Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 025  (Read 2406 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 025


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் கார்கி யால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 07:22:10 PM by MysteRy »
                    

Offline thamilan

சிறகு முளைத்திட்ட‌
சிறுவர்கள் நாங்கள்
நேற்றய நினைவு நினைவில் இல்லை
நாளைய நினைவு எங்களுக்கில்ல்லை
நண்பர்கள் நாங்கள் கூடி விட்டால்
இன்பம் தவிர வேறெதுவுமில்லை

கண்ணீரில் நனைந்து
கசங்கிப் போகப் போகும்
அந்த சிரிப்பை
நாங்கள் அனுபவிப்பது
இந்த சிறு வயதில் மட்டும் தான்

இன்று அரும்புகளாக‌
தெய்வீக மணம் பரப்பும்
நாங்கள் நாளை
உலகில் கரங்களுக்குள் சிக்குண்டு
கசங்கிப் பிழியப் பட்டு
துர்மணம் வீசப் போகிறோம்

இப்போது தேவதைகளாக இருக்கும்
நாங்கள்
காலத்தின் செதுக்கலில்
சாத்தான்கள் ஆகிவிடுவோமே

இப்போது கண்ணாமூச்சி ஆட்டத்தில்
ஒளிந்திருப்பவர்களை தேடிக்
கண்டு பிடிக்கிறோம்
நாளை வாழ்க்கை எனும்
ஆட்ட‌த்தில்
ந‌ம்மை நாமே
தேடிக்கொண்டிருக்க‌ப் போகிறோம்

வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ நாங்க‌ள்
செக்கில் க‌ட்டிய‌ மாடுக‌ளாகி விடுவோம்
அது வ‌ரை க‌ட்ட‌விழ்ந்த‌ காளைக‌ளாக‌
உல‌கை முட்டி மோதுவோம்

ஆக‌வே
நாளைய‌ க‌வ‌லை எம‌க்கில்லை
இன்றைய‌ பொழுது இன்ப‌த்தின் எல்லை


ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா
இது சிறுவ‌ர்க‌ள் எங்க‌ளுக்காக‌ ம‌ட்டும்
பார‌தி பாடிய‌ பாட்டு
நாங்க‌ள் சிறுவ‌ர்க‌ள் எனும்
ஒரே ஜாதி
ந‌ட்பு எனும் ஒரே ம‌த‌ம்
ம‌கிழ்ச்சி ஒன்றே எங்க‌ள் வேத‌ம்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
இவர்கள் ஆணோ பெண்ணோ
என்ன சாதியோ!
என்ன குலமோ!
என்ன மதமோ!
இவர்களுக்குள்
இப்படியோர் ஒற்றுமை
சந்தோஷ சங்கிலியில்
பிணைக்கப்பட்டு,

அரும்புகளாய் அன்பு
எனும் வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமலும்
புரியாமலும் அன்பால்
இணைக்கப்பட்டு,

உள்ள உணர்வுகளை
உணராமல், தெருக்கள்
பல இருந்தாலும்
பார்த்து,சிரித்து,பேசி,மகிழ்ந்து
ஒன்றோடு ஒன்றாய்
கலக்கப்பட்டு,

பார்பவர்களின் உள்ளத்தை
இம்மாம்பிஞ்சிகள், இவன்
சாதி,மதம்,குலத்தால்
பெரியவன்,சிறியவன்
என்ற இறுமாப்பை
அகற்றி,

இருளை விரட்டி
பகலை கைகொண்டு
மேகத்தை துளையிட்டு
சிந்தனையின்றி
சிறகடித்துப் பறக்கிறார்கள்
வானத்தை தொட!!!
« Last Edit: May 31, 2012, 10:31:34 PM by vimal »

கார்க்கி

  • Guest
ஓட ஓட ஓட தூரம் கொறையல

பாவாடை நுனியில்

கடிக்கப்பட்ட

பாதி மிட்டாய்களின்

பிசினிலிருந்து எடுக்கபடுகிறது

நம் நட்புக்கான அஸ்திவாரம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடலும் கடல் சார்ந்த இடமும்

வனமும் வனம் சார்ந்த இடமும்

மலையும் மலை சார்ந்த இடமும்

என கூடும் பொழுதுகளில்

விரிகிறது

நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி

தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன்

பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம்

அட

நம்மிடமிருந்தே

உலகிற்கு அறிமுகமானது

பண்டமாற்றம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கல்லாங்கா , லகோரி

கோலிகுண்டு , கிட்டி புல்

தட்டாமாலை , ஐஸ்பாய்

விளையாட்டுகளுக்கும்

சலிக்கிறது

நம்மோடு

விளையாடி விளையாடி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டுக்குள் இருக்கும்

அய்யனார் கோவிலருகே

சமைக்கப்படும்

கூட்டாஞ்சோறு

தீயில் எரிகிறது

உன் வீட்டு  ஜாதியும்

என் வீட்டு மதமும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆலம் விழுதோடு போராடி

ஆற்று நீரில்

எருமைகளோடு ஊறி

புழுதிக்காட்டில் பிரண்டு

....... போராடி ஊறி பிரண்டு

திளைக்கிறது நட்பும் கூட

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் வீட்டிற்கு

நான் கூட்டிவந்த

நிலாவிற்கும் 

என் வீட்டிற்கு

நீ கூட்டிவந்த

நிலாவிற்கும் 

ஏழு வித்தியாசம்

சொல்லும்

நம் நட்பு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாங்காய்களும்

குருவி முட்டையும்

கள்ளி பழமும்

திருட திருட

நட்பும் சேர்ந்தே

இனிக்கிறது


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மயில் றெக்கையும்

சோளத்தட்டையும்

புளியங்கொட்டையும்

பொறுக்கி பொறுக்கி ....

பொறுக்கி பொறுக்கி ....

ச்சீ ச்சீ

பொறுக்கியான நட்பு

நம் நட்பு


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதை நீ எடுத்தாயோ

அது இங்கிருந்தே

எடுக்கப்பட்டது

எதை நீ கொடுத்தாயோ

அது இங்கிருந்தே

கொடுக்கப்பட்டது

ஆம்

நட்பிலிருந்தே

கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வாறான

உவகை ஊட்டும்

பொழுதுகளில்

பால்வெளியில் மிதக்கிறது

நட்பும்

காற்றைப் போலவே


பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும்
இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................

 நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.
« Last Edit: May 31, 2012, 08:41:40 PM by கார்க்கி »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 
அழகான என் நட்பு
அரை குறையாய் போனபோதும்
அழியாத நினைவுகளை
அந்த நாள் ஞாபகங்கள்...

கூட்டாக சேர்ந்து
குருவிகளாக 
கும்மாளம் அடித்து
அதிபரிடம் குட்டு வாங்கும் போது
பள்ளிக்கூடம் வெறுத்து ...
பழிவாங்கும் முகமாக
மொட்ட மண்டை... பட்டபெயர் வைத்தபோது
வலிகளும் மறந்தது ...

ரகசியமாக
வினாத்தாள்களின்¨
விடைகளை பரிமாறி
ஒரே புள்ளிகள் பெற்றபோது
நாம் ஒற்றுமைகளை நினைத்து
பள்ளி அறையே வியந்தபோது
நமுட்டாக சிரித்தபோது
சோதனைகளும் சுகமாகதான் இருந்தது ...

கோவில் திருவிழாக்களில்
சொல்லி வைத்து ஆடை அணிந்த போதும்
அவனுக்கும் கொடு என்று சொல்லி
கச்சானை பகிர்ந்த போதும்
ஆண் பெண் பிரிவின்றி
நட்பும் ஜொலித்து ...

பருவத்துக்கு வந்தபோது
பக்குவம் சொல்வதாய்
பால்ய சினேகிதனுக்கும்
பத்தடி தூரம் வைத்து கலாச்சாரம் ..

பறந்தாடி பல
குட்டை குளமெல்லாம்
நுழைந்தாடி ... புழுதியெல்லாம் குளைந்தாடி
குச்சிமிட்டாய் திருடி அடிவாங்கி ...
மாமரத்து அணில்களாய்
மரம் தாவி ...
மங்களம் மாமியிடம் அடிவாங்கி
மனதோடு சபித்தபோதேல்லாம்
இனித்த நட்பு .....


இன்று  நினைத்தாலும்
ஏக்கம் கொள்கிறது ...
என் சிறுவயது நட்பு வேண்டும்
சிறுக சிறுக சில்மிஷம் செயும்
என் பால்ய பருவம் வேண்டும்..

எல்லாம் இழந்து ..
இன்றும் வாழ்கிறேன்
என் இணையத்து
அருமை தோழர் தோழிகளால் ...

நான் இருக்கும்வரை
என் நட்பும் நம் தோழமையும்
என்றும் வாழும்
என் தோழர்களே ...
                    

Offline Tamil NenjaN

இளமையின் நினைவுகள் பசுமையாய்

பள்ளிப்பருவத்தில்
துள்ளித் திரிவோம்
மாலைப் பொழுதினிலே
கொஞ்சி மகிழ்ந்வோம்

படபடத்து திரியும்
வண்ணப் பட்டாம்பூச்சிகளாய்
சந்தோசமே எங்கள்
சாம்ராஜ்ஜியம்...

பொன்வண்டுதனைப் பிடித்து
தீப்பெட்டியினில் அடைத்து
வித்தைகள் காட்டி
நண்பர்களுடன் மகிழ்வோம்

வேலியோர ஓணானுக்கு
வேகமாய் கல்வீசி
பாலூற்றி புதைத்து
பரவசமாய் களித்திருப்போம்

பட்டென்று வரும் காதலும்
சட்டென்று வரும் நேசமும்
இம்மெனும் முன்னே கோபமும்
கொப்புளிக்கும் உணர்ச்சிகள்
ஆர்ப்பரிக்கும் இளமையின்
துள்ளல்கள்

வாழ்வே ஆனந்தமாய்
உலகமே எங்களுக்காய்
துள்ளும் இளமையே
வாழ்வின் வசந்தமாய்....

கொட்டும் மழையும்
சுட்டெரிக்கும் வெயிலும்
கவலையி்ல்லை எங்களுக்கு

ஆற்றங்கரையோர மணற்பரப்பில்
அமர்ந்திருந்து கதைபேசி
சரிந்திருக்கும் நாணலதை
புல்லாங்குழலாய் துளைபோட்டு
கானம் பாட முயன்ற
களிப்பான நாட்கள் அவை

ஓயாமல் நண்பரோடு
ஊர்சுற்றி வந்தாலும்
வருகையை எதிர்பார்த்து
வாசலிலே காத்திருப்பாள்
தாயவள்

கள்ளமி்ல்லா நெஞ்சத்துடன்
கவலையே இல்லாமல்
கழிந்து போன நாட்கள்
பசுமையாய் வீற்றிருக்கும்
மனதில் என்றும்
இளமையின் நினைவுகள்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பள்ளி பருவத்தில்
பக்குவம் இல்லாத போதும்
கள்ளம் இல்லா உள்ளதோடு
கலகலப்பாய் வந்த நட்பு
பாசத்தை கூட
போட்டிபோட்டு பரிமாறி
ஒருவருக்கொருவர்
விட்டு கொடுத்து அழகாய்
அன்போடு பழகி வந்த காலம் அவை...

கல்லூரியில் கால்தடம் பதித்து
இளமையின் துள்ளலில்
ஏகாந்தமாய் ,
சந்தோசத்தை மட்டுமே குறிக்கோளாய்
காலத்தை மறந்து
கவலைகளை தூக்கில் இட்டு
இனிப்பான நட்பை
திகட்ட திகட்ட பரிமாறிய காலம் அவை..

ஆளுக்கொரு இடமாய்
தூரமாய் சென்று விட போதிலும்
என்றாவது சந்திக்கும் தருணத்தில்
என் நட்பின் முகத்தில் சந்தோஷத்தை
காணும் பொழுதில்
வாழ்க்கை போராட்டத்தில்
நட்பு சற்று பின்னே தள்ளப்பட்டதை
நினைத்து கண்ணீரில்
தோழியை கட்டி தழுவுகையில்
தேவையான பிரிவு போதுமானது என்று
மீண்டும் நட்பை புதுப்பித்து
அலைபேசியில் தொடரும் காலம் அவை...

ஏதோ ஒரு தேடலில்
ஏதோ ஒன்றை தேட
அரட்டை பக்கங்கள்
அளவில்லாமல் கண்முன் காண
நட்புக்கான அரட்டை பக்கத்தை
நான் தேடி  நாடி வந்த இடம் இது..
நண்பர்கள் தமிழ் அரட்டை பக்கம்
கண்முன் பளிச்சிட
நண்பர்களின் கூட்டத்தில்
நடுவில் கண் இமைக்காமல்
அரட்டை அடிக்கும் நாட்கள் இவை..

முகம் பார்க்காத நட்பாய் இருபினும்
பெயரில் முகம் பார்த்து
பழகி வருகிறோம்...
ஒரு நாள் பாராவிடினும்
முழுமை பெறாத நாளாய்
என் நாட்கள் முடிந்து போவதை
வெறுக்கிறேன்
என் நட்பே
உன்னை நாடி  வருகிறேன்
பள்ளி கல்லூரி நட்புகளின்
வரிசையின் இன்று புதிதாய்
என் இணையத்து நண்பர்களின்
வருகை..
யாராக இருபினும்
நட்பாக இருந்தால்
நட்பாய் தந்து நட்பாய் பெறுவேன்
என்று நட்போடு நான்,..


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்