Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 039  (Read 2142 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 039




இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Aathi அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 07:46:14 PM by MysteRy »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காற்றை நீவும்- அந்த
ஆலமர விரல்களின் கீழ்........
விழுந்து கிடக்கின்றது -பலர்
விலாசம்

உறவுகள் தொலைத்த
தெருநாய்களால்
சாமம் தொலைந்து கொண்டிருக்கின்றது
தாராளமாய்

நுளம்பின் ரீங்காரம் விரட்டும்
 கைத் தாளத்தால்
கைரேகைகள் கழன்று கொண்டிருக்கின்றன
சுருதி பிசகாமல்

வெளியுலகை
களவாய் எட்டிப்பிடிக்கும்
கிழிசல்களால்
கலியுகம்
களவாய் சிறைபிடிக்கின்றது
இளமை மேனியை

சாலையோரச் சந்தடிகளில்
கலைந்து போகும
கனாக்களின் கண்ணீரில்
மனசோ ஜலதோஷத்தில்
கரைந்து கொண்டிருக்கின்றது

சின்ன மின்மினிகளின்
ஒளிச் சிதறல்களில்
இருளோ காவு கொள்ளப்படுகின்றது
மருளாமல்

எச்சில் பருக்கைகளுக்கும்
ஏலம் போடும்
வறுமை தேசத்தில் - பலர்
வாழ்வும் வரண்டு கிடக்கிறது
வனப்பை மறந்து .....
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நடைப் பாதையில்
வாழ்கையை பயணித்து
வாழ்வை சுமையாய் சுமந்து
வறுமையின் பிடியில் சிக்கி
வாழும் ஜீவன்கள்...
மாளிகைகளுக்கு நடுவே
மண்தரையில் வாசம் செய்யும்
மனிதர்கள்...

தூசி பறந்து செல்லும் சாலை
பசியோடு அருகில் மழலை
சமைக்கும்  உணவை
உண்ணும் வரையில்
மழலையின் பார்வை
ஏக்கத்தோடு அடுப்பின் மீது
எறியும் தணலில்
அழிந்து போகாதோ
பசியின் கொடுமை...

உண்ட உணவு செரிக்காமல்
மெத்தையில் உருளும் சீமான்கள்
பசியை மறக்க நினைத்து
உறக்கம் திணித்து
வெறும் தரையில்
புரண்டு தவிக்கும் ஏழைகள்...

எலோருக்கும் விடியும்  விடியல்
இவர்கள் வாழ்கைக்கு மட்டும்
சூனியமாய்...

விலைவாசி ஏற்றத்தில்
வாழ்வின் வீழ்ச்சியில்
அனுதினமும் போராடும்
கூட்டம்..

உயிர் குடிக்கும் வறுமையில்
இளமை துடிப்புகளை  அடக்க நினைக்க
அடங்காத இளமையால்
சிதறிய சிற்பங்களாய்
மழலைகள்....
இளமையிலே வறுமை போர்வை....

மாறிவரும் காலம்
மாறாத வாழ்வு...
வல்லரசு நாட்டுக்குள்
வாழ் விழக்கும்
அவலம்.....

தனி மனிதன் ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தை அழித்திடுவோம் என்றான் பாரதி...
பாரதி மீண்டும் வருவாயோ
உணவில்லா  இந்த ஜகத்தினை அழித்திட...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஊர் போற்றும் மிராசுவாய் வாழ்ந்தவர்கள்- தன்
அறியாமையாலும், படிப்பறி வின்மையாலும்
நரிமுகம் கொண்ட நயவஞ்சக பேய்களால்
நடுத்தெருவிற்கு தள்ளபட்டார்கள்.....?

நிலையில்லா நாடோடி வாழ்வை மேற்கொண்டு
வீதியோர மேடைகளையும்,
விருத்ஷமான மரங்களையும்
உறைவிடமாய் கொண்டு........

உன்ன உணவின்றி, உடுக்க உடையின்றி
இரண்டாந்தர வாழ்க்கை அல்ல
அதற்கும் கீழ்த்தர வாழ்க்கை
வாழ்ந்தவர்கள் என் முன்னோர்....

தன்  பதின் வயது வரை
கிழிசலான கந்தையோடு
மேய்ப்பாலானாக வாழ்ந்தவர்
என் தந்தை......

படிக்க ஆவல் கொண்டு
பெற்றோரை நாட, அவர்கள்
இல்லாத நிலையை கூறி
இயலாமையை வெளிபடுத்த.....

இல்லாமை நிலையை கருத்தில் கொண்டு
தன் சகோதரனின் துணையை நாடி
பள்ளியில் சேர்ந்து ஆண்டிற்கு
இரண்டு வகுப்பென தேர்ச்சிபெற்று....

படிபறிவின்மையால் தான்
இந்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதால்
படிப்பறிவை  போதிக்கும்
ஆசிரிய படிப்பை தேர்வு செய்து......

ஆசிரிய படிப்பில் முதல் வகுப்பில் தேர்ந்து
ஆசிரிய பணியில் தன்னை
அற்பனித்துகொண்டு
பணிக்கு சென்றபின்  சிறுக சேமித்து......

எவ்வூரில் இருந்து விரட்டியடித்தார்களோ
அவ்வூரிலேயே தனக்கென இருப்பிடம் அமைத்து
நிலம் நீரென வசதியான வாழ்வை வாழ்ந்தாலும்
நாங்கள் செய்யும் சிறு தவறுகளை சுட்டி
தன் பழைய வாழ்வை நினைவுகூர்வார்.....!

சாலையில் செல்லும் போது
சாலையோரமாய் வாழும் குடும்பங்களை
காணும்போது அவரவர் எதனால்
இந்நிலைக்கு தள்ளபட்டார்களோ....

என நினைத்து பார்க்கையில்
என் முன்னோரின் வாழ்க்கை
கண்முன் நிழலாடி
ஒருகணம் நெஞ்சம் கனத்து போகும் ......!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உனக்கு தெரியுமா நீ
வறுமை கோட்டுக்கு மேலிருக்கிறாய் கண்ணா

நீதான் ரொட்டி சாப்பிடுகிறாயே

மைதா போல முகம் கொண்ட‌
மாண்பு மிக்கோர்
மார்ச்சு மாதம்
அறிக்கை கொடுத்தனர்

ஆம்!
29 ரூபாய்
ஒருநாள் வருமானம் கொண்ட‌
யாரும் இனி ஏழைகள் இல்லை

உன் அன்னை சுடும்
ரொட்டு போல‌
ஒட்டி போன வயிறும்
வறுமை கோட்டை
வெளிச்சம் போடும்
எலும்பு கூட்டு உடம்பும்
திட்ட கமிசன் பொருப்படுத்தவில்லை

திறந்த வெளியே
தங்கும் வீடாய்
இருக்கும் உன்னை
அவர்கள்
திரும்பி கூட பார்ப்பதில்லை

உன் உடையை குறித்தோ
உன் க‌ல்வி குறித்தோ
நீ அருந்து நீர் குறித்தோ
உன் கழிப்பறை குறித்தோ
நீ செய்யும் ப‌ய‌ண‌ம் குறித்தோ
நீ போகும் பாதை குறித்தோ
அவ‌ர்க‌ளுக்கு அக்கறையில்லை

நாளை நீ
திருடலாம்
தீவிரவாதியாக கூட ஆகலாம்
அது அவ‌ர்க‌ளுக்கு ஒரு பொருட்டேயில்லை

அவர்களின்
க‌வ‌லையெல்லாம் ஒன்றே ஒன்று
இந்தியா ஏழை நாடில்லை என்று
எப்ப‌டியாவ‌து நிரூபிப்ப‌து
« Last Edit: September 13, 2012, 01:23:25 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Dong லீ

இருப்பிடம் இல்லை
உடை இல்லை
உணவு இல்லை
இல்லாமையில் இவர்கள்
இருப்பதற்கு யார் காரணம் ?
மிருகங்களில் இப்படி பிரிவினைகள்
ஏதும் இல்லை
காட்டுவாசியாக இருந்திருந்தால்
இந்த பிரிவினை மிருகம்  பிறந்திருக்காது
மனிதன் பரிணாம வளர்ச்சியில்
ஒருவரை ஒருவர் மிதித்து
இந்த மிருகத்தை
பெற்றெடுத்து

உலவ விட்டதன் விளைவு
இந்த படம்


எத்தனை நாட்கள் பிறகு
இன்று இந்த சமையலோ
இனி எத்தனை நாட்கள் பிறகு
சமைக்க ஆற்றல் கிடைக்குமோ

தினமும் நாம் காணும்
காட்சி இது என்பதாலோ என்னவோ
மிக யதார்த்தமாக கடந்து செல்கிறோம்
கண்டும் காணாமல்

அவர்கள் இடத்தில் நாம் இருந்து
சிந்தித்து பார்த்தால்
நிச்சயம் ஒரு சிறு மனிதாபிமானம்
தோன்ற வேண்டுமே

அப்படி தோன்றி அனைவரும் சிறு சிறு
உதவிகள் செய்தால்
இந்த நிலை மாற
வழி பிறக்கும்

கவிதை எழுதி கொண்டிருக்கும்
இந்நேரத்தில்
பல உதவிகளை
பறந்து பறந்து
செய்து விடலாம் என்று தோன்றியதால்
இத்துடன் கவிதையை முடித்து கொள்கிறேன்

நீங்களும் உதவிகளை தொடங்குங்கள்

நாலு பேருக்கு நல்லதுனா
ஒரு  நாள் பீட்சா சாப்பிடாமல் இருப்பது
தப்பு இல்ல

 
« Last Edit: September 13, 2012, 09:33:12 PM by sri »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
நமது அரசாங்கம் என்ன செய்கிறது
தமிழ்நாடு அரசு
தூங்கிறது -நிம்மதியுடன்
தமிழ்நாடு அமைச்சர்கள்
தூன்கிரர்கள் -நிம்மதியுடன் -ஆனால்
ஒரு நாளாவது நிம்மதியாய்
தூங்கலாம் என்று ஓட்டு போட்ட
ஏழை மக்கள் துங்கவிலை ....

மக்கள் என்ன கேட்டார்கள்
ஆடைகள் கேட்கவில்லை
தங்கத்தில்
ஆபரணமும் கேட்கவில்லை
சாதாரண வாழ்கையை
மட்டும்தான் கேட்கிறார்கள்
அதைகூட கொடுக்கமுடியவில்லை .....

ஒரு நேரத்திற்கு உன்ன ஓடி ஓடி
உழைக்கிறான் ஏழை மனிதன்
தான் உண்ணவில்லை எனினும்
தான் பிள்ளைகள் வாழ்விற்க
உழைக்கிறான் அதில் கொஞ்சம்
சேமிகிறான்...

அந்த பணத்தில் ஒரு இடம் வாங்குகிறான்
எப்படியாவது தான் குழந்தை
இந்த மண்ணை தொடும் போது
இருபதற்கு ஒரு குடிசை வீட்டு
செய்ய ஆசை படிக்கிறான் -ஆனால்
இந்த அரசாங்கம் என்ன செய்கிறது ...

நிலவரி ,வீட்டு இலாத மனிதனுக்கு
வீட்டு வரி என்று அவன் சேமித்த
பணத்தை புடுங்கிறது ,
மந்திரிகள் அவர்கள் பங்கு
அவர்கள் நிலங்களை தனக்கு
சொந்த நிலம் என்று பட்ட போடுகிறது ....

எவ்வளவு கஷ்ட பட்டாலும்
ஏழைகளின் வீட்டு தெருதான்
என்று சொல்லாமல் சொல்லும்
நமது அரசாங்கம் கேடுகெட்ட
அரசாங்கம் இது திருந்துமா
இல்லை மனிதன் உயிரை
மீண்டும் மீண்டும் உணவாய்
உட்கொளுமா?
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Gotham

வறுமையென்று அறியிலர் சொல்வர்
கண்ணே
இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமும்
இப்படியே!

பசியில் காத்திருக்கிறாய்
நான் சுட்டுத் தரும்
ரொட்டி சாப்பிட

சிமெண்ட் தரையில்
அடுப்பு மூட்டி சுத்தமாய்
செய்யணும் கண்ணே
செத்த பொறுத்துக்கோ!

நாடோடியாய் மாறியது
குறவர் கூட்டம் மட்டுமல்ல
நாமும் தான்
நேற்று அந்த ஊர்
இன்று இந்த ஊர்
நாளை எந்த ஊரோ?

சூடான செங்கல்
கலவையினூடே நம் மனம்
மட்டுமல்ல
உடலும் சூடேறும்

ஆயினும் உழைத்து தின்றோம்
என்று மனம்
கர்வம் கொள்ளும்

உழைக்கக் கற்றுக்கொள்
மகனே
உன்னை என்றும் கைவிடாது

இப்படிக்கு
கட்டிடத் தொழிலாளி!!

:)