பூங்தோட்டத்தின் நடுவே
சிறுபாதையில்
என் கைபற்றி நடந்தாய்.!
கல்லும் முள்ளும்
இறைத்திருந்தாலும்
முன்னே நீ நடந்து என்னை
நடத்திச்சென்றாய்
பூக்களின் வாசமும்
என் ஸ்வாசமாய் ஆன
பொழுதையும் எனதாக்கினாய்
உலகமெல்லாம் திரிந்தாலும்
கிடையாத அறிவுச்செல்வத்தை
எனக்குள்ளே புகட்டினாய்
தடுமாறி விழுந்தாலும்
தாங்குவதற்கு நீ இருக்கிறாய்
என்ற நினைப்பையே
நிதமும் தந்தாய்
திங்கள் பல ஆனாலும்
தவறாமல் என் ஆசைதனை
நினைவேற்றினாய்
எனதண்ணன் போலொருவன்
இப்பூவுலகிலுண்டோ
என இருமாப்பு கொள்ளச் செய்தாய்
ஆதி முதல் எந்தன் கைபிடித்து
படிப்படியா என்னை
வழிநடத்தி சென்றாயே அண்ணே
அண்ணி வந்ததும் எந்தன்
கை விட்டுவிட்டதென்னே!
ஒரு தங்கையின் புலம்பல்