Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 041  (Read 2122 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 041

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Thana அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 07:49:50 PM by MysteRy »
                    

Offline thamilan

கடல் ஒரு அழகு
கன்னிகையர் ஒரு அழகு
அந்த கடலில் குதூகலிக்கும்
கன்னியர் என்றால்
அது ஒரு தனியழகு

ஆர்ப்பரிக்கும் கடலலைகள் அதில்
குதூகலிக்கும் கன்னியர்கள்
கன்னியயரை கண்டதால்
கடலலைகள் ஆர்ப்பரிக்கிறதா இல்லை
கடலலையை கண்டதால்
கன்னியர் ஆர்ப்படிக்கின்றனறா?
இரண்டும் ஒன்றாகத் தான் தெரிகிறது


பாய்ந்து வந்து
கால்களை தழுவி காதல் சொல்லும்
கடல் அலைகள்
பெண்களைக் கண்டால்
ஆண்களுக்கு மட்டுமா இயற்கைக்கும்
கிழுகிழுப்புத் தான்

கடலும் கன்னியரும் ஒன்றுதானே
ஆழமறிய முடியாத‌
ஆளை விழுங்கும்
ஒரே விதமான இருவேறு படைப்புகள்
கடலும் கன்னியரும்

கடலலைகள் காலைத் தழுவும் போது
மனதில் உள்ள கவலைகள்
உப்பாக கரைந்து
பெரியவர்களும் குழந்தைகளாக‌
கும்மாளமடிக்கும் காட்சி
கண்கொள்ளாக் காட்சி

கரையெனும் காதலியை
கட்டிதழுவ காலமெல்லாம்
முட்டி மோதும் கடலைக்கு
தொட்டுச் செல்ல கிடைத்த வரம்
ஆனால் விட்டு விலக வைத்தது
விதி
காதல் வெறி கொண்ட கடலைக்கு
கன்னியர் கிடைத்தால் கொண்டாட்டம் தானே

Offline Dong லீ

அலைகள் ஓய்வதில்லை
இப்படி பெண்கள் கூட்டம் ஓயாமல்
கடற்கரைக்கு வந்தால்
அலைகள் எப்படி ஓயும்

பெண்களை காண
கரை வந்து வந்து போகும் அலையே
பாதங்களை முத்தமிட்டு
கடலை நோக்கி
ஓட்டம் எடுப்பது ஏனோ 

துணையாய் வந்திருக்கும்
ஆண்களின் கால்களில்
மிதிபட வேண்டாம் என்று எண்ணியதாலோ

உன் தீண்டலை
விரும்பி ஏற்கும் பெண்கள்
உன்னுடன் மகிழ்ந்து 
விளையாடுவதும்
கைகளால் உன்னை
அள்ளி கொள்வதும்
ஆண்கள் மனதில்
பொறாமை தீயை பற்ற வைக்கிறது

நான் காதலிக்க விளையும்
பெண்ணும் தன் தோழிகளுடன்
தினமும் இங்கு வந்து
விளையாடி மகிழ்கிறாள்

அவள் பாதங்களை தழுவும்
அலையே
அவள் வாசத்தை அள்ளி வந்த
கையோடு
என் மேல் ஒரு நொடியேனும்
உரசி செல்ல மாட்டாயா

என் காதுகளில் மட்டும்
அவள் கால் அழகை சொல்வாயா

என் காதலை அவளிடம் கொண்டு
சேர்ப்பாயா

இல்லை பொறாமையில்
என்னை கடலில் தள்ளி கொன்று விடுவாயா

உன்னை நண்பனாய் எண்ணி
என் காதலை சொல்கிறேன்
கரை சேர வாழ்த்தி விடு

என் அருமை பெருமைகளை
அவளிடம் சேர்த்து விடு

போன மாதம் ஒரு பெண்ணிடம்
தூது போக சொன்னேனே
அதை மட்டும் மறைத்து விடு..

அருகில் இருப்பவன் யாரோ
அங்கு  கொஞ்சி விளையாடும்
எங்கள் ஏரியா பெண்களுக்கு
மாமனா மச்சானா
மானம் கெட்டவன்...
முதலில் அவனை விரட்டி விடு ..

« Last Edit: September 24, 2012, 01:34:47 AM by sri »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஆர்பரிக்கும் அலைகடல்
தூரத்தில் விளையாடும்
மங்கையர் கூட்டம்..
அலையோடு போட்டி போட்டு
துள்ளி குதிக்கும்
சிறு மழலைகள்
அனைவரும் ஆனந்தமாய்
அமைதியாய் நான்
நானும் ஆடியதுண்டு
அலைகடலில் அளவில்லாமல்..

அக்காவின் கரம் பிடித்து
அலையை கண்டு அலறும் என்னை
அன்பாய் பேசி பயத்தை நீக்கி
பற்றிய கரத்தை விடாமல் பிடித்து
கடலில் ஆனந்தம் ஆட்டம் போடவைத்து
பார்த்து ரசிப்பாள்....

கிளிஞ்சல்களும், கூழங் கற்களும்
அழகாய் சேகரித்து..
விளையாடிய காலமெல்லாம்
கண்முன்னே...

பெரும் அலை ஒன்று தூரத்தில் வர
அக்கா நான் அதில விழபோறேனு ஓட
வேண்டாமென துரத்தியவளை
போக்குகாட்டி அலையவைத்து
நெருங்கும் அலைகண்டு
ஐயோ என்று அலறி ஓடி
பெரும் அலை அடித்த அடியில்
இருவரும் அலையில் மூழ்கி
உப்புத்தண்ணீர் குடித்து
மூச்சுவாங்கி முங்கி எழுந்து..
எரிச்சலை தரும் கண்களை
துடைக்க எண்ணி  கைகளை எடுக்க
அழுத்தி பிடித்தவாறு  அக்காவின் பிடியில்
என் இரு கரங்கள்....

நனைந்த விழிகள்
மீண்டும் நனைந்தது
கண்ணீரில்...

என்னை கைப்பற்றி
காப்பாற்றிய கர்வத்தோடு அக்கா...

உயிர் தந்த அன்னையாகி
பாசம் தந்தவள்.
அமைதியாய் போனால்
என்னைவிட்டு..
இம்மண்ணை விட்டு...

நாம் சோ்ந்து சென்ற இடங்களுக்கு
எல்லாம் சென்று வருகிறேன்
நீ என்னோடு  இருப்பதாக எண்ணிக்  கொண்டு...

கூட்டம் கூடும்
கடற்கரையில் பல முகங்கள்
நான் தேடும் உன் முகம்
ஒருமுறை காணக் கிடைக்காதோ??

நனையாத ஈரத்தில்
நனைந்து போனது விழிகள்
உன் நினைவில்..


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நீளமாய் ஒரு நீல வானம் 
அதில் பஞ்சன்ன குவியலாய்
அங்கொன்றும் இங்கொன்றும்
அசைந்தோடும் வெண் மேகம் யாரை தேடுதோ ..
வான் நீலமா அன்றில்
வான் வர்ணம் தன்னுள் கொண்ட
கடல் நீலமா எது நீலம் என
எழுந்தாடும் விடையற்ற வினாக் கோலம் ...
ஒன்றன் பின் ஒன்றாய்
வெண்ணுரை தள்ள
காதலியை பின் தொடரும் காதலனாய்
வேற்றுமை தெரியாத வெள்ளலைகள்
வேகமாய் வந்து வெறும் தரையை தொடும் போதெல்லாம்
முடிவில்லாத அதன் கரை காதலும்
முயற்சி தேயாத அதன் முயல்வுகளும்
முழுவதாய் நெஞ்சில் படியுமா ...?

கடல் கரை நுழைந்தாடும்
கன்னியர் தம்
மனம் நுழைந்தாட விளைந்து
கரை தாண்ட முயலும் காளை
கரை சேர்வானா ...?
எதிர் விளைவாய்
ஏக்கத்தை பரிசளிக்கும்
உடலோடு ஓட்டும் நனைந்த ஆடையும்
உப்பு காற்று உரச உல்லாசமாய்
கட்டவிழ்ந்து ஆடும்
கரு நிற கூந்தல் மங்கையரும்
கல கலத்து சிரிக்கும் சத்தம்
கடலின் நிசப்தத்தை களங்கம் செய்வதால் தானோ
கரை மீது அலைகள் காட்டு தனமாய் மோத விளைகின்றன ..?

கடலில் இறங்கி கயல் பிடிக்கும் காளைக்கு
கன்னியர் கயல் விழிக்குள்
தூண்டில் இலாமலே  துவண்டு சிக்கியது
துன்பத்தில் முடிமா .. இன்பத்தில் தொடங்குமா ?

நாலனாக்கு முறுக்கு விக்கும்
நடை தளர்ந்த சிறுவன் பசிக்கு
நாலு முறுக்கு வாங்கி தர
நல் இதயம் ஏதும் இரங்குமா...?

முகம் திருப்பும் காதலிக்கு
முழுதாய் அவளை நம்பவைக்க
முனைந்து  செய்த சத்தியங்கள்
காற்றோடு கலக்குமா ..?

எண்ணிலடங்கா எண்ண வினாக்கள்
எழுந்து நிழலாட ...
நீர் குடையும் என் ஆசை
வெறும் விழி குடைந்தாட
விலகி செல்கிறது ..
யார் சொனார் ...?
கடலும் அலையும் கலங்கும் மனதுக்கு
அமைதியை தருவதாய் ....?
விடை இல்லாத கேள்விகளை
விகுதியாய் மட்டுமே விட்டு செல்கிறது
இந்த கடலும் அலையும் அதன் களிப்புகளும் ..
நாளையும் வருவேன்
நாளை மறுநாளும் வருவேன்
நான் இருக்கும் வரை வருவேன்
அலையே உனக்கு நான் சற்றும் சளைத்தவள் அல்ல ....
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வண்ணகுமரி கண்டு
எண்ணம் தரிகெட்டு அவர்
கன்னம் தொட்டுவிட‌
கரையில் எகுறுங்கடல்

சின்ன இதழ்கொண்ட‌
சிங்கார பாவையர்
மின்னற் புன்னகை
மெதுவாக திருடுமலை

காற்றில் பறந்துவரும்
கடலின் மாராப்பு..

காற்றின் கைப்பிடித்து
கரையில் நடைப்பயிலும்
அலைக்குழந்தைகள்..

கத்தும்கடல் துவைத்து
காயவைத்த துணிகள்
சோப்பு நுரைகள்..

குருட்டு ஆழியின்
குமுறும் இமைகள்..

எழுத்து இன்றி
பேசும் இதழ்கள்..

மேலெழுந்து மெலிந்து
தாழும் படிக்கட்டுகள்..

எழுந்து பறக்க
எத்தனிக்கும் சிறகுகள்...
விழுந்து முறியும்
வெளுத்த மின்னல்கள்..

நீர்ம வடிவில்
நிலா வெளிச்சம் - நிற
சேர்மம் இல்லா
வானவில் வளையம்..

சட்டமிருந்தும்
தடுக்க முடியா
மணற்கொள்ளையன்..


காட்டுக் குயில்போல்
கத்திக் கத்தி
ஏடேடாய் பறக்கும்
எழுதாதத் தாள்கள்..


எல்லாம் தெரிந்ததுப்போல்
எதிர்த்துப் பேசும்
கள்ள மற்றக்
கடலின் வாய்கள்..

அற்ப அவகாசங்களில்
அழிவதே ஆனாலும்
ஆறாத தடம் பதிக்கும்
அற்புதம் அதிசய‌ங்க‌ள்

மண்ணுண்டு
வாழும் அலைகளின்
வாயில் தான் உலகமிருக்கிறது
கண்கொண்டு
வாட்டும் கன்னியர்
வருடலிலே அலையே கொதிக்கிறது
« Last Edit: September 28, 2012, 04:26:50 PM by ஆதி »
அன்புடன் ஆதி