Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 033  (Read 3022 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 033




இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Global Angel  அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 07:33:29 PM by MysteRy »
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
என்னவள்!

என்னுள்ளே பல மாற்றங்களை
ஏற்படுத்தியவள், பார்த்த நாள்
முதல் பின் தொடர்கிறேன்,
அவள் பாத சுவடுகள் வழியே!

அவளின் பாதம் பாதமல்ல பல்லக்கு,
என் இதயத்தை காதலில் உறைய வைத்த
பல்லக்கு,அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும்
இம்மண்ணில் விழவில்லை என் மனதில்!

தேவதை அவள்!
அல்லித்தண்டு பாதம்,தேன் சிந்தும் பாதம்
அவளின் பாதம், தண்ணீர் கூடஅமிர்த சுவை
கண்டது அவளின் பாதம் தரிசித்ததால்!

பாதத்தோடு பூட்டிய இரண்டடுக்கு கொலுசு
அதில் பதித்த மூன்று முத்துக்களின் கொத்து
அதுவே அவளின் அழகிய பாதத்தின் சொத்து, அவை
உன் பாதத்தோடு பூட்டவில்லை, என் இதயத்தோடு!

உன் பாத கொலுசொலி ஒலித்தது என்
நாடித்துடிப்பாய் ,நான் துடிதுடித்துப்போனேன்
துவண்டு போனேன், தூக்கமற்று
பசியற்று, காதல் எனும் கருவறைக்குள்!

கருவறையை விட்டு கரை சேர்க்க
வருவாயா உன் பாதத்தால் எனை நோக்கி
காதலை முத்துக்களாய் கோர்த்து
இல்லற வாழ்வில் இன்புற,
துடியாய் துடிக்கிறது என் இதயம்,
உன் பாத கொளுசொலியாய்!

உன் காதலை என்னிடம் நீ கரை சேர்க்க
உன் நிழற்படம் பார்த்து மட்டுமே
வார்த்தைகளை கோர்த்து கவிதையாய்
கரை சேர்த்த என் காதலை நீ
நிழற்படமாகவே மாற்றிவிட்டாய்!!!

இதற்காகவா உன் பொய் காதலை கரை
சேர்த்தாய் , புலப்பட்டது பிறகு, உன்
 பாத சுவடுகள் அல்ல புதைகுழிகளின்
பூங்காவனம் , உன் கொலுசின் ஓசை
அல்ல நீ எனக்கு அடித்த சங்கு ஓலி என்று!!!
 
« Last Edit: July 26, 2012, 02:59:46 AM by vimal »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
என்னவள் !
பட்டுபோல பளபளக்கும் மேனிக்கு
பட்டு பாவாடை உடுத்தி
என்னை காண வரும் என்னவள்
கலப்படமில்ல தங்கத்தேர் !

என் தேவதைக்கு கால்கள் உண்டு!
பூக்கள் போல பாதம் உண்டு!
காற்றை போல மேன்மை உண்டு!
பறந்து விரிந்த வானம் போல நல்ல மனம் உண்டு !

உன் பாதம் தொட்டு பார்க்க  ஆசைப்பட்டு
உதிர்ந்த பூக்கள் உன் பாதம்  தொட்டுச்
சொல்லட்டுமே அடுத்த தலை முறையாவது
உன் பாதம் போல நான் பிறக்க வேண்டும் என்று

விழுந்த பூக்களின் மீது பாத்து நட பூவரசி
பாவம் அந்த பாதம் கசங்கி விடும் பூவுரசி
உன்பாதம் படாத உன் பாதின் மென்மை
தொட்டு உயிர் பெற மாட்டேனா எங்கும் பூக்கள் !

பல பழக்கும் மேனியை தொட்ட
தண்ணீர் கூட சிலி சிலிர்த்தது
என்னவளின் பாத அர்ச்சனைக்காக
மலர்கள் கூட மண்டியிடும்!

உன் பாதத்தில் அணிந்த கொலுசு
என் இதயத்தை சுற்றி வளைத்த பிடிப்பு
கொலுசின் சின்னஞ்சிறு சிதறல் ஓலி
என் இதயத்தின் நீங்கா துடிப்பு!

என்னவளின் பாதம் பட்ட இடமெல்லாம்
பால் வார்க்கும், கடல் நீர் கூட
கன்னுன்றன்காமல் காத்துகிடக்கும்
என்னவளின் பாத தரிசனைக்கு அமிர்தமாய் மாற

அவள் வைக்கும் ஒவ்வொரு அடிகளும்
என் இதய கூட்டில் ஒலிக்கும் இதய துடிப்பு
நீ எப்போது என்னிடம் வந்து சேருவாய்
நீ இலையேல் நின்றுவிடும் என் இதய துடிப்பு !
[/b]
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கண்ணே ..!
கனவில்  இதுவரையிலும்
உன் பாதம்  தவிர்த்து புற அழகை
கண்டதில்லை, கள்வன்போல்
கள்ளத்தனமாய் கண் கொட்டாமல் நான்
காண்பதை நீ கண்டு  எங்கு
கிட்டாமல் பொய் விடுவாயென  அஞ்சியே
கண்காளால் ஊடுருவ அச்சம் கொண்டு
கனவினில் கண்குளிர கண்ட
கன்னியின் பாதத்தை
கற்பனை குதிரையை தட்டி
உயிரோவியமாக்க என்னாலான முயற்சி......!!

கட்டி கரும்பும், கணியமுதமுமாய்
விளங்குகிற கட்டழகு கன்னியின்
கட்டுடல் போர்த்திய
பளபளக்கும் பட்டு ஆடையும்,

உன் பாதம்  சேரவே காத்து கிடந்தாற்போல்
சிறு அருவியாய் கொட்டும் நீரும்,
கொட்டும் நீர் பாதம் பட்டதால்
நீருக்குக் ஏற்பட்ட  சிலிர்ப்பும்,

பளபளக்கும் உன் பொன்னிற மேனியில்
பட்டு தெறிக்கும் நீர் கண்ணாடியின்
பிம்பம் போல் தகதகத்து
விலகி செல்லும் ஒ(லி)ளிசிதரல்களும் ,

உன்னடி சேர்ந்திட அனைவரும்
காத்துகிடக்கும்போது   நாமும் சேர்ந்திடலாமென
பாதம் பட்டு சென்ற நீர் தொட்டு செல்லட்டுமென
வாஞ்சையுடன் சிதறி கிடக்கும் மலர்களும்,

உன் பாதத்தோடு ஒட்டி உறவாட
உரிமை கோரி சங்கிலிபோல்  பிணைத்துகொண்டு
பட்டு பாதம் மின்ன அழகாய்
இட்ட இருவரி பட்டடையும,

உன் நடையின் அசைவிர்கேற்றாற்போல்
பட்டடையில் அடுக்கடுக்காய்
இட்ட முத்துகள் தகதகக்கும்  மேனியை
தீண்டுவதால் உயிர்த்தெழும் இசையும்,

உன் மேனியை தீண்டி முத்துகள் ஏற்படுத்தும்   
நாதமே எனக்கான  உயிர் துடிப்பெனும்போது,   
சர்வகாலமும்  கண் இமைக்காமல்
கண்டும்  கேட்டும்  ரசித்திடுவேன்......!

உன் கார் கூந்தல் கொட்டும் அருவியோ,
உன் நெற்றி கவிழ்த்து வைத்த பிறைநிலவோ,
உன் விழிகள் கண்டவுடன்
மையல் கொள்ளும் மயில் விழியோ,
உன் நாசி துவாரம் கிளியின் துவாரமோ,
உன் செவ்விதழ் கொவ்வைப்பழமோ,
உன் பற்கள் வரிசையாய்
அடுக்கி வைத்த முத்துகளோ,
உன் அங்கம் மின்னும் தங்கமோ,
உன் இடை கொடி  இடையோ,
உன் முழுவுருவும் அறியவில்லை.........?

உன் ஒரே ஒரு கேசம் ,
உன் ஒரு நகத்தை வைத்து
உன்னை உயிர் சிற்பமாய்
உருவாக்கிட  உன்னவன்
உலக புகழ்  ரவிவர்மன் இல்லையே....!

சர்வ லட்சணமும் பொருந்திய
பொன்னிற மேனியையும்
மென்மையும் பொருந்திய  பாதமுடைய
கட்டழகியான  உன்னை
வட்ட நெற்றியில்பொட்டிட்டு,
திருமாங்கல்யம் இட்டு
கரம் பற்றி என் இதய
கூட்டிற்குள் சேர்த்த பின்
கந்தர்வர்களும் கண்டு வியக்கும்
கட்டி கரும்பின்  அழகை
கனவினில் கள்வன் போல் காணாமல்
கண்குளிர கணவனாய் கண்டு ரசித்து
கற்சிலையாய் வடித்திட காத்திருக்கிறேன்...!! 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Rainbow

உன் பாதம் தாங்க
உதிரி பூக்கள் செய்யும் தவம்
அவையோடு போட்டியிட்டு என் மனதும்
உன் கொலுசு ஓசைக்கு
கொஞ்சமும் குறைவின்றி
கொஞ்சி விளையாடுது ...


மாசற்றவளே..
மனம் கவர்ந்தவளே
உன் மலர்பாதமே மனதை மயக்குவதாய் அமைந்தால்
மகரந்தம் சுமக்கும் உன் பூ மேனி
உவமான உவமேயமற்ற
ஒப்பில்லா ஓர் மன்மத சிலையோ ...


உன் செம்பாதம் தொடும்
தண்ணீராக நான் இல்லை
தள்ளாடும் என் மன ஓட்டத்துக்கு
அதன் வாட்டத்துக்கு
அத் தண்ணீரை தா
ஜென்மத்துக்கும் எனக்கு தாகம் எடுக்காது


உன் பாதம் தீண்டும்
பாக்கியம் கிடைத்தால்
பாரில் நான் தான் பாக்கியவான் சகியே ..

Offline Bommi

அழகானது ,மென்மையானது
உணர்ச்சி மயமான உன் பாதம்
பட்டு தெறித்த தண்ணிரில்
நான் சிலிர்சிலிர்க்க -என்
விடியலுக்கு விடை சொல்

தேகம் சிலிர்க்க தாகம் தீர்த்த
தண்ணீரை பற்றி எழுத
நினைத்த போது நக்கலுடன்
நகைத்து கொண்டே உன் கால் சலங்கை
என் காதினில் அவள் கால் தரிசனம்
கிடைக்க மெழுகாய் தரித்தவன் நீயல்லவோ

குங்குமம் மங்கலமாய் மாற
திலகம் கொண்டவள்
திலகம் பெருமை கொள்ள
என்னவளின் நெற்றி வகிட்டின்
குங்குமத்திற்கு சொந்தக்காரன் நான்

பட்டுசேலை சரசரக்க
அவள் இதயம் பதை பதைக்க
மெட்டி ஒலி கிணுகிணுக்க
என் அருகில் அமர்ந்தவளை
கார் மேகத்துடன்  காவளிருந்தவலாய்
நானிருக்க தென்றலாய் நெருடி
ஈரமாக்கியது என் காதல்

பெண்ணே  உன் பாதம் பார்த்து
சொக்கி போன நான்-உன்
முழுஉருவம் பார்த்தால் தொடரும்
என்காதலின் பயணம்
அலங்காரத்துடன் உன்
பாதங்களை கவிதையாக்கி
உன் காதலனாக(கதாநாயகனாக)
கசிந்த காதல் என்னிடத்தில்
அடி நான் உன் தோழியடி !!!!!
« Last Edit: July 26, 2012, 11:08:08 PM by Bommi »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கரும் பச்சை இலை மீறி
தரும் மஞ்சள் தண்டு கொண்டு
மலர் மஞ்சள் தாமரை பாதம்
மண் பட்டால் நோகும் என்று
மனம் பதைத்து போகுதடி ...

நல் முத்து வர்ணம் கொண்டு
நன்று செழித்த உன் பாதம் கண்டு
நாளடைவில் செழித்து வளர்ந்த
மேனி காண நெஞ்சு துடிகுமடி ...

வெண் சங்கில் முத்தாரம் போல்
உன் தந்த காலில் ஓர் ஆரம்
நீ தளிர் நடை போடும் போதெல்லாம்
உன் நளினத்தை பறை சாற்றுமடி ..
உன் பாத கொலுசாக என் நெஞ்சும் ஏங்குமடி..

உன் பாதம் தான் தாங்க
மலரெல்லாம் தவம் பண்ணுதடி
மலர்வனமே நீ என்று
மனம் சோர்ந்து போகுமடி
உன் பாதம் பட்ட நீர் பட்டால்
பன்னீர் துளி என்று தாங்குமடி ..

உன் பாதம் கண்ட நீரெல்லாம்
எனக்கு பன்னீர் துளி ஆனதடி
தேவர் வாழ அமுதம் பால் கடல் அடி
இந்த தேவன் வாழ அமுதம்
உன் பாதக் காலடி ...

நீராடும் உன் பாதம் கண்டு
கள்ளுண்ட மந்தியாகி
மதி மயங்கி மனம் தேம்புதடி
மலரே உன் பாதம் தாங்கி
மணி மெட்டி போடும்
நாளுக்காய் மனம்
மயக்கம் கொள்ளுதடி ..

என்ன பார்க்கிறாய்
எனக்காக நீ படித்த காதல் வார்த்தைகள்
என் உணர்விலே கலந்த மூச்சுக்கள்
காற்றோடு காற்றாகி கண்ணீராய் ஆனதடா
உன்னை தேடி என் பாதம்
காடு மேடெல்லாம் அலையுதடா..
உன்னை தேடும் என் பாதம்
உணர்விழந்து போனாலும்
உனக்காக என் பாத கொலுசு
ஒலித்துகொண்டிருக்கும்
உயிருள்ளவரை உன்னை தேடி ...