Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 044  (Read 2873 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 044

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Sree அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 10:53:59 AM by MysteRy »
                    

Offline Gotham


மருண்ட விழிகளில்
ஓராயிரம் கதைகள்
இருண்ட வாழ்வின்
முடிந்திடா பக்கங்களில்


சித்திரம் என்பர்
இந்த விசித்திர மனிதர்
பத்திரமாய் என்றும்
வீட்டுக்குள்ளே
பூட்டிவைத்தார்


ஆயிரமாயிரம் பிறவி தான்
முண்டாசுக்கவிஞன் எடுத்தாலும்
அவன் கண்ட கனவு
கனவாகவே முடியக்கூடும்


ஏச்சுக்கும் பேச்சுக்குமே
படைப்பட்ட பெண்டிர்
என இறுமாந்து கூறு
போடும் கூட்டங்கள்


ஏட்டுக் கல்வியையும்
வீட்டுப் பிள்ளைகள் படித்தால்
எட்டா உயரம் செல்வர்
என்று
அடுப்புள்ளே பூட்டி வைத்த
கதைசொல்லுதோ கண்கள்?


முகம் கூட காட்ட முடியா
வேதனையும் விசும்பல்களும்
தீரும் நாளும் வந்தே தீரும்


மானுட கூட்டம் மனிதம்
கற்கும் அந்நாளில்!!


(பெண் கல்விக்காக குரல் கொடுத்து தற்போது தாலிபான்களின் அரக்கத்தனமான துப்பாக்கிச்சூட்டில் தலையிலும் கழுத்திலும் குண்டடிபட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உயிருக்குப் போராடி வரும் பதினாலே வயதான பாகிஸ்தானின் மலாலா யூசுப்ஸாய் என்ற சின்னப் பூந்தளிர் வீரத் திருமகள் நலம் பெற இவ்வரிகள் அவளுக்கு சமர்ப்பணம்)

Offline Dong லீ

அழகு
இவளின் அழகு
பூக்கள் பூக்க துடிக்கும்
கூந்தலிலா

நிலவு பார்த்து பொறாமை  கொள்ளும்
நெற்றியிலா

குறும்புகளை முதலில் வெளிக்காட்டும்
கருப்பு வான வில்லை போன்ற
புருவத்திலா

நட்சத்திரங்களாய் மின்னும்
நவரசங்களை பூட்டி வைத்திருக்கும்
முட்டை முட்டை
கண்களிலா

கோபத்தை சிவந்து காட்டும்
கண்களுக்கு வேலி போடும்
மூக்கிலா

பனி கட்டிகளின் புதையலாய் தோன்றும்
குளு குளு கன்னங்களிலா

பணியில் நனைந்த ரோஜா
இதழ்களிலா

மின்னலுக்கும் கண் கூச வைக்கும்
நிறத்திலா


இல்லை

பார்க்கும் என்
பார்வையில் தான் அழகு
வர்ணிக்கும் என்
கவிதையில் தான் அழகு

என் பார்வையில்
அன்பால் பல உயிர்களின்
 அன்னையாய் மாறிய
தெரேசா மிக அழகு

மக்களின் விடுதலைக்காக
போராடும் சூ கீ மிக அழகு

மூன்று உயிர்களுக்காக
தன் உயிரை விட்ட செங்கொடி அழகு

அன்பை சுமக்கும் அனைத்து
நல்ல உள்ளங்களும் அழகு

புற அழகு சில நாட்கள் மட்டும்
அன்பால் வரும் அழகு உலகம் இருக்கும் மட்டும்

« Last Edit: October 19, 2012, 04:44:58 PM by Dong லீ »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
ஒரு முறை பார்த்தாலே மயக்கம் தரும் விழி
 அவள் விழி தான் மறு மொழி
பேசாமல் தரலாம் மனதை
அவளிடம் தான் நட்சத்திர ஒழி போலே
கண்களை பார்த்ததும் கண் கூசும்

விசித்திர பார்வைகளில் மனம் கவரும் விழிகள்
அது தானே அவள் அவள் விழிகள்
அவள்  விழியோரம் தேன் துளிகள்
கசிந்திட நான் கண்டேன் இதழோரம் இதழோரம்
வின்மினிகள் முத்தமிட நான் கண்டேன் ....

சுவாசம் தருகின்ற காற்றாய் அவளும் உருவெடுக்க
தேகம் குளிர்ந்துவிடும் அவளை சுவாசம் செய்த
 உடன் போர்வைகள் கொண்டு வா
தேகத்தை போர்த்திட குளிர் தரும் காற்றில்
இருந்து காத்திட ....

இவள் விழி போல் உலகத்திலே
விழிகளை எங்கும் பார்த்ததில்லை
விழி திறந்து பார்த்துடன்
பாறைகளில் கூட நீர் ஊரும் .....

பேசும் வார்த்தை எல்லாம்
இசையை கேட்கும் காதுகளில்
சிரிக்கும் பொழுதினிலே
இருளும் அகன்றே ஒழி பிறக்கும் ......

வர்ணங்கள் இல்லா வானவில்லும் அவளே
அந்த வானில் தெரிகின்ற நச்சத்திரம் அவளே
ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் விழி அவள் விழி தான் .
« Last Edit: October 19, 2012, 12:00:19 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

மதியன்ன வதனம்
அதிலிரு கதிரென கண்கள்
வானவில்லில் தெரியாத இருளை
தீட்டி வைத்தது போல் புருவம்
குடை மிளகாயை
கொஞ்சம் வெட்டி தலை
கவிழ்த்து  வைத்தது போல் மூக்கு ..
கொவ்வை கனியதனை
வாள் கொண்டு பிளந்தது போல்
வளவலப்பாய் உதடு ...
பால் நிலவு
இந்த பார் நிலவின் ஒளியில்
பதுங்கிவிட நினைக்கும்
ஒளிபோருந்தும் அழகு நிறம்
வெள்ளை வெண்டைகள்தாம்
பத்து பதிந்து நீள்கிறதோ
உன் கைகளில் ....

அழகு பதுமையே
உன் அழகு திருமுகத்தில்
ஒரு முகமாய்
உன் நீள் விழிகளில்
ஏன் இந்த கலக்கம் ...
எதற்கு இந்த நிராசை ...
கார் குழல் போர்த்தி
கதிர் வதனமதை
பார் பார்க்க
நீ அருளாததேனோ ...?

உன் அழகால்
உந்தபட்டு
உன்னை -உல்லாசத்துக்கு
உடனழைத்து உரு குலைப்பார்
உத்தமர்கள் என்றெண்ணியா ..?
இல்லை
உதிர்ந்து போன
உன் உதிரத்து
உறவு எதையும் எண்ணியா ..?

அன்றில்
காலம் காலமாய்
கன்னியரை வதைக்கும்
கொல் காதல் விரக்தியா ...?
எதற்கிந்த சோகம் ...
உன்னை சூழ தீ எரிந்தாலும்
உள்ளிருந்து வெளி வா
அதர்மம் அளிக்கும் அருவாளாக..
உன்னை மீறி உயிர் பிரிந்தாலும்
உலகை காக்கும்
அருவமாய் உடன் வா ..

பெண்மைகள்
மென்மைகளுக்கு மட்டுமல்ல ..
பல மேன்மைகளுக்கும்
சொந்தமடி ...
உன் கண்வழி உறையும்
உன் கசப்பான அனுபவங்களை
கண்ணீரோடு கழுவி விடு
விழிகள் விடியலை சந்திக்கும் .