Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 045  (Read 2987 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 045

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Stars அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 07:56:06 PM by MysteRy »
                    

Aadava

  • Guest
1.

ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.

விண்ணே விறைக்கா விழிகொண்ட பேரிளம்
பெண்ணாய் பெருகண்ணாய் விண்ணின் மதிய
வண்ணப் பெருங்கதிராய் வெள்ளாய் வெறுமேனி
கண்ணைக் கரைக்காதோ சொல்

வெண்முடி வேய்ந்த முதுங்குயிலே பாவாஇ
எண்ணேனூ னுண்ணேன் உறங்கேன் இவனின்றி
மண்ணாவேன் என்பாய் எவையுமே என்மனப்
புண்ணைக் குறைக்காதோ சொல்


2.
சினைமுட்டை காக்கும்
பிரபஞ்ச வயிற்றின் ஒருமுனையில்
நீயும்
மறுமுனையில் நானும் நின்று
முத்தம் பகிர்வோம்
மழையா லணையும் உலகு

என் எலும்பு ஊடுறுவி
மஜ்ஜையில் தெரிகிறது
கிழட்டுமையின் ஆதிக்கம்
அதிகாலையில் முன்னிற்கிறது
தள்ளாமையின் இளம் வாரிசு
முதுமை பெருங்கணத்தில்
உனது வெதுவெதுப்பான முத்தத்திற்கு
காத்திருக்கின்றேன் கிழவனே
பூமி பொழிந்து வானம் நனைவது போல
 
« Last Edit: October 21, 2012, 04:18:18 PM by Aadava »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பூத்து உதிரும்
காதலுக்கு மத்தியில்
உதிரும் நிலையில்
பூக்கும் காதல்...

இச்சைகளுக்காக இணையும்
இளசுகளுக்கு இடையே
முதுமையிலும் இணைந்திருக்கும்
முதிர்வான காதல்..

கடமைகளை முடித்து
இளைப்பாறும் காலம்
வாழ்ந்து முடிந்த
காலங்களை வசந்தமாக
நினைத்து பார்க்கும்
தருணம்...


அழகான நிழற்படமிங்கு
காணுகையில் நெஞ்சில்
ஏதோ ஒரு பாரம்...
எத்தனை பேருக்கு
வாய்க்கும் இந்த வாய்ப்பு?

“உலகமே நீதான்”
இரெட்டிபாய் துடிக்கும் மனசு..
கண்களின் ஓரத்தில்
தேக்கமாய் சில ஏக்கங்கள்

இளமைக்குத் துணையாய்
வேண்டாம் நீ
முதுமைக்குத் துணையாய்
தனிமையைத் தீயை
அணைத்திட
முத்தமிட்டு அணைக்க
என்னவனே ஒருமுறை
வருவாயா...

வெறுமையாய் போன
என் வாழ்வதனை
அன்பால் நிரப்பி
அழகான வாழ்வை
மீண்டும் தருவாயா... :P :P


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

வான் பார்த்து ஏங்கி
வழி விழிபார்த்து மயங்கி
ஊண் தாண்டி உயிர் பருகி
தேன் தந்த திரவியம்
அன்று  நீ எந்தன்
தாள லயம் ....

எட்டி போன இளமை காலம்
கொட்டி சென்ற முதுமைகோலம்
கட்டிசென்றது கனமான ஒரு பிணைப்பை
எட்டி நின்றே சுகித்துவிட்டேன்
உன் இளமையின் வளங்கள்தனை
வட்ட வட்டமாய் வரிகள் பதித்த
முதுமையின் கோடுகளில்
உன் முத்தங்களின் சுவடுகள்தான் ..

இளமையில் எட்டாது போன காதல் தனை
முதுமையில் கிட்டாத இளமைதனை
என் முகத்தில் தேடும் என் விழுதே ...
உன் நரை படிந்த தாடியின்
சொரசொரப்பு சொன்னது
என் நினைவுகள் உன்னை
ஊசியாய் துளைத்த கதை
உன் வசீகரம் இழந்த உதடு சொன்னது
ஒவொரு கணமும்
என் பெயரை உதிர்த்தே உலர்ந்த கதை ..
சுருங்கி போன உன் கை தோல் சொன்னது
கருகிப்போன நம் இளமை கதை

இருந்தும் உன் இறுக்கமான பிடிப்பு சொன்னது
நெருக்கமான உன் காதல் உணர்வை
யார் சொன்னது என் காதல் செத்து விட்டதாய்
என் காதல் நம் காதலாகி
வாழ்கிறது காலம் கடந்தும்
துருவ நட்சத்திரமாய் ..
                    

Offline MysteRy

காதல் என்றதும் , அக்தென்னவோ
இளமைக்கு  மட்டும் எழுதிவைக்கப்பட்ட
பெரும் சொத்தாய், கருதிடும் சொத்தை சமூகமே !

எங்கள் முதுமைக்காதலின் மகத்துவம் அறிவாயா ?

புதுமைபுதுமையாய் பற்பல புதுமைகளை
புகுத்திடுவதாய் எக்காளமிடும் இக்காலக்காதலர்களே !

இக்காலம் என்றில்லை , இனி எக்க்கலாமானாலும் சரி
முக்காலமும் முயன்றாலும் ,எங்கள் முதுமைக்காதலின்
100 % முதன்மைக்காதலின் மனமகிழ்மகிழ்சியை
முழுதாய் அனுபவித்திடும் ,அனுபவம் அதை
வெறும் 50 % ஆவது அனுபவித்ததாய்,அனுபவிப்பதாய்
அறுதியிட்டு , உறுதியாக அறிவிக்கத்தயாரா ??

மற்றதையெல்லாம்  இப்போதைக்கு விட்டுவிட்டு
இதோ, சத்தமில்லாமல்  நான் கொடுத்திடும்
இந்த முத்தத்தின் பகிர்வின் பொழுது
அரவம் தீண்டியதும் பரவும்  விடமாய்
இரு சித்தம் முழுதும் நித்தமித்தம் மேனிமுழுதும்
படர்ந்திடும், காதல் சூடுகுறையா ரத்தத்தின் சுத்தத்தினை
உங்களின் ஒத்தை (ஒற்றை ) முத்ததிலாவது 
உங்களால் பகிர்ந்திட முடியுமா? ?
பார்போற்றிகளாய் தங்களை தானே போற்றிக்கொள்ளும்
இளமைக்காதலர்களே !
« Last Edit: October 26, 2012, 04:12:53 PM by MysteRy »

Offline Gotham

அறியாமல் தெரியாமல்
நிகழ்ந்தது அத்தருணம்
உன்னைப்பற்றி நான்
அறியாமலும்
என்னைப்பற்றி உனக்குத்
தெரியாமலும்


பெரியவர் பேசிமுடிக்க
உன்னைப் பற்றித் தெரியா
குழப்பத்தில் நடந்தேறியது
நம்திருமணம்
என்றாலும் இணைந்தது
நம் இருமனம்


என்னுள் என்னில்
என்றுமாய் மாறிப்போனாய்
காதலென்றால் என்னவென்று
அறிந்துகொண்டேன்
மணம்முடித்த மறுகணம்
உந்தன் ஓரப்பார்வை வீச்சினில்


அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
தோள் சாய தோழியாய்
தேற்ற நல் தாயாய்
வழிகாட்ட நல் ஆசானாய்
என்னுயிர் காதலியாய்
நான் நீயாக நீ நானாக
நாமாகிமட்டுமே இருந்தோம்


பிள்ளைகள் இரண்டு
கடவுள் கொடுத்த பூச்செண்டு
வளர்ந்து ஆளாகி அவரவர்
வழியில் செல்ல
முழுமையாய் பார்க்கிறேன்
இன்றுன்னை


அடிபாதகி.. எத்தனை
அழகாகிவிட்டாய்
பாலைவன மணற்திட்டுக்கள்
போல உன் தோல்சுருக்கங்கள்
இன்னும் ஈரம்வற்றா
உன் அதரங்கள்
உன்னுள் அழியாமல்
என்றும் குடியிருக்கும்
புன்னகை
கோடி கன்னியர் வந்தாலும்
உலக அழகி நீயடி


கடமைகள் முடித்துவிட்டோம்
எத்தனை ஆண்டுகள் நினைவில்லை
என்றும் தொடரும் பந்தத்திற்கு
கால கணக்கெதற்கு


காலம் முடிந்ததென
காலன் வந்திட்டாலும்
நம்காதல் வெல்லும்
பிரியாமல் அவனுடன்
சேர்ந்தே செல்வோம் வா..!


Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
இந்த ஒவ்வியத்தை பார்த்தும்
எனக்கு தோன்றுவது
இருவதில் தொடர்ந்த காதல்
அறுபதில் தொடர்கிறது
கஷ்டத்தை மட்டும் வாழ்க்கையை
கொண்டு வாழ்ந்த அவனிடம்
அன்பு செலுத்த அரவணைக்க
கடவுளால் அனுப்பட்ட பெண்
அனைத்தையும் இழந்தவன்
அவளின் அன்பால் மட்டும்
இந்த உலகமே அவன் கையில்
உள்ளது போல வாழ்க்கை பதையில் 
நடந்து செல்ல
 அவன் செல்லும் பாதையில் உள்ள
முற்களை நீக்கி சுகமான
பயணம் அமைத்து கொடுப்பது அவள்
காட்டில் பூக்கள் கடவுளை
வந்து அடைவது போல
காதலியாய் வந்தவள்
காதலியாய் மாறினால்
அவள்க கவிதை எழுத
கவிதை புத்தகம் அவளாக
வாழ்க்கை என்னும்
கவிதை புத்தகத்தை படித்து
வாழ்வில் நீங்க அன்பை தொராடும்
காதல் ஜோடிகள்கு இதுவே
எடுத்துகட்டு ....
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..