Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 040  (Read 2722 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 040

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Dong Leeஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 07:47:16 PM by MysteRy »
                    

Offline Gotham

பூங்தோட்டத்தின் நடுவே
சிறுபாதையில்
என் கைபற்றி நடந்தாய்.!

கல்லும் முள்ளும்
இறைத்திருந்தாலும்
முன்னே நீ நடந்து என்னை
நடத்திச்சென்றாய்

பூக்களின் வாசமும்
என் ஸ்வாசமாய் ஆன
பொழுதையும் எனதாக்கினாய்

உலகமெல்லாம் திரிந்தாலும்
கிடையாத அறிவுச்செல்வத்தை
எனக்குள்ளே புகட்டினாய்

தடுமாறி விழுந்தாலும்
தாங்குவதற்கு நீ இருக்கிறாய்
என்ற நினைப்பையே
நிதமும் தந்தாய்

திங்கள் பல ஆனாலும்
தவறாமல் என் ஆசைதனை
நினைவேற்றினாய்

எனதண்ணன் போலொருவன்
இப்பூவுலகிலுண்டோ
என இருமாப்பு கொள்ளச் செய்தாய்

ஆதி முதல் எந்தன் கைபிடித்து
படிப்படியா என்னை
வழிநடத்தி சென்றாயே அண்ணே
அண்ணி வந்ததும் எந்தன்
கை விட்டுவிட்டதென்னே!

ஒரு தங்கையின் புலம்பல்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 ப்ரிய சிநேகிதா !

அன்று உன்மதி முகத்தில்
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதித்து கொண்டேன்  - என்
இதழோரங்களில்

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும்
நம் பால்ய பருவத்து அசைவுகளில்
சாம்ராஜிய காதலுணர்வுகளை
சடுதியாய் சேகரித்துக் கொண்டேன்
நாளைய நம் வரலாற்றிற்காக


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா உன்னில்
சூழும் அந்த   கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றது என்  ஆத்மாவும்
 

தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமென்   மேனிதாங்குமோ
பிரிவின்அகோரச் சீண்டலை
அடிக்கடி உள்வாங்கும் போது..
கண்ணீர்த்துளிகளாய் இறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே..

நம் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன - நான்
அறியாமலே

கலைந்தோடும் மேகங்களில் - நான்
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை
துவம்ஷம் செய்யும் காற்றை- நான்
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
என்னுள்  கண்டு

பனிப் பாறை தன்னுள் உறைந்து   கிடக்கும்
என்  காதல் ஞாபகங்களை
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுகிறது
என்  பெருமூச்சின் வெம்மை கண்டு

சிலுவையில் அறையப்பட்ட   என் காதலின்
செந்நீர்த்துளிகளால்
சிதையும் என் இருதயத்தின்   இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - என்
உயிரனுகளில் இன்பம் மீள சேரவே

காத்திருகின்றேன்
என்  காதல் யாகத்தின் வலிமை
வேரூன்றும் உன்  காலடியோரம்- அது
உன்னுள் எட்டிப் பார்க்கும்
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும்

என் நெஞ்சக் கூட்டில்
மோதியெழும் கடலலைச் சங்கமம் இனி 
சந்தத்துடன் இசையாகு மோர் நாள்- என்
காதல் சாம் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய்

காத்திருகின்றேன் அதே காதலுடன் ..
« Last Edit: September 20, 2012, 11:42:28 PM by Global Angel »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஒளி மிகுந்த
பாதையில் அலைத்து செல்கிறாய்

இந்த ஒளி
உன்னுடையதா ?
என்னுடையதா ?
என்று கேட்கிறேன்

நம்முடையது என்கிறாய்

இந்த பாதை
கடும் மழை சுழன்றடிக்கும்
ஒரு நிலம் வழியாகவோ
வெம் பாலை வழிகாகவோ
கருமிருள் செறிந்த வானந்திரம் வழியாகவோ
நம்மை அலைத்து செல்லலாம்

உன் கையின் படி தரும்
திடமான நம்பிக்கைகள்
யாதொரு இடர்ப்பாடுகளையும்
சமாளிக்கும் ஆற்றலை தந்துவிடும்

நீளும் பயணக் கலைப்பின்
சோர்வை
உன் புன்னகையின் ஒவ்வொரு துளியும்
துடைத்து எறிந்துவிடும்

இந்த பயணம்
நம்முடையதோ
நாம் போகவேண்டியதோ
போக கூடாததோ
அல்லது
பிறருடையதோ
எதுவென தெரியவில்லை
எதுவாகிலும்
இது உன்னுடன் நிகழும்
உயிருள்ள‌ பயணம்

இந்த பாதை
யாரும் போக துணியாததாக இருக்கலாம்
வெறும் தனிமையின் சருகுகள்
விழுவதாக இருக்கலாம்
எனினும்
இவை எனக்கு இனிமையானவை

இந்த ஒளியும்
நீயும்
என் உடன் வரும் வரை
உன் கை பிடியும்
புன்னகையும் தொலையாதிருக்கும்  வரை
எந்த பயங்கரங்களும் அச்சுருத்தாது
எவ்விடர்ப்பாடுகளும் சோர்வுற செய்யாது
எத்தோல்விகளும் விரக்தியடைய வைக்காது

அன்புடன் ஆதி

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
என் குழந்தையும் நானும்!
என் குட்டி மகள் சிரிக்க வைக்க
நான் செய்ததையெல்லாம்
எந்த ஒரு தந்தையும்
செய்திர்க்கமாட்டன் ....

அவளின் சிரிப்பை பார்த்து
என் மனைவி சிரிப்பாள்-ஆனால்
என்னை பார்த்து நீ கொடுக்கும்
செல்லம் நாளை உன்னை வதைக்கும்- என்று
என்னை கண்டிப்பால் என்னவள் கண்டிப்பை
புரியாத பிஞ்சு மகள் திக்கி தவிப்பால் ...

என்னவள் வீட்டு வேலைகளை
முடித்து வருவதற்குள் நித்திரை
அவளை கை தட்டி அழைக்க
என்னவள் அவளை துங்க வைக்க
பாடும் தாலாட்டை நானும்
அரைகுறையாய் அறிந்ததை கொண்டு ....

  குட்டி மகள் தூங்க  நான் பாடும்
தாலாட்டில் எந்த ராகமும் இல்லை
என்னவள்  அம்மா என்பதை தவிர
அவள்  பிஞ்சு விரல்கள் பதித்து
என்னை கட்டிப் பிடித்துத் தூங்க....

நானும் அவள் பிஞ்சு
கையை எடுத்துவிட்டால்
எழுந்துவிடுவாலோ -என்று
எடுக்கவுமில்லை அவள்
அயர்ந்து துங்கும் வரை ...

என்னவள் என்னை பார்த்து சிரிப்பாள்
தினமும் நித்திரை துளைபேன்
இன்று ஒரு நாலாவது மாமா நீங்க
விளித்து இருந்து பார்த்து கொள்ளுங்க
என்று குறும்புதனமாய் சொல்லிவிட்டு
என்னவள் நித்திரைக்கு செல்ல ...

அமர்ந்த வாரே நானும் தூங்க
விடிகிறது காலை பொழுது
எனக்கு முன் என் மகள்
பசியால் அழுக கண்விளிப்போம்
இருவரும் மகளை என்னவளிடம்
பசி தீர்க்க கொடுத்து விட்டு...

அலுவலகம் செல்ல என்னை
தயார் செய்து கொண்டு
காலை சாப்பாட்டிற்கு நான் அமர
என் அருகில் துள்ளி குதித்து
ஓடி வருவாள் அப்பா என்ற
புன்னகையுடன் .....

என் மடியில் அமர வைத்து
என் பசியை திர்த்து கொண்டு
அவளின் கன்னத்தில் முத்தம்
மிட்டு ஆசை பதில்கு என்மகள்
எனக்கு முத்தம் தந்து டாட்டா
கட்டி வளி அனுபிவைபால் ....

மாலை வீடு திரும்பியதும்
வீடு அழைப்பு மணி ஒலித்ததும்
ஓடி வந்து கதவு திறந்து
என் காலை கட்டி நிற்பாள்
அப்பா வந்தாச்சு என்னை
வெளியே அழைத்து செல்ல .....

நானும் உடைகளை மாற்றி
என்வளிடம் மகள்கு உடை
மாத்த சொல்லி இருவரும்
அருகில் இருக்கும் பூந் தோட்டத்திற்கு
என் கை விரலை பிடித்து
அழைத்து செல்ல அங்கு
உள்ள பூக்களையும் ....

பூவில் உள்ள பட்டாம் பூசிகளையும்
கண்டு ரசித்து அவளக்கு பிடித்த
பூவை பறித்து தர சொல்லி
அவள் வைத்து இருக்கும் கூடையை
நிரபியதும் என்னை அழைப்பால் ...

அப்பா அப்பா வாங்க பூவை
சாமிக்கு வைக்கணும் வீட்டுக்கு
போனதும் சாமி அறையில்
அதை வைத்து அழகான பிஞ்சு
விரல்களை கைகூப்பி கும்பிட்டும்
அழகே தனி கும்பிட்டதும்
விபுதி எடுத்து வந்து எனக்கும்
என்னவள்கும் நெட்ரில் வைத்து
சந்தோசமாய் சிரித்து மகிழ்வாள்
என் அன்பு மகள் எங்களை
காக்க பிறந்த கருத்தன மகள்
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dong லீ

பொம்மைகளுடன் விளையாடிய
எனக்கு
பேசும் பொம்மையாய்
சிரிக்கும் பொம்மையாய்
உயிருள்ள பொம்மையாய்
வந்த என் அன்பு தங்கையே

உன்னால் நானும்
பாசக்காரன் ஆகிறேன்
எனக்குள் நானும்
பொறுப்பாளனாய் உணர்கிறேன்

என்னை பார்த்து கொள்ளவே
என்னால் முடியாத சிறு வயதிலும்
உன்னை என் கைகளில் பிடித்து
கவனமாக
பார்த்து கொள்கிறேன்

உன் பிஞ்சு கைகள் தொடுகையில்
என் இதயம் மலர்கிறது
உன் புன்னகை
என் கண்களை கட்டிபோடுகிறது

தங்கை விரும்பி கேட்பதை எல்லாம்
வாங்கி  கொடுப்பது தானே
அண்ணனுக்கு பெருமை

பூக்களை கேட்டாள்
புன்னகையை மலர செய்தேன்

மழையை கேட்டாள்
முத்தங்களை பொழிந்தேன்

சிறகுகள் கேட்டாள்
தோள்களில் சுமந்தேன்

அறிவை கேட்டாள்
திருக்குறளை கொடுத்தேன்

நிலவினை கேட்டாள்
முகம் பார்க்கும் கண்ணாடியை கொடுத்தேன்

சூரியனை கேட்டாள்
என் புகைப்படம் கொடுத்தேன் :P

அன்னையை  கேட்டாள்
அண்ணியை கொடுத்தேன்

அன்பை கேட்டால்
என் உயிரையும் கொடுப்பேன்

மகிழ்ச்சியை கேட்டாள்
FTC லிங்க் கொடுத்தேன்



« Last Edit: September 21, 2012, 08:43:41 PM by sri »