என் தோழன் மாஸ்டர்காக மட்டும்இணையத்தில் இணைந்த இனியவனே..
நட்புக்குள் பொய் இல்லை...
பொய் இருந்தால்.
அது நட்பே...இல்லை....
நட்பை தந்து நட்பினை
உணர்த்தியவன் நீ ..
வேஷமிகு உலகில்
உள்ளம் தொடும் பாசத்தை
பரிவோடு தந்தவன் நீ...
தனிமையை நேசித்தேன்
கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய்
தனிமை மறந்தேன்...
பாசத்தை காட்டினாய்
பரிவாய் பேசினாய்
குறும்பாய் சிரித்தாய்
தேடலை உணர்த்தினாய்
தூக்கத்தை மறந்தேன்
அளவில்லா சந்தோசத்தை
உன் அன்பால் உணர்ந்தேன்
மாறும் உலகில் மாறாத
உறவாய் இருப்பவனே
தோல்வியில் மரித்தேன்
நட்பு தந்து உயிர் தந்தாய்
விட்டு கொடுத்து போவதுதான்
நட்பின் இலக்கணமாம்
உன்னை விட்டு இலக்கணம்
படிக்க விரும்பவில்லை..
உனக்கான உறவுகள் ஆயிரமிருபினும்
எனக்கான உறவாய்
என்னுயிர் தோழனாய்
என்றென்றும் நீ மட்டும் போதும்....
நட்பெனும் சொல் அழிந்தே போயினும்
நம் நட்பு அழியாது
நான் அழியும் வரை...
