Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 048  (Read 2192 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 048

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் RDX அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 08:02:33 PM by MysteRy »
                    

Offline தமிழன்

கல்லறை மலர்களே
காலத்தால் அழியாத ஓவியங்களே
எம் தமிழ்மொழிக்காய்
எம் தமிழினத்துக்காய்
கல்லறைக் காவியங்களான‌
ஒவ்வொரு மாவீரர்களுக்கும் எனது
கண்ணீரஞ்சலி

இது கல்லறைகள் அல்ல‌
காவியங்கள்
இங்கே புதைக்கப்பட்டுல்லது
உடல்கள் அல்ல‌
விதைகள்
அவை மண்ணிலல்ல
ஒவ்வொரு தமிழர் மனதிலும்
புதைக்கப்பட்டிருக்கின்றன,
புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கின்றன‌
அவை வேர் விட்டு துளிர் விட்டு வெளிவரும்

த‌மிழ் எங்க‌ள் உயிருக்கு ச‌ம‌ம்
உயிர் எங்க‌ள் ம‌யிருக்கு ச‌ம‌ம்
என‌ உல‌குக்கே உண‌ர்த்திய‌வ‌ர்க‌ள்

கனவுகள் சுமக்கும் பருவதிலே
கைகளில் துப்பாக்கி சுமந்து
காதலித்தவர் வருவாரா என‌
கண்கள் ஏங்கும் வயதில்
கயவர்கள் வருவாரா என‌
கண்மூடாமல் காத்திருந்து இன்று
கண்மூடித் துயில் கொள்ளும்
கல்லறை காவியங்கள்

தமிழனை புல்லாக நினைத்து
ஏறி மிதித்திட்ட மதிகெட்டவரை
மிதிவெடியாகி
மிதித்தால் வெடித்திடுவான் என
பத்தடி விலகிப்போக வைத்ததும்

பற‌த்தமிழன் என்று சொன்ன ஈன‌ர்க்கு
நாங்கள் மறத்தமிழன்
தமிழ் மானம்காக்கும் தமிழன் என‌
உண‌ர்த்திட்ட‌ எங்க‌ள் உட‌ன்பிற‌ப்புக‌ளே

தாயை விட தாய்மொழியை
த‌ந்தையை விட‌ த‌மிழ்தேச‌த்தை
த‌ன்னைவிட‌ த‌மிழ்மொழியை
உயிரென‌ ம‌தித்து அத‌ற்காக‌
உயிரையும் கொடுத்த
உன்ன‌த‌ உட‌ன்பிற‌ப்புகள் இன்று
துயில் கொள்ளும் இல்லங்கள்

க‌ல்ல‌றைக‌ள் என்றாலே
பிணவாடை வீசும்
ஆனால் இங்கே
த‌மிழ்வாடை அல்ல‌வா வீசுகிற‌து
இதை க‌ல்ல‌றைக‌ளா
இல்லை இல்லை
இவை வாசக‌சாலைக‌ள்
த‌மிழ் உண‌ர்வ‌த் தூண்டும்
வாச‌க‌சாலைக‌ள் இவை
« Last Edit: November 20, 2012, 11:51:04 PM by thamilan_sl »

Offline RDX

மரணத்தை வென்ற மாமனிதர்களுக்கு
என் வீர வணக்கங்கள்.தமிழன் என்று மட்டும்
ஒரு சிலகாலம் மண்ணில் வாழ்ந்தாலும்
ஈழ சரித்திரம் என்னும் எட்டில் அஸ்திவார
சுவர்கள் உங்கள் கல்லறைகள். மனதில்
மனதில் கார்த்திகை என்னும் போது இதயத்தில்
இடியாய் பாய்கிறது உங்கள் நினைவலைகள்
ஒரு நாள் இருநாள் அல்ல உங்கள் 56 ஆண்டுக் 
கனவுகள் புதைந்து விடுமா அல்லது புதிதுதான்
விடுவார்களா.  மரணத்தை சுவாசித்து
தமிழீழம் என்னும் விருட்சத்தின் விதையாகி
மண்ணில் உரமாகி விழந்த முத்துக்களே உம்மை
தொழும் நாள் இதுவல்லவா...? உண்மை
பார்த்துதான் புரிந்துகொண்டோம் மரணத்திலும் 
வாழ்வது எப்படி  என்பதை.

உங்கள் தாய்கொடுத்த பால் குருதியாக மண்ணில்
நனைய தலைசாய்த்து விழ்ந்த தோழனே. தனி
நிலம் வேண்டி தரணிக்கே உயிர் தந்தாய். குற்றுயிராய்
கிடந்த போதும் உன் தாகம் தமிழீழம் என குரல்
கொடுத்து கல்லறையில் துயில்கொண்டாய்
கருவறையின் உங்கள்  தாய் சுமந்திருந்தாலும்
இன்று உங்களை எங்கள்  இதயத்தில் சுமக்கின்றோம் .
ஆனாலும் நாம் விளையாடி முற்றத்தில் உன் கால்
தடங்கள் மட்டும் இல்லையட. இந்த ஆங்கிலதேசத்தில்
தமிழ் புலி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் எனக்கு
உன் கல்லறை கனவுகள் மட்டும் கண்ணீரை கொடுகிறது.
தமிழன் என்ற சொல்லிற்கு முத்திரை கொடுத்து நம்
சந்ததிகள் வாழ்விற்கு வாழிதேடி சென்ற வீரர்களே எங்கே
போனீர்கள். உங்கள் தாயின் அழுகுரல் கேட்கிறதா.
உங்கள் தோழர்களின் கண்ணீர் தெரிகிறதா. உன்
உறவுகளின் கூச்சல் கேட்கிறதா...? எங்கே எங்கே
எங்கே உறங்குகிரீர்கள். எங்கள் விழிகளில் வழியும்
கண்ணீரை துடைக்க  எழுந்து வாருங்கள்.
மரணத்தின் வாயில் வரை வந்து அழுகின்றோம்
வீரக் குழந்தைகளே எழுந்து வாருங்கள். ஏன் ஏன்
ஏன் வர மறுக்கிறீர்கள். நீ மட்டும் விடை பெற்று சென்று
விட்டாய் இங்கே உறவுகள் கண்ணீரில் தவிக்கின்றது.
நீ மட்டும் நின்மதியாக  உறங்கிவிட்டாய் உன் கனவுகளை
எங்களிடம் கொடுத்துவிட்டு. தோழனே தோழியே
என்னும் நம் பள்ளி காலங்கள் மறக்கவில்லையாட
ஒரு கூட்டு கிளியாக பள்ளியில் வாழ்ந்திருந்தும்
தனியே எம்மை  விட்டு போனதெங்கே காற்றுக்கும்
தெரியவில்லை நீங்கள் எங்கே சென்றீர்கள் என்று.
உங்கள் கனவுகளின் சுமைகளுடன் கார்த்திகை
மலர்தூவி தொழுகின்றோம் என்றும் உங்கள் நினைவுடன்
உங்கள் தோழன் RDX
« Last Edit: November 20, 2012, 05:20:01 PM by RDX »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
எம் மாவீரர்களுக்கு சமர்ப்பணம்

உறக்கம் இழந்த கண்கள்
மீளுறக்கம் கொள்ளும் நேரம்...

விதி வரைந்த துரோகத்தில்
சதி செய்த தமிழனால்
தமிழனே தமிழனைக்கொல்ல
இறக்கமுடியாதத்   துயரங்களை
நெஞ்சில் ஏற்றி வீரத்தோடு
மண்ணில் வீழ்ந்த விதைகள்...

இடியாய் வெடிக்கும்
வெடிசத்தம் இங்கில்லை..
இறந்தும் மானம் பறிக்கும்
காம  கயவர்கள்
எவருமில்லை

பலரின் கனவினை நினைவாக்க
உறவிழந்து சிலகாலம் ,
உடல் உறுப்பிழந்து  சிலகாலமென
வாழ்ந்து மறைந்த தீயாக தீபங்கள்

வனத்தில் வசித்து ,
ரசாயன புகையை சுவாசித்து
மூச்சு திணறி
உயிர் துறந்து இதயங்கள்
இளைபாறுதல் வேண்டி
மண்ணில் புதைந்த கோலம்..

சொந்த நாட்டில் பிணைகைதியாய்
அயல்நாடுகளில் அகதிகளாய்
ஏக்கத்தோடு வாழும்
எம் உறவுகளின்  துயர்த் துடைக்க
உயிர் நீத்த  வீரர்களே...

கதிரவனை
கைக்கொண்டு மறைப்பாருமுண்டோ ?
விடியாத  விடியளுமுண்டோ ?

மண்ணில் புதைத்த  விதைகள் நீங்கள்
உம்மில் வரும் விழுதுகளுக்காக
காத்திருக்கிறோம் ..

கண்ணீர் விட்டு கதறமட்டோம்
உம்  கனவுகளை  நினைவாக்க
காலமது கனிந்துவரும்
திருநாளை நோக்கி பார்த்திருக்கிறோம்

அதுவரை மலர் போர்வை அளித்து
உம்மை உறங்க சொல்கிறோம்.....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Sree

ஈழ மண் ஈன்ற தங்கமணி செல்வங்கள்
தன மான தலைவன் வழி  நடை போட்ட வேங்கைகள்

நெஞ்சோடும் நெருப்போடும் உறவாடி உதிர்ந்தீரோ
உயிர் கொடை  தந்து தடை வென்று பகை வென்று பிறந்தீரோ
கருவுக்குள் உருவாகி தமிழ் தாய்க்கு மகனாகி
கரிகாலன் படையாகி வரிவேங்கை புலியாகி
தமிழீழம் வாழ அனைவர்க்கும் மகனாகி
மாவீரர் ஆனீரோ ....

சிங்கத்தின் குகைக்குள்ளே சிங்கத்தை சந்தித்து
தலைவனது கட்டளையை தவறாமல் முடித்து வைத்து
சிங்களத்தின் கனவெல்லாம் சில கணத்திதில்  பொடியாக
சிதறவைத்து வாகை கண்டீர்

இன்று சங்கத்தமிழ் போற்றும் எல்லாளன் படை என்று
பெயர் பெற்று வாழ்கின்றீர்
மரணத்தை கண்டென்றும் அஞ்சாத வேங்கை குளம்
கரும் புலிவீரர் கண்டு மரணம்தான் அஞ்சி எழும்

பொன் தருவார் பொருள் தருவார்
மண் தருவார் மனை தருவார்
தாய் தமிழன் மண்ணுக்காய்
தன உயிர்தனை கொடையாய்
மாவீரர் அன்றி யார் தருவார்

சூரியதலைவனது  வீரிய குழந்தைகளே
உங்களை கார்த்திகை மாதம்தோறும்
 கையெடுத்து வணங்குகின்றோம்

ஈகை சுடர் ஏற்றி இருவிழிகள் நனைகின்றோம்
கனவு நினைவாகும் தமிழ் ஈழம் உருவாகும்



intha maaveerar dhinathai ninaivu koorum  oviyam uyiragugirathu nigalchiyil nanaum pangu kollavendum yenra aarvathil inayathail petru ingu paginrthullen .. ungaludan en maaveerar ninaivugalaiyum  pagirnthu kolgiren nanbargale.

Sree


« Last Edit: November 21, 2012, 06:27:52 PM by Sree »

Offline Gotham


செந்நிறப்புனல்கள் பாய்ந்தோட
சிவப்புக் கம்பளங்கள்
விரிந்தன காலனின் தேர்
பவனிவர


மார்பில் ஈட்டியும் வேலும்
தாங்கிய மரபிது
குண்டடிகளுக்கா அஞ்சும்
இவர்வீரம் பார்த்து
வான்கூட செந்நீர் சிந்தும்


பூகம்பமும் புயலும்
மாறி வந்தாலும்
தன்னாடுபோற்றி தளிர்க்க
துளிர்க்க போராடும்
வர்க்கம்
தீராது என்றும் பலர்
மனதோடு நிற்கும்


சண்டைகள் ஓய்ந்து
உரிமைகள் நிலைக்கும்
நாளும் வரும்
மாவீரர்க்கு முத்தமிழும்
படைக்கும்
கல்லரைக் காவியம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மாவீரரே ...
தமிழ் ஈழம் எனும் வாகைகாய்
உங்கள் வேர்கொடுத்த விழுதுகளே ..
தமிழ் ஈழத்தின் மயில் கற்கள் நீங்கள்
ஈழ கனவுகளை மனதெல்லாம் சுமந்து
மரணத்தின் விளிம்பிலும்
உதிர்த்து மரித்த தேசபக்தர்கள்  நீங்கள்..
கால பதிவேட்டில் தமிழ் ஈழம் என்ற சொல்லை
பதிவாக்கி சென்றோரே ...
மரணத்தை அழைத்து  மனுகொடுத்த  மாவீரரே
மரணம் பார்த்து பயந்த மறவர்கள் நீங்கள் ...

நாளாந்தம் எம் உணர்வுகளோடு உறவாடும் உங்களை
மாதம் தேதி குறித்து நினைக்கவில்லை ...நிதம்
மனதார நினைகின்றோம் ..
மரணத்தின் வாயிலில் எம் இனம் மரணத்தை புசித்தபோது
ஓடி வந்து தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள் நீங்கள் ..
தேசமே அழுகுதுபார் ... உன் தீவிர தேசபக்தி கண்டு .

உயிருளும் மேலானது மானம்
மானத்தை விட உயிர் பெரிதல்ல ...
துச்சமாய் மதித்து துறந்தீர் தமிழன் மானம் காக்க .
கண்ணை இமை காப்பது போல்
மண்ணை காக்க மரணத்தை சுகித்தீரே ..
மரணம் பெருமை கொள்ளுதடா
மாவீரா உன் தீரம் கண்டு ...

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தமிழுக்காய் தமிழ் இனத்துக்காய்
தமிழ் தேசத்துக்காய் ஈகமாய் தந்தவரே
நீங்கள் செத்தவர்கள் அல்ல
செதுக்கபட்டவர்கள் .. தமிழ்
மக்கள் மனதில் பதிக்கப்பட்டவர்கள் ..


வேங்கையாய் பாயும் வீரியத்தில்
ஓர் வீர யுகம் கலந்திருக்கும் ..
உதிரம் கொடுத்து உரிமையை பேசும்
உங்களின் ஈகம் உயர்ந்ததடா 
பல துரோகங்கள் மத்தியில்
துண்டாடபட்ட எம் ஈழமண்ணின்
எழுதுகோல் நீங்களடா ...

 உறவுகள் கூடி உல்லாசமாய் பொழுதாடும் நாளல்ல இது
நம் உணர்வுகள் கூடி உரம் தேடும் நாளிது ..
அழுது அழுது ஆறேன கண்ணீர்
கல்லறைகளை அனைப்பதால்தான்
அர்த்தம் பெறுகிறது மாவீரர் துயிலும் இல்லங்கள் ..
அங்கு சந்தண மேனியர் சாய்ந்து உறங்குவதால்தான்
அமங்கலமே மங்கலமாய் மணம் வீசுது ...

சத்தியநாதன் சங்கரோடு தொடங்கிய
தமிழ் ஈழ ஈகை  பயணம் ..
சத்தியத்தை காக்காது போய்விடுமோ ..
தளராத முடிவோடு களமாடி சாய்ந்தீர்
இன்று தமிழ் ஈழம் கனவாகி போய்விடுமோ ... வாரீர் ...

வேங்கையாய் வீறு  கொண்டவரே 
மரணத்தை தேங்காயாய்  மென்று துப்பியவரே ..
தீ காங்குகள் கூட தீரம் இழந்தது உன்னை தீண்ட
ஆழ கடல்களும் அதிர்வு கொண்டது உங்கள் அசைவுகண்டு
பாச மனங்களும்  பதறி துடித்தது பிரிவு கண்டு ...
உங்கள் ஆன்மா உருகிய ஈகை தீயில்
எரிந்து கருகியது எதிரிகள் மோகம் ...

மாவீரரே எந்த கனவினை சுமந்து
தமிழ் ஈழ சுதந்திர சொர்கதிர்காக
காலத்தோடு கலந்தீர்களோ ..
அந்த  ஈகத்தை தாகமாக்கி
தவழும்  தமிழ் ஈழம்  வெகு விரைவில் ...
« Last Edit: November 22, 2012, 04:03:47 AM by Global Angel »
                    

Offline Dong லீ


தமிழர் நல்வாழ்வுக்கு
உயிர் கொடுத்த
எம் தமிழின தெய்வங்கள்
வீற்றிருக்கும் புண்ணிய
ஆலயத்தை  தரிசனம் செய்வோம்

புதைந்திருக்கும் நம் வீரத்தை
உயிர்ப்பிக்க செய்வோம்

நாம்  சுவாசிக்க
தம் சுவாசத்தை விட்டு சென்ற
தலைவர்களை வணங்கி
நம் சுவாசத்தில் வீரத்தை
உள்ளிளுப்போம்

அவர்களின் பயணத்தை
நாம் தொடர்வோம் என
உறுதி கொள்வோம்

வழியெங்கும் வலி கொடுக்கும்
நரி கூட்டங்களை
நம் இரையாக்கி
பயணிப்போம்

நம்மை அழிக்க நினைப்பவன்
தன பரிதாபமான நிலையை
நினைத்து நினைத்து
அழிய வேண்டும் என்ற
வெறியுடன்
வெற்றி பாதை
நோக்கி
வீரமாய் நடை போடுவோம்
நம் தெய்வங்களின் ஆசியுடன்

நாமும்  இங்கு வந்து புதைந்தாலும் 
வெற்றி ஒரு நாள் வசமாகும்

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
« Last Edit: November 22, 2012, 02:37:50 PM by Dong லீ »