரையறைகளை மட்டுமின்றி
காதலுக்கான வரையறையையும் தகர்த்தெறியும்படி
தடையின்றி பாய்ந்திடும் காட்டாற்றுவெள்ளமாய்
தளிர்நிறைந்த தாமரைக்கான தடாகமாய்
தடையேதும் துளியுமின்றி தன்னிறைவாய் ,
தெள்ளத்தெளிவாய்த்தான் காதலித்தேன்.

என் உடலுக்கு உறுதுணையான உயிரானவளே !
உன் உயிருக்குயிரான இரு சிறு உயிர்களின் பொருட்டு
உடலோடு ,உயிரையும் உனக்காய் அர்பணிக்க தயாராய் நான்.
தூரமான  ஊர் ஒன்றே  உனக்கும்  எனக்கும் இடையூறு .

பூவிதழ்மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் விலகுதல்போல்
உன் மனசோகம் மொத்தம் தீர்க்கவருவேன் ஓர்நாள் .......

Offline Rainbow

பிரியமானவளே
பிறப்புக்கு அர்த்தம் தந்தவளே
இன்று பிரிவுக்கு ரத்தம் கேட்கின்றாயே
ஞாயமா சொல்லடி ...?

உணர்வோடு ஒன்றி
உயிரோடு கலந்தவள்
உணர்ந்தும்
உயிருள்ள பிணமாக
உருமாற்றம் செய்வதேனோ ..?

கடல் கடந்து பொருள் ஈட்டியபோதும்
உன் உணர்விழந்து வாழ்ந்தறியேன்
என் ஊன் உறக்கம் உடல் பொருள்
ஆவி அனைத்திலும்
உதிரமாய் கலந்தவளே
 என்  ஊமை மனதும்
உறைந்து போகும் அளவுக்கு
உன் நம் பிரிவு உருக்குலைக்குதடி ...

வந்துவிடு
வாழ்வின் மறு பாதியையும்
மகிழ்வோடு வாழ்ந்திடனும்
வரமாக வேண்டாம் ...
சாபமாகவேனும் நீ வேண்டும் என் அருகில் ...

Offline Gotham

நிறைவானவளே
என் நிறையானவளே!!


பிரிதல் தான் முடிவெனில்
வாழ்வில் தனிமை
முடிவிலி இல்லா
முடிவாம்


வார்த்தைகள் தவறியது
உண்மைதான்
வருந்தி மன்னிப்பு
கேட்பினும் கேளாமல்
சென்றாயே அன்பே!


சட்டென்று உன்னை
சிரிக்க வைத்ததும் அதே
வார்த்தைகள் தான்
இக்கணம் உன்னை
பட்டென்று விலக
சொல்வதும் அவ்வார்த்தை
தானோ


காலங்கள் உருண்டோடி
நாமிருவர் நமக்கிருவர்
ஆனபின் இன்னும் என்ன
நமக்குள் பிணக்கு
இன்னும் நம்
வாழ்க்கை ஏட்டில்
எழுதவில்லை இந்த கணக்கு


விட்டுவிடு வீண்பிடிவாதம்
இறைஞ்சிக் கேட்கிறேன்
பிள்ளைகள் மட்டுமல்ல
நீயில்லாமலும் வாழ்தலினும்
சாதல் பெரிதாம்


உலக மக்கட்தொகையில்
ஒன்றை குறைத்த பாவம்
வேண்டாமடி உனக்கு
உன்கோபம் தணிந்து
நீவரும் அந்நாளே
இனி திருநாள் எனக்கு...!


மன்னிப்பாயா..!!!!