Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 038  (Read 3159 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 038



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Global Angel அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 07:45:11 PM by MysteRy »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
முதிய சரணாலையம்
----------------------------


உன் அழகினில்
உண்டாகி இருக்கும்
சிதைவுகளில் இன்னும்
புதைந்திருக்கின்றன
என்றன் மையல்கள்..

உன் கார்குழல் வெட்டும்
மின்னல் நரைகளில்
கன்னச் சுருக்கங்களில்
மேலும் கசிந்து கூடுகிறது
என் காதல்..

முகைகளாய் உதிர்ந்த
பல்லற்ற வாய்ச்சிரிப்புகள்
உன் பருவச் சிரிப்பை காட்டிலும்
மயக்கம் தருபவை..

கைக்கோலேந்தி கால் பின்ன
நீ நடக்கும் நடைகள்
அன்னங்களை மிஞ்சுபவை..

உன் சுருங்கிய கைகள்
என்னை சீந்து இன்பம்
தேவதைகளின் ஆசிக்கு
இணையானவை..

நடுங்கும் இதழ்களால்
நீயெனை அழைக்கும் வார்த்தைகள்
என் கவிதையைவிடினும் அழகானவை..

நீ என் காதல் பறவையின்
முதிய சரணாலையம்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

நம் வசந்த வாழ்வின்
கடைசி வரிகள்.....
மறுமைத் தேடலுக்கு
மனுப்போடும் விண்ணப்பம்

நம் வாலிபப் பாறையைக்
பெயர்த்தெடுத்து - காலம்
வரையும்
கடைசிச் சிற்பம்

விழிச் சுருக்கத்தின் கிறக்கத்தில்
இறுகிக் கிடக்கும் சோகம்......
நம் தளர் நடையிலோ
பாதச்சுவடு
உலர்ந்து வெடிக்கும்!

வாழ்க்கை தேசம்
தாழ்போட்டமிழும் ...........
ஆன்மீகக் குளியலுக்காய்
சுவாச நீரோட்டமோ........
சுகம் காட்டும் நோய்களுக்கு

மனப்புலத்தின் நிழலிலே
மங்கிப் போகும் ஞாபகம்
ஐம்புலன் ஒலிபரப்பில்
இயலாமை உலாவாகும்

வாலிப மிடுக்கெல்லாம்
தொலை நோக்கி வழிந்தோடும்.....
அநுபவங்களின் வீரியங்கள்
வந்தமரும் வாழ்வினிலே

வேரறுந்த கனாக்கள்
வேவு பார்க்கும் உறக்கத்தை.....
விரக்திக் களைப்போ
உயிரை அறுத்துப்போகும்

இரங்காத உறவுகளின் இம்சையில்
இதயம் இளைப்பாறும்.........
உறக்கத்தின் அருமை
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்

காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக.......
வீணாய்ப் போன விழுதாய்
நீண்ட தனிமை
கதறித் துடிக்கும்

நரை வடுக்களுடன்
நாடியும் தளர்ந்து..........
மூப்புத் திரையோட்டத்தில்
மூச்சும் அந்நியமாகிப் போகும்
உன் நினைவுகளில் ஏங்கி தவிக்கும் 

விறைத்த மனசுக்குள்
சிறைப்பிடிக்கும் ஆசையொன்று!
மறை கழற முன் - என்
ஆவி பிரியாதே இப் புவிதனை நீங்கி
உன் இனிமையான நினைவுகளை சுமந்தபடி ....
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
என் பாட்டி மனதளவில்
பார்ப்பதற்கு ஒரு குழந்தை
போலவே இருப்பாள்
என் தாத்தா மனம்
அவரின் தலை முடி போல
வெள்ளை நிறமாய் ....
 
நாங்கள் பேசும்போதும் எங்களை
விட்டுக் கொடுக்க மாற்றார்கள்
பள்ளிக்கு செல்லும் முன்
அவர்களிடம் இருந்து விடை பெரும்
நேரத்தில் ஏதாவது கெடைக்குமா
என்று கேட்டால் போதும்
இந்தாடா என்று ஐந்தோ பத்தோ
எங்கள் கையில் திணிப்பார்கள் ....

மாலை வீடு திரும்பியதும்
எங்களை அருகில் அமர வைத்து
பல கதைகளை சொல்லி
 சோறு ஊட்டி சற்று
ஓய்வு பெற சொல்லி
தாளடு பாட்டு பாடி
துங்க வைப்பார்கள் ....

எங்கள் பள்ளிகாலங்களில்
அவர்கள் தீட்டிய ஓவியங்கள்
எங்களின் பவுடர்
தீட்டப்பட்ட முகங்கள்
பள்ளியில்ஒரு நாள்
வாத்தியார் அடித்ததற்கு
அவரின் வீட்டு வாசலுக்கு
என்னை இழுத்துச் சென்று
வீதியே பார்க்கும்வண்ணம்
கத்தினார் என் தாத்தா ....

அம்மா அடித்தாலும்
அப்பா அடித்தாலும்
எங்கள் பாட்டிதான் இருக்கிறாள்
என்ற எண்ணம் தோன்றும்
எப்போதும் என் பாட்டி முகம்
இன்றும் என்னுடன் வரும்
எனது பள்ளியை கடக்கும் போது ....

நாட்கள் நீண்டது வெளியூர்
சென்று படித்தேன்
கோடை விடுமுறைக்கு
இல்லம் திரும்பினேன்
அப்போது  என் தாத்தா பாட்டி
தோல் போர்த்திய எலும்பாகத் தெரிந்தார்கள்
அருகில் சென்று தாத்தா பாட்டி
என்றதும் அவர்களின் முகத்தில்
ஆனந்தம் பொங்கி என் கன்னத்தில்
மாறி மாறி முத்தம் தந்தார்கள் .....

மறுநாள் என் பாட்டிக்கு
ரெம்ப உடல்நிலை
மருத்தவமனைக்கு
செல்லும் போது-என்னை
அழைத்து நான் வந்தாலும்
தான் வருவேன் நீ எப்போதும்
சந்தோசமா இரு தாத்தாவை
பார்த்துகொள் என்று கண்நீர்யுடன்
மருவமனைக்கு சென்றும்
பயன் இல்லை இல்லத்தில்
அழுகுரலுடன் என் தாத்தா
என் உறவினர்கள் யாவரும்
என் பாட்டி இறந்து இன்றும்
 நீங்காத நினைவுகள் என்னுள் ...

என் அப்பா ராணுவத்தில் இருந்து
வந்து புதிய இல்லம் குடிபோன்ன
பிறகு என்னுடன் வா என்றதற்கும்,
பாட்டி இருந்த வீடு என்றார் ....

அதன் பிறகு இரண்டாண்டுகள்,
இன்று தான் செல்கின்றேன்
நேற்றிரவு அவரும் போய் விட்டதாக
சேதி வந்திருந்தது
வயதான உடம்பு,
நெடுநேரம் இருக்கக் கூடாதுதென்று
நேற்றிரவே எடுத்து
விட்டதாகச் சொன்னார்கள்

மாலை ஒன்றை சாத்திவிட்டு
கண்கள் துடைக்கும் போது
படத்தில் அவரை மறுபடி பார்த்தேன்
அதிலிருந்துகொண்டும் என்னை
வாஞ்சையாகவே பார்த்தார்
மறைந்தாலும் என் மனதில்
இன்றும் அவர்களின் நினைவு
என்னை பின் தொடர்கிறது .......
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dong லீ

வாழ்வின் அர்த்தங்கள்
இழைந்தோடும் உறவிது

இந்த உறவில் நுழைந்து
உறவாடி மகிழ்ந்து
உயிரில் கலந்து
வருடங்கள் கடந்து
முதுமை அடைந்த உடலில்
முதுமை பெறாத காதலுடன்
உன்னால் இன்னும் வாழ்கிறேன்

வாழ்க்கை முழுவதும்
துணை வந்தாய்
நான் கண்டிராத
நேசம் தந்தாய்
குழந்தையாய் மாறி
உன் காதலை அனுபவித்தேன்
அன்னையாய் மாறி
உன்னை காதலால் கொஞ்சினேன்


தீராத அன்பை
திகட்டாமல் தினம் தந்த உன்னை
விழியில் வைத்து
பார்த்து கொண்டேன்

உன் சிரிப்புகளை
இதயத்தில் சேகரித்தேன்
கண்ணீரை தோள்களில் தாங்கினேன்

உந்தன் கை கோர்த்து
எந்தன் உயிர் வாழ்ந்தேன்

உனக்கென மட்டும் வாழும்
என் இதயம்
உன் அன்பில்
நாளும்  உருகுகிறது   மெழுகாய் ..

இதழ் தரும் மார்கழியின் இதம்
காலப்போக்கில்
குறைந்தாலும்
இதழின் முயற்சியில்
இதயம் குளிர்வது
மாறாத காதலால் ..


ஞாபக மறதியால் வாடும் வயதிலும்
உந்தன் ஞாபகங்களை மட்டும்
மறக்காமல் இருப்பதால்
எனக்கு ஞாபக மறதி இருக்கிறதா
இல்லையா என்பதை
மறந்து விடுகிறேன்

இந்த ஐம்பது வருடங்கள் போதாது
இன்னும் பல நூறு வருடங்கள் 
உன்னுடன்
வாழ்ந்திட ஏங்குகிறேன்
« Last Edit: September 07, 2012, 09:31:58 PM by sri »

Offline Rainbow



தள்ளாத வயதில்
தளராத நினைவில்
தவழ்கிறது என்றும்
நம் இளமை காதல்
இன்றும் உன் அருகில்
உருமாறினாலும் உளம் மாறாத
உன்னத அன்போடு
துணை இருப்பேன் அன்பே ...


காமம் இல்லாத காதலோடு
உன் கன்னம் சேரும்
என் உதடுகள் சொல்லும்
என் மன கருவுக்குள் உன்னை
சிலை வைத்த சேதியை ..


உறவற்று போகலாம்
உணர்வற்றும் போகலாம்
தள்ளாத முதுமையில்
உன்னை தழுவாது போகலாம்
எனினும்
தரணியில் என் திராணி இருக்கும் வரை
உன்னை சுமந்து என் உயிர்வாழும் சகியே ..