Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 028  (Read 2525 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 028



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் jawa அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....



« Last Edit: October 11, 2018, 07:26:53 PM by MysteRy »
                    

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
நித்தம் நித்தம் என்னுள்ளே

நிம்மதி தந்து போனவளே!

சித்தம் மொத்தம் என்னுள்ளே

சிலையாய் வந்து நின்றவளே!

கலைகள் மொத்தம் கற்றுண்டு

கண்ணடி வித்தை செய்தவளே!

எந்தன் கவிதை நீ கேட்டு

நில்லடி கொஞ்சம் என்னவளே!

பாலை மணல்கள் பறந்தோட

காற்றும் கொஞ்சம் அனலாட

நினைவில் நீயே விளையாட

எந்தன் நாவும் உன் கவிபாட

கேளடி கொஞ்சம் என்னவளே!

என் நெஞ்சமதில் நீ வந்து

தஞ்சமதை நான் தந்து

பஞ்சமில்லா பாரினிலே

கஞ்ச முத்தம் தந்தவளே!

மிச்சம் எப்போ என்னவளே!

உன் பாதம் பட்ட வாசல்படி

பூக்கள் கொஞ்சம் கேட்டதடி

பூக்கள் அதை நான் தூவ

புன்னகையில் பூகூட

பூப்பெய்தி விட்டதடி!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நீல வானும்
நீளும் கடலும்
நாளும் நம் வாழ்வில்
நவின்றது பலகோடி ...


உன்னோடு நான்
என்னோடு நீ
ஏகாந்த இரவு
எரிகின்ற உணர்வு ...


உன்னோடு சேர்ந்த
என்னோடான தனிமைகள்
நீள்கின்ற வரம் வேண்டும்


கண்ணோடு கண்கலந்து
கருத்தோடு நீ கலந்து
காதோடு கதை பேசி
கலந்திடும் இரவு வேண்டும்


அணைத்திடும் பொழுதினில்
அலைகின்ற உணர்வுக்கு
ஆர்த்மாத்தமான - உன்
அழுத்தங்கள் வேண்டும் ...


உன்னோடு நானும்
உறவாடும் பொழுதில்
பார் பார்க்கும்  மதியவனும்
நம்மை முகில் எனும் கூட்டுக்குள்
பதுங்கித்தான் பார்ப்பானோ ....


அன்றில்
பாராளும் உன் கைகள்
பாவை இவளை ஆளுவது கண்டு
பார்வையிலே வெட்கம் சூழ
போர்வை என முகிலெடுத்து மறைத்தானோ ...


வெண்ணிலவின் ஒளி எடுத்து
வீசுகின்ற தென்றல் தனை பிடித்து
ஓடுகின்ற நீர் கரையில்
ஓவியமாய் எனை நிறுத்தி
காவியம் அதை நீ தீட்ட
காரணமாய் கொண்டாயோ ...


பாவை  இவள் மனசிறையில்
பதிந்து விட்ட ஓவியம் நீ
பாதியிலே போனாலும்
பார்த்திருப்பேன் உன்னை எண்ணி
                    

Offline Dong லீ

இருளின் கைகளை பிடித்து கொண்டு
பொழுதை கழித்து கொண்டிருந்தது இரவு

மனதை வருடும் மெல்லிய ஒளியுடன்
மெல்ல மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது நிலவு

நிற்பதும் ஓடுவதுமாய் விளையாடிய மேகங்கள்
இடை இடையே அவை மோதிக்கொள்ள
எட்டி பார்தது கொண்டிருந்தது மின்னல்கள்

பின் லேடனுக்குள்ளும் காதல் குடி வரக்கூடிய அளவு
இனிமையான சூழலில்

நிலவு ஒளியில் வெண்ணிற ஆடையில்
தேவதையாய் என் காதலி

நிலவின் ஒளியை எடுத்து கொண்டு
வெளி விடும் அவளின் கண்கள்
மின்மினி பூச்சிகளின் கர்வத்தை
சுக்கு நூறு ஆக்கியது
கையில் விளக்குடன் பறந்து செல்லும்
சட்டம் கொண்டு வரப்பட்டது
அப்பூசிகளின் உலகில் ...!

என் காதலியின் அந்த பார்வை
என்னையும் விட்டு வைக்கவில்லை
என் மனதில் மின்சாரங்களை
மிதக்க விட்டது ..!

நிலா அருகில் கார்மேகம் போல்
அவள் முகம் அருகில் கார் கூந்தல்
அதில் ஊஞ்சல் ஆடியது
ஒற்றை ரோஜா ..

மெல்ல அவள் பேச
நாட்டியம் ஆடியது
அவளின் ரோஜாவை போன்ற இதழ்கள்

அந்த இதழ்கள் புன்னகை தேனை சிந்த
அவள் பற்கள் மின்னல் போல் மின்ன
என் இதயத்தில் இடியுடன் கூடிய மழை

அவள் மூச்சு காற்று என் மேல் உரச
பனிக்கட்டிகள் கை கொண்டு
என் தலையை வருடிய உணர்வு

அவள் என் தோளில் சாய்ந்து கொள்ள
நிலம் என் காலை விட்டு நீங்கி
கீழ் நோக்கி சென்றது போல உணர்வு

உலகம் இப்படியே நின்று விடாதா என
ஏக்கம் கொண்டது என் உள்ளம்

விடியாமல் இருக்க வேண்டுமே ..
என்ன செய்யலாம் என யோசித்தேன்

பி ஆர் பி ..
சூரியனை கொன்று விட்டு வருகிறேன்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
பறந்து விரிந்து நிற்கும் ..
நீல வண்ண கடலை போல....
நிறைந்து மிகுந்த காதலுடன்...
நமக்கு மட்டும்மான  அந்த  உலகில்...
இதமான ஒரு  இரவில்...
நிலவுப்பெண்ணின்  நிழலில்...
என்னோடு நீயும்...
உன் நெஞ்சோடு  நானும்...
இப்படி சுகமான பொழுதில்...
சில்லென்ற பனிக்காற்று...
புதுக்காற்றாய் ஸ்பரிசிக்க ..
நிசப்தமான   அந்த  நோடிகளில் ...
எனக்கு மட்டுமே சொந்தமான  ....
நான் குடிகொண்டிருக்கும்  இதயம்..
அதன் துடிப்பாய் என் பெயரை உச்சரிக்க......
சங்கீத ஸ்வரங்களாய்....
மனம்  அதை ரசிக்க....
நொடிகள் பொழுதுகளாய் கழிய...
இந்த புனித  இரவை
இதயம்  அதன்  இறுதிதுடிப்பை ... .
துடிக்கும்  வரை ...
பொக்கிஷமாய்  காத்து  வருமே.......
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இது என்ன இது ??

எழில் சார்ந்த, இயற்க்கை சூழ்ந்திட்ட ஏகாந்த வேளையில்
மாலையும் மதிமயங்கும், இளம்  இரவின்   சாந்த சோலையில்

எதிர் எதிர் திசையில் இருந்தும்  நேர் விசையில்
இணைந்திருக்கும் இரு (மனித ) கந்தக துகள்களா ??

இதுநாள் வரை வெறும் இதயங்களால் மட்டும் இணைந்திருந்து
இன்று இரண்டற கலந்துவிட்ட இளம் காதல்மான்களா ??

காய்ந்து சருகுகளாய் உதிர்ந்துவிட்ட பட்டுப்போன  மரத்தினை
உய(யி)ர்   காதலினால் மொட்டு விட்டு பூக்கள்  பூக்கும்
செழு மரமாய் மறுபடியும்  உருவாகும் முயற்சியோ ??

நிலவு அது  தோற்று போகும் அளவு, குளிரையும். ஒளியையும்
எங்கள் காதலாலும்  கொடுக்க முடியும் என்பதை
நிலவே நாணி மறைந்திடும் வகை வெளிபடுத்தும் முயற்சியோ ??

வானமே வியந்திடும் நீலத்திலும், அளவே அசந்துவிடும் நீளத்திளும்
பெண் மனதிற்க்கு இணையான  ஆழத்திலும், கடலே!  கடலே !
உன்னை விஞ்சிட இதோ எங்கள் காதல் போதுமென
உணர்த்திடும் மேன்மை  முயற்சியோ ???

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அழகான நிலவொளியின்
வெளிச்சம் கூட
அன்னியமாகட்டும்
இக்கணம்...
அருகில் நீ
அணைப்பில் நான்.
அழுகை மறந்து
ஆனந்தம் தேடும்
தருணம்

இரவின் நிலவு
அமைதியை நிலவ
வெளிச்சமில்லா இரவாய்
நிலவது தேய்ந்து மறையாதோ
ஆனந்த தருணம் அது நீளதோ
நாணம் அது குறையாதோ
காதல் கவிதை தொடராதோ

பிரிவின்  நினைவுகள்
அலைமோத
அணைப்பின் கதகதப்பில்
முகம் பார்த்து
தேக்கி வைத்த ஏக்கங்களையும்
சொல்லாத வருத்தங்களையும்
விழிகளில் நான் வரைய
விழியின் மொழி அறிந்து
மௌனமாகி
என்னை புரிந்தும்
புரியாதவனாய்
கண்ணோடு கண்ணோக்கி
மறுமொழி நீ கூற
வெட்கத்தால் நான் துடிக்க
என்னோடு சேர்ந்து
நாணம் தாளாமல்
நிலவும் மறைய
காரிருள் நம்மை சூழும் நேரம்

இதமான அணைப்பு
இறுக்கமாய் மாறி
காற்றின் குளுமை கூட
என்னை அனலாய் சுட்டெரிக்க
அணைப்பில் இருந்து
விடுபட முடியாமல் நான்....

விடியாத இரவாய்
முடியாத உறவை
நீங்காத நினைவாய்
என் வாழ்வது நீளாதோ
உன்னோடு  வாழும் வரம்
கிடைக்காதோ....

என்னவனே
சோகம் மறந்து
சுகம் காணும் நாள் வேண்டும்
பார்வை முழுதும்
உன்னில் நிலை கொண்டு
என்னிலை
மறக்கும் நாள் வேண்டும்
உன் மார்போடு முகம் புதைத்து
துக்கம் மறந்து
முடியாத துயிலை தொடர
கையோடு கைசேர்த்து
காலம் முழுதும் உன்னை தொடர
உனக்கு  பின்னால் நானும்
என் பெயருக்கு பின்னால் நீயும் வருவாயா  ;) ;) ;) ;) ;)
« Last Edit: June 21, 2012, 09:37:36 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அழகான மாலை பொழுது
மஞ்சள் நிற மேனியோடு நிலவு
தெவிட்டாத தேன் நிலவே
தேய்ந்தாலும் நீ அழகே
கால் தடம் மறையும் நேரம்
கதலிக காதிருந்த நேரம்...

மாலைபொழுதென்பதால் காதலர்கள்
இருப்பிடம் நோக்கி திசை
திருப்பி கொண்டிருந்த அந்நேரம்
எங்கிருந்தோ வந்த மேக
கூட்டகளின் திடீர் முற்றுகையிட்டது.....

மெல்ல இருள தொடங்கி
தென்றல் காற்றும்
தன் வேகத்தை கூட்டி
பனித்துளிகள்
மழை துளிகள் போல  ஆரமித்து
எங்கும் தன் கால் தடத்தை
தண்ணிராய் பதிய வைத்தது.....

பனிதுளிகள் வேகம் அதிகரித்து
கையில் குடைகூட இல்லை
கடலோர மரத்தில் அதன் கிளைகளின்
அடியில் என் உடலை நனைந்தும்
பாதி நனையாமல் நின்று கொண்டிருந்தேன்.....

தூரத்தில் ஒரு பெண்
தன் துப்படவின் தலைப்பால்
தலையை மூடிக்கொண்டு நான்
நிற்கும் இடம் நோக்கி
விரைந்து வந்தாள்-அருகில்
வந்தவளின் முகம் பார்த்தேன்
அவளே என் காதலி ...

அண்ணனுடன் ஷாப்பிங்
போகிறேன் வரமாட்டேன் என்று
சொன்னவள் என் பிடிவாதம் தெரிந்து
வந்தால் என்னை பார்த்து செல்ல
தப்பிக்க நினைத்து கரணம் சொன்னால்
என்னிடம் மாட்டி கொண்டாள் வசமாக..

நிலா வெளிசத்தில் மத்தியில்
பனித்துளியும் ,மேகதை முறைத்து
பார்த்தபடி என் காதலி
நானோ அவளை ரசித்தபடி....

காற்றின் வேகம் அதிகரிக்க
குளிரில் தேகம் நடுங்க
எங்கிருந்தோ வந்த காற்று
அவளின் துப்பட்டவை
பரித்து சென்றது-தன்
கைகளால் மார்பை
இருக அணைத்து கொண்டு
வெட்கதில் தலை குனிந்தாள்....

பனித்துளிகள் எங்களை நனைக்க
என்னை விட குளிரில் அதிகமாய்
நடுங்கிகொண்டிருந்தாள் அவள்.....

ஓரமாய் நின்ற அவளை
சாரல் காற்றும் கடல்அலை சத்தமும்
என் அருகே வர செய்தது...

இருவரும் மிக அருகருகே
அவளின் கைவிரல்கள்
நடுக்கதில் தாளம்போட
என் பற்களோ பதிலுக்கு
ராகம் பாடியது...

என் மூச்சுகாற்று
அவள் முகதில் பட்டு
முனுமுனுக்க வைதது
அவள் உதடுகளை....

என்னில் ஏதோ உணர்சிகளை
வாடைகாற்றுதூண்ட என்
விரல்கள் அவளை தொட
நினைத்த போது
ஆக்ரோசமாய் அருகில் எல்லுந்த
கடல் அலையால் அவளே என்னை
இருக அணைத்து கொண்டாள்....

பனித்துளிகள்  எங்களை நனைக்க
நான் அவளை இருக
அனைத்து கொண்டு தடுமாரி நின்றேன் .

தலை நிமிர்ந்து  அவள்
இடையில் கை வைத்து
நிமிர்ந்து பார்த்தேன் அவள்
உதடுகள் படபடவென்று
துடிக்க என் உதடும் அதை
பதம் பார்க்க முற்பட்டது....

முற்பட்ட வேலையில்
என்காதலி வெக்கத்தை
பார்பதற்கு கடல் அலைகள்
சத்தத்துடன் பொங்கி நின்றது

வான்மேகம் எங்கள் மேல் படர்ந்தது
நச்சத்திரம் அவளை பார்த்து
கண் அசதைத்து அழைத்தது
என்னவளோ விழிகளை மூடி
என்னை கட்டிக்கொண்டு நின்றால் .........
« Last Edit: June 22, 2012, 06:32:42 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
விசித்திரமா...! அழகு சித்திரமா...!!

ஏகாந்தமான இரவு பொழுது,

தன்  பொன்னிற மேனியை மறைத்து கொண்டு 
வெட்கப்பட்டு முகம்  காட்டும்  பால் நிலவு,

பெரியதும் சிறியதுமாய்
நகரும் மேகங்கள்,

நகர்ந்து செல்லும் மேகங்களிடையே
ஒளிர்ந்து மிளிரும் நட்சத்திரங்கள்,

கார்மேகமும் நிலவொளியும் இரண்டற
கலந்து காட்சியளிக்கும் கருநீல வானம்,

கன்னுக்கெட்டியவரை ஒரே சமமாய்
காண்பவர் கண்குளிரும் நீர்பரப்பு,

நீல வானமும், நீளமான.....
நீர்பரப்பும்  ஆரத்தழுவும் காட்சி,

நிற்கும் மரங்களின் மேல் படும் ஒளியால்
நீரில் விழும்  பிம்பங்கள்,

நீரில் துள்ளி குதித்திடும்  மீனினம்,
குதித்திடும் மீன்களால் தெறிக்கும் நீர்த்திவலைகள்,

தெறிக்கும் நீர்திவளையால்
தவழும்  வட்ட அலைகள்

தவழும் நீரை தழுவும் ஒளியால்
தகதகக்கும் வைரம் போல்  ஒளிசிதறல்கள்,

கரைகள் எங்கும் பச்சை பசேலென
பட்டாடை போர்த்தியது போல் புல்வெளி,

புல்வெளியை  இதழோடு இதழாக
இரவு முழுதும் முத்தமிடும் பனித்துளி,

நிசப்தமான சூழலில் மெல்லிய ஒலியோடு
மிதமாய் வருடி செல்லும் தென்றல், என
இயற்கையில் எத்தனையோ விசித்திர காட்சிகள்
இரசித்திட இருந்தும்.......  உன்
கரம் பற்றி தோள்சேர்ந்து
கருவிழியாம் உன் கயல்விழியை,
மையிட்ட உன் மைவிழியை, கண்டதும்
மையல்கொள்ளும்  உன் மயில் விழியை
காணும்பொழுது மட்டும் ஏனோ......?
அகிலத்தில் உள்ள
அத்தனை விசித்திர காட்சிகளும்
அழகு சித்திரமாய், கருணை முகம் கொண்டு
அன்பு சிற்பமாய் விளங்கும்  உனக்கு முன்
அவ்வளவும் அற்பமாகி போனதாய்
உணர்கிறேனடி பெண்ணே.........!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
என்னவளின் அழகை பார்த்து ,
நிலவு நினைத்து, என்னை விட
அழகா இருக்கிறாளே, யாரவள்!
என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது!
 
நிலவுக்கு என் காதலி மீது ஆசை வந்து
ரசிக்கும் அழகை பார்த்து
கோவம் கொண்ட மேகங்கள்
நிலவை மறைக்க ஓடிவந்தது !

மேகங்கள் நிலவை பாதி மறைத்தது 
ஆனால் நட்சத்திரங்களை மறைக்கவில்லை
அவை அனைத்தும் என்னவளின்
மீது விழிவைத்து வியந்து நின்றது!

அதனை பார்த்த கடலுக்கும் ஆசை,
பொங்கி எழுந்தது பெரிய அலையாய்
அவளின் பாதம் தொட்டாவது
பரவசம் அடையலாமென!

கடல் அலையை பார்த்து
என்னவளுக்கோ பயம் எழுந்தது
துரத்தில் வெட்கப்பட்டு நின்றவள்
ஓடிவந்து  என்னை இறுக்கி அணைத்தால்!

என் மனதுக்குள்ளே இனம்புரியாத
இன்ப சந்தோசம், என் விழிகளை
மூடி கொண்டு என் கைகளால், அவளின்
மெல்லிய இடையை பற்றிக்கொண்டேன்!

எங்கள் மனதை புரிந்துகொண்ட இரவுகள்
ஆசையை நிறைவு படுத்த, மேகங்கள்
உதவியுடன் வானை மறைத்து
எங்கள் கூச்சத்தை போக்கி விலகி நின்றது!


புரிந்தது இருவருக்கும்,ஓருடலாய்
நின்றபின், உண்மைதான் போலும்
காதல் இரு உடலில் வாழும்
ஓர் உயிர் என்று!!!
« Last Edit: June 22, 2012, 12:51:52 PM by vimal »